۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
1

ஃபாத்திஹா

வெற்றிக்கான வழிமுறை

Fathiha

Surah 1  ·  7 வசனங்கள்

الفاتحة
۞

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (பார்க்க 6:162)

1:1

ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ (٢)

1:1. அகிலங்கள் அனைத்தையும் படைத்து, பரிபக்குவப்படுத்தி, பரிபாலிக்கின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் மாபெரும் ஏற்பாட்டினை ஆராய்பவர்கள், (பார்க்க 3:190&191) எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனப் போற்றிப் பாராட்டுவார்கள். (பார்க்க 35:27-28)

1:2

 ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ (٣)

1:2. இத்தகைய மாபெரும் ஏற்பாடுகள் யாவும் அளவற்ற அருளையும் நிகரற்ற பேரன்பையும் கொண்ட அல்லாஹ்வின் குணநலன்களையே பிரதிபலிக்கின்றன என்பதையும் அறிவார்கள்.

1:3

 مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ (٤)

1:3. அகிலங்களில் நடைப்பெற்று வரும் எல்லா செயல்பாடுகளும் அவன் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன. (பார்க்க 43:84-85) அதன்படியே மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப பலன்களை அளிக்கும்படியே அவை செயல்படுகின்றன என்பதையும் அறிவார்கள்.

1:4

 إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ (٥)

1:4. இந்த பேருண்மையை ஏற்றுக் கொண்டவர்கள், “நாங்களும் ஏக இறைவனாகிய உன் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படவும், (பார்க்க 6:162) நீ நிர்ணயித்த கோட்பாடுகளுக்கு உட்பட்டே வாழவும் நாடுகிறோம்” என்றும்; (பார்க்க 9:33)

1:5

ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ٦

1:5. “எனவே உன் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட நேர்வழி எங்களுக்குக் கிடைத்திடச் செய்வாயாக!” என்றும்; (பார்க்க 6:161)

1:6

صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ٧

1:6. யார் உன்னுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றி சிறப்பாக வாழ்ந்தார்களோ (2:47,40:8) அந்த வழிமுறையே பின்பற்ற நாடுகிறோம். மேலும் யார் உன் வழிகாட்டுதலை ஏற்க மறுத்து தவறான வழியில் செயல்பட்டு அழிவை சந்தித்துக் கொண்டார்களே அந்த வழிமுறையை (45:23) விட்டு விலகி இருக்க நாடுகிறோம்.