بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
திடுக்கிடும் செய்தி
Qari'a
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
ٱلۡقَارِعَةُ١
101:1. ஆம். பேரிடி முழக்கங்களுடன் வெடிக்கக் கூடிய நிகழ்ச்சி!
مَا ٱلۡقَارِعَةُ٢
101:2. அதுவும் எப்படிப் பட்ட இடி முழக்கங்கள்?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ٣
101:3. இறைவனைவிட வேறு யார் தான் அதைப்பற்றி சிறந்த முறையில் தெளிவாக்க முடியும்?
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ٤
101:4. அப்படி ஒரு கால கட்டத்தில் மக்களுடைய நிலை சிறகடிக்கப்பட்ட ஈசல்கள் போல் ஆகிவிடும்.
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ٥
101:5. மலைகளைப் போல் சொத்துக்களையும் அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்கும் தலைவர்களுடைய நிலைமை தடுமாறி பஞ்சாகப் பறந்துவிடும்.
ஆனால் இந்த நிகழ்ச்சி கலவரத்தையும் குழப்பங்களையும் உண்டாக்குவதற்காக அல்ல. மாறாக ஏகாதிபத்திய ஆட்சிமுறையை நீக்கி, நியாயமான முறையில் நல்லாட்சியை ஏற்படுத்தவே இவை நிகழ்கிறது. இந்த ஆட்சியமைப்பில் ஒவ்வொருவருடைய அந்தஸ்தும் அவரவர் செய்யும் செயல்களுக்கு ஏற்றவாறு அமையும்.
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ٦
101:6. யாருடைய நற்செயல்களின் எடை கனத்திருக்கிறதோ,
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ٧
101:7. அவர்களுடைய வாழ்க்கை வசதிகள் அவர்கள் விரும்பியவாறு சந்தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும். (பார்க்க 7:8)
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ٨
101:8. யாருடைய நற்செயல்களின் எடை இலேசாக இருக்கிறதோ,
فَأُمُّهُۥ هَاوِيَةٞ٩
101:9. அவர்களுடைய நிலமை துயரங்களும் இழிவும் கொண்டதாக இருக்கும். (பார்க்க 7:9) அப்படி ஒரு நிலையில் அவர்களிடம் சிந்திக்கும் திறன்கள் ஏதுமின்றி குழப்பத்தில் இருப்பார்கள்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ١٠
101:10. அந்த துயரமும் துக்கமும் என்னவென்று உனக்குத் தெரியுமா?
نَارٌ حَامِيَةُۢ١١
101:11. ஒரு நெருப்பு குண்டத்தில் ஒருவர் விழுந்துவிட்டால் எப்படி தவிப்பாரோ, அது போன்ற ஒரு துயர்மிக்க நிலையாகும். இறை வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாழ்பவர்களின் நிலை இப்படித் தான் இருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டாமா?
அத்தியாயம் : 102 - சூர: தகாஸுர் (பேராசை)