۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
தலைப்பு வாரியான நூல்கள்

நபிமார்களின் அற்புதங்கள்

20 பகுதிகள்  ·  129 வசனங்கள்

1முன்னுரை;

திருக்குர்ஆன் உலகத்தார்க்கு வந்த அறிவுரைகளே என்று குர்ஆன் 5:101 6:90, 38:87 68:52 வாசகங்கள் அறிவிக்கின்றன. அறிவுரைகள் எனும் போது உலக மக்கள் பயன் பெறும் வகையில் இருக்க வேண்டும். மேலும் அந்த அறிவுரைகள் உலகில் நடைமுறைப்படுத்தும் வகையில் சொல்லப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஏதோ மாயாஜால மந்திரக் கதைகளைப் போல் இருந்தால் அவ்வேதம் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்காது. எனவே வேத அறிவுரைகள் உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இருத்தல் அவசியம்.

ஆனால் திருக்குர்ஆன் எனும் வேதத்தின் வாக்கிய அமைப்புகள் இரு வகைகளாக அமைந்துள்ளன. (1) நேரடி பொருள் தரும் வகையில் உள்ள வாக்கியங்கள். மற்றும் (2) இலக்கிய நயத்துடன் ஒன்றொக்கொன்று ஒப்பான பொருளைத் தரும் வாக்கிய அமைப்புகளாக இருக்கின்றன.

திருக்குர்ஆன் குடும்பவியல் சட்டத்ததைப் பற்றி பேசும் போது நேரடி பொருள் தரும் வகையில் பேசுகிறது. அதாவது அவ்வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு நேரடி பொருள் கொள்ளக் கூடியவை. ஆனால் உலக பொது விவகாரங்கள் மற்றும் அரசியல் விஷயங்களைப் பற்றி பேசும்போது அது இலக்கிய நயத்துடன் பல பொருள் தரும் வகையில் பேசுகிறது. (பார்க்க 3:7) இவ்விஷயம் அரபி வல்லுனர்களுக்கு நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் இலக்கிய நயத்துடன் பேசும் வார்த்தைகளுக்கு நேரடி பொருள் தந்து திருக்குர்ஆனை கற்பனை காவியமாக ஆக்கிவிட்டார்கள். இதை சரியாக விளக்கமளித்து கூறுவதற்காக இந்தூலை எழுதுகிறோம்.

2ஈஸா நபி இஸ்ரவேலர்களைத் திருத்தியது

وَرَسُولًا إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنِّي قَدۡ جِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ أَنِّيٓ أَخۡلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأۡكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٤٩

3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் வந்த ஈஸா நபி, “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயாமாக வந்துள்ளேன், நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை போல் உண்டாக்கி நான் அதில் ஊதுவேன், அது அல்லாஹ்வின் சட்டப்படி பறந்து செல்லும் சக்தி பெறும். குருடர்களாகவும் கேடுகெட்ட நிலையில் வாழ்பவர்களையும் சிறப்பாக்குவேன். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன், நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்களாக (நம்பிக்கையாளர்களாக) இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்றுகூறினார்).

விளக்கம்

ஈஸா நபி பனீஇஸ்ராயீல் சமூகத்தவர்க்கு வந்த இறுதி இறைத்தூதர் ஆவார்.

நடைபிணங்களாக வாழும் தம் சமூகத்தவர்களை ஜீவனுள்ள சமுதாயமாக மாற்றி அமைக்க இறைவன் புறத்திலிருந்து நற்செய்திகளைக் கொண்டு வந்துள்ளதாக கூறுவார்.

மேலும் அவர் மக்களிடம்,“இறைவனின் வழிகாட்டுதலைக் கொண்டு உங்கள் அனைவரையும் புத்துயிர் பெற வழி செய்வேன் என்பார்.

களிமண்ணாகப் புதைந்து கிடக்கும் உங்கள் சிந்தனை மற்றும் ஆற்றல்களை, இறைவழிகாட்டுதலின்படி வளர்த்து வானில் பறக்கும் சுதந்திரப் பறவைகளைப் போல் உயர் நிலைக்குக் கொண்டு வருவேன்.

உங்களுடைய நற்செயல்களைக் கொண்டு உங்கள் வாழ்வை வளமாக்குவேன்” என்பார்.

மேலும் அவர், “நீங்கள் கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்ந்து வருகிறீர்கள். அதனால் சமுதாயமே அருவருக்கத்தக்க குஷ்டத்தைப்போல் சீர்கெட்டுவிட்டது.

எனவே இறைவழிகாட்டுதலைக் கொண்டு உங்கள் அனைவரையும் நேர்வழி என்னும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவேன்|| என்பார்.

சுருங்கச்சொன்னால், “உங்களின் தீய செயல்களால் வாழ்வின் இழிநிலை என்ற மரணத்தின் பால் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். அதிலிருந்து உங்களை மீட்டு புத்துயிர் பெறச் செய்வேன்” என்பார்.

“சட்டவிரோதமாகச் செயல்படும் பதுக்கல் பேர்வழிகளைப் (Hoardings) பற்றியும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடுகளைப் பற்றியும் உங்களிடம் எடுத்துரைக்கின்றேன்.

மேலும் இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று நடந்தால் நிச்சயமாக உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பதை உணர்வீர்கள்” என்பார்.

மேற்சொன்ன விவரங்கள் யாவும் ஈஸா நபியின் தாயார் மர்யமிடம் அவருக்குப் பிறக்கும் குழந்தைப் பற்றி எடுத்துரைத்து இல்லறத்தில் ஈடுபட அறிவுறுத்திய விஷயமாகும். ஈஸா நபியும் அவ்வாறே பாடுபட்டார்.

அன்பர்களே! நேரடியாக செய்யப்பட்ட மொழியாக்கத்திற்கும் விளக்கவுரைக்கும் உள்ள வேறுபாட்டினை கவனித்துப் பாருங்கள். ஏதோ ஈஸா நபி மாய மந்திரங்கள் செய்து பறவை ஆக்கியது போலவும், இறந்தவர்களை உயிர்பித்தது போலவும் மருத்துவ ரீதியாக குருடர்களை கண் அளித்தது போலவும் மொழியாக்கத்தில் காண்பீர்கள். அதை நாம் நபிமார்கள் செய்து காட்டிய சாதனைகள் என்ற அடிப்படையில் தெளிவுரையை தந்துள்ளோம். எது சரி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மேல்கொண்டு விளக்கத்திற்கு நாம் எழுதிய ஈஸா நபியின் வாழ்க்கை வரலாறு என்ற நூலை படிக்கவும்.

3தாவூது நபியும் 99 ஆடுகளும்

இதுவும் முக்கியமாக பேசப்படுகின்ற கதைகளில் ஒன்றாகும். தாவூது நபி ஏதோ 99 மனைவிகளை வைத்திருந்ததாகவும் தன் காவலாளியின் மனைவியின் மீது ஆசைப்பட்டு 100 மனைவிகளாக ஆக்கிக்கொள்ள எண்ணிருந்ததாகவும் அப்போது இந்த வழக்கு வந்ததாகவும் மிகவும் கேவலமாக “ஷானெ நுஜூல்” என்று சொல்லி எழுதி இருக்கிறார்கள். உண்மை விவரம் என்னவென்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். எது சரி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

۞ وَهَلۡ أَتَىٰكَ نَبَؤُاْ ٱلۡخَصۡمِ إِذۡ تَسَوَّرُواْ ٱلۡمِحۡرَابَ٢١

38:21. அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது ஓய்வு எடுப்பதாற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -

விளக்கம்: இருவர், எந்த முன் அறிவுப்பும் செய்யாமல், திடீரென்று தாவூதுடைய அரண்மனை இருப்பிடத்திற்குள் சுவர் ஏறி குத்தித்து நுழைந்தனர். அங்கு நடந்த விவகாரம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

إِذۡ دَخَلُواْ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنۡهُمۡۖ قَالُواْ لَا تَخَفۡۖ خَصۡمَانِ بَغَىٰ بَعۡضُنَا عَلَىٰ بَعۡضٖ فَٱحۡكُم بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَٱهۡدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ٢٢

38:22. தாவூதிடம் நுழைந்த போது அவர், அவர்களைக் கண்டு திடுக்குற்றார். அப்போது அவர்கள், “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள். எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார். எங்கள் இருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களை செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" என்று கூறினார்கள்.

விளக்கம்: அவர்களைக் கண்ட தாவூத் நபிக்கு மனச் சஞ்சலம் ஏற்பட்டது. அப்போது அவர்கள், “நீங்கள் பயப்படாதீர்கள். எங்களுக்குள் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தாங்களிடம்தான் எங்களுக்கு சரியான நீதி கிடைக்கும். எனவே தாங்கள் தீர்ப்பளிப்பதில் தவறிழைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தாங்கள்தான் சொல்லவேண்டும்” என்றனர்.

إِنَّ هَٰذَآ أَخِي لَهُۥ تِسۡعٞ وَتِسۡعُونَ نَعۡجَةٗ وَلِيَ نَعۡجَةٞ وَٰحِدَةٞ فَقَالَ أَكۡفِلۡنِيهَا وَعَزَّنِي فِي ٱلۡخِطَابِ٢٣

38:23. (அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர். இவரிடம் தொண்ணூற் றொன்பது ஆடுகள் இருக்கின்றன.ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடு தான் இருக்கிறது. அவர் அதனையும் தனக்கு கொடுத்து விட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்."

விளக்கம்: நடந்த உண்மையை விசாரிக்கையில் அவ்விருவரில் ஒருவர், “இவர் என் உடன்பிறந்த சகோதரர் ஆவார். இவரிடம் தொண்ணுற் றொன்பது ஆடுகள் இருக்கின்றன. ஆனால் என்னிடமோ ஒரே ஒரு ஆடுதான் இருக்கிறது. இவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லி வந்தார். மக்களிடம் இதற்கு தீர்ப்புக் கேட்கும் போது, அவர்களும் இவரையே ஆதரித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் வாதத்தில் என்னை மிகைத்து நிற்கிறார்” என்று வழக்கின் உண்மை நிலையை எடுத்துரைத்தார்.

قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩ ٢٤

38:24. (அதற்கு தாவூது:)“உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம் மீது அநியாயம் செய்து விட்டார். நிச்சயமாக கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர், ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்பவர்களைத் தவிர. இத்தகையவர் சிலரே" என்று கூறினார். இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடி வேண்டுபவராக இறைவனை நோக்கினார்.

விளக்கம்

இதைக் கேட்ட தாவூத் நபி, “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது அநியாயச் செயலாகும்.

அவர் உம்மீது அநியாயம் செய்கிறார். நிச்சயமாக பங்காளிகளில் பெரும்பாலோர் இப்படித்தான் மோசம் செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.

இப்படி செயல்படுபவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள்” என்று கூறி சரியான தீர்ப்பு அளித்தார்.

ஆனால் அவர் இந்தத் வழக்கில் ஓர் உண்மை மறைந்திருப்பதை கவனித்தார்.

இந்த வழக்கு இறைவனிடமிருந்து தனக்குக் கிடைத்த அறிவிப்பு என எண்ணி, நாட்டில் அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

இப்படியாக அவர் அரசராக இருந்த போதும், இறைவனின் வழிகாட்டுதல் என்னவென்பதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறே செயல்பட்டு வந்தார்.

அதாவது தாவூது நபி, அந்த வழக்கைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தார். விவகாரம் ஆடுகள் விஷயமாக வந்த வழக்காளிகளுக்கு மட்டும் அல்ல என்பதை உணர்ந்தார். நாட்டில் எங்கும் மோசடி நடந்து வருவதையும் மக்கள் செல்வந்தர்களுக்கு ஆதரவாகவும், ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதை அறிந்துகொண்டார். அவர் அரசராக இருந்தும், இதைக் கவனத்தில் கொள்ளாதது அவருடைய தவறாகும். இந்த ஆட்டின் வழக்கு, இதை அவருக்கு உணர்த்துவதாக இருந்தது.

அயல் நாட்டவரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள படைகளைத் ஆயத்தப்படுத்திய தாவூது நபி, (27:17) உள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் விஷமிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது அவருடைய ஆட்சியில் இருந்த குறைப்பாடாகும். எனவே பொது மக்களின் நலனைப் பேணிக் காக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இன்றைக்கும் நாம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

فَغَفَرۡنَا لَهُۥ ذَٰلِكَۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ٢٥

38:25.ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம். அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய( அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.

விளக்கம்: அவ்வாறே அவர் எடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகளுக்கு நம்முடைய துணையும் ஆதரவும் இருந்து வந்தது. இப்படியாக அவர் ஆற்றிய சிறந்த பணிக்காக அவருக்கு உயர் அந்தஸ்தும், அழகிய அரண்மனை வாசமும் கிடைக்கச் செய்தோம்.

يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ ٢٦

38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் ஆட்சியாளராக ஆக்கினோம். ஆகவே மனிதர்களிடையே நேர்மையைக் கொண்டு ஆட்சி செய்யும். அன்றியும், மனோ இச்சையைப் பின்பற்றாதீர். (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுகிறாரோ, அவர்களுக்கு கேள்விக் கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

விளக்கம்

இறைவனிடமிருந்து, “தாவூதே! நிச்சயமாக நாம் உமக்கு நாட்டை ஆளும் வாய்ப்பினை வழங்கியுள்ளோம்.

எனவே மக்களிடைய நியாயமான தீர்ப்புகள் கிடைக்கும்படி வழி செய். இப்படியாக நியாயமான முறையில் ஆட்சி செய்து வா.

அன்றியும் மக்களின் விருப்பங்களுக்கு ஒருபோதும் இணங்கி செயல்படாதீர். ஏனெனில் அவர்கள் தம் மனோ இச்சைக்கு அடிபணிந்து செயல்படுகிறார்கள்.

எனவே அவை அல்லாஹ்வின் பாதையைவிட்டு உம்மை திசை திருப்பி விடும்.

யார் அல்லாஹ்வின் இந்த ஆட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு சரியான தண்டனை அளிக்கப்படும் என்று மக்களுக்கு எச்சரிப்பீராக.

இதையும் மீறி அநியாயச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கொடிய வேதனையுண்டு என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்”

இதுபோன்ற கட்டளைகள் அடங்கிய ஜபூர் எனும் வேதம் அவருக்கு அளிக்கப்பட்டது. (பார்க்க 17:55)

அன்பர்களே! தாவூத் நபியின் ஆட்சியில் இருந்த குறைபாடுகளை நீக்க வந்த வழக்கு விஷயத்தை திசை திருப்பி தாவூது நபியின் மனைவிமார்கள் என்ற விஷயத்தை திணித்து பொருள் தந்தது சரியா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

4சுலைமான் நபியின் சாம்ராஜ்ஜியம்

சுலைமான் நபியின் மறைவுக்குப் பின் ஆட்சி பொறுப்பு அவருடைய மகன் ராஹோபனுக்கு கிடைத்தது. ஆனால் அவனோ தன் தந்தை பாட்டனாரைப் போல் இல்லாமல் எதற்கும் பயன்படாத உதவாக்கரையாக இருந்தான். (பார்க்க 38:34) எனவே சுலைமான் நபியின் பொற்கால சாம்ராஜ்ஜியம் அஸ்தமிக்க ஆரம்பித்தது. இதைப் பற்றி பேசும் 34:14 வசனத்தை நேரடி மொழியாக்கம் செய்து எப்படி எல்லாம் குழப்பி இருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

فَلَمَّا قَضَيۡنَا عَلَيۡهِ ٱلۡمَوۡتَ مَا دَلَّهُمۡ عَلَىٰ مَوۡتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلۡأَرۡضِ تَأۡكُلُ مِنسَأَتَهُۥۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلۡجِنُّ أَن لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٱلۡغَيۡبَ مَا لَبِثُواْ فِي ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ ١٤

34:14. அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்தத்) தடியை அரித்துவிட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை, அவர் கீழே விழவே, "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவு தரும் வேதனையில் தாங்கள் தரிக்கப்பட்டி ருந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

விளக்கம்

சுலைமான் நபியின் மறைவுக்குப்பின், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள், அவர் நடத்தி வந்த அற்புதமான நேர்த்தியான, ஆட்சியின் சிறப்பைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

இதனால் அவருடைய ஆட்சியின் புகழ் செல்லறிக்க ஆரம்பித்தது.

கோட்டைக்குள் நடக்கின்ற அநியாய அக்கிரமச் செயல்களைப் பற்றி, அதைப் பாதுகாத்து வந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த காவலாளிகளுக்கு நீண்ட நாள் வரையில் தெரியாமலே இருந்தது.

அந்த ஆட்சியாளர்கள் செய்த அக்கிரமங்களினால் நாட்டில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்தன.

இப்படியாக சுலைமான் நபியின் வாழ்புகழ் சாம்ராஜ்யம் முற்றிலுமாக சாய்ந்து விட்டது.

அப்போதுதான் கோட்டைக்குள் நடக்கின்ற விஷயங்களைப் பற்றி அந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த காவலாளிகளுக்குத் தெரிய வந்தது.

எனவே அவர்கள் மிகவும் வருத்தத்துடன்,“நாங்கள் கோட்டைக்குள் நடக்கின்ற விஷயங்களை இதற்கு முன்பே அறிந்திருந்தால், கோட்டையை பாதுகாப்பதில் இந்த அளவுக்கு நம்முடைய கடின உழைப்புகள் வீணாகி இருக்காதே.

நாம் இழிவுக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்க மாட்டோமே” என்று புலம்பலானார்கள்.

இதுதான் பேரசர் சுலைமான் நபியின் ஆட்சியின் புகழும், அதன் வீழ்ச்சியின் காரணங்களும் ஆகும். மேலும் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆட்சி பீடத்தில் நடக்கின்ற விஷயங்களைப் பற்றி அந்த “ஜின்”களுக்குத் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது அந்த “ஜின்”களுக்கு மறைவான விஷயங்கள் எதுவும் தெரியாது. ஆனால் நம் நாட்டிலுள்ள மாந்தரிகர்களைப் பாருங்கள். அவர்கள் ஜின்களை அடக்கி வைத்துக் கொண்டு, ஏதேதோ மாய மந்திரங்களை செய்து மக்களின் குறைகளை தீர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனர். இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். எனவேதான் “ஜின்”கள் என்றால் மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் அல்லது பழங்குடியினர் என்று பொருள் தருகிறோம். மேலும் நாம் தந்த விளக்கவுரைக்கும் மொழிபெயர்ப்பையும் கவனித்துப் பாருகள். எது சரி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

5இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் எறிந்தது உண்மையா?

இப்ராஹீம் நபி சிலை வணக்க வழிபாட்டிற்கு எதிரராக சில நடவடிக்கைகளை எடுத்து வந்ததைத் தொடர்ந்து, அவ்வூர் மக்கள் கொதித்துப் போனார்கள். இந்த சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆனில் இவ்வாறு வருகிறது.

قَالُواْ حَرِّقُوهُ وَٱنصُرُوٓاْ ءَالِهَتَكُمۡ إِن كُنتُمۡ فَٰعِلِينَ٦٨

21:68 (இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள், (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

விளக்கம்: “இவரை நீங்கள் ஏதாவது செய்ய நாடினால் இவரைப் நெருப்புக் குண்டத்தில் போட்டு எரித்து விடுங்கள். இப்படியாக நீங்கள் உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஆவசேமாகப் பேச ஆரம்பித்தனர்.

அன்பர்களே! தெய்வங்கள் மனிதனுக்கு உதவிச் செய்யப் போய், அந்த தெய்வங்களுக்கு உதவி செய்யுமாறு மக்களை ஏவுவதை கவனித்தீர்களா? இதுதான் அந்தக் கற்பனைத் தெய்வங்களின் உண்மை நிலையாகும். அவர்களிடையே நிலவி வந்த ஆவேசத் “தீ” அதிகரித்துக் கொண்டே சென்றது. எனவே அங்கு இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணி அவர் அவ்வூரைவிட்டு ஹிஜ்ரத் செய்து பாலஸ்தீன நாட்டிற்குச் சென்று விட்டார். (பார்க்க 37:98) எனவே மக்களின் கோபத் “தீ”யும் அடங்கி விட்டது.

قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ٦٩

21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும்é ஆகிவிடு!" என்றுநாம் கூறினோம்.

விளக்கம்: இப்படியாக இப்ராஹீமுக்கு எதிராக எழுந்த ஆவேசத் “தீ”, இறைவனின் நியதிப்படி தணிந்து விட்டது. அங்கிருந்து வெளியேறி அவர் சென்ற இடமும் (பாலஸ்தீனம்) அவருக்கு குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் இருந்தது.

وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ٧٠

21:70. மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!

விளக்கம்: மேலும் அவரைத் தீர்த்துக்கட்ட சதிசெய்யவே நாடினார்கள். ஆனால் அவர் ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டதால், அவர்களுடைய சதி திட்டங்கள் யாவும் வீணாகிப் போய்விட்டன. (மேலும் பார்க்க 29:26)

அதாவது அவரை உண்மையிலேயே நெருப்பில் போடவில்லை. அவர்கள் சதிதிட்டத்தைத் தான் தீட்டினார்கள் என்பதும் அது பலிக்கவில்லை என்பதும் இதிலிருந்து புலனாகிறது.

وَنَجَّيۡنَٰهُ وَلُوطًا إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا لِلۡعَٰلَمِينَ٧١

21:71. இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன் லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள பூமியாக நாம் ஆக்கியுள்ள இடத்தில் ஈடேற்றம் பெறச் செய்தோம்.

விளக்கம்: இப்படியாக அவரையும், அவருடைய சகோதரர் மகன் லூத்தையும் அந்த பேராபத்திலிருந்துக் காப்பாற்றி எல்லா வளங்களையும் பெற்று, சிறப்பாக விளங்கிய பாலஸ்தீன நாட்டிற்குச் செல்ல வழி செய்தோம். மேலும் அந்த நாடு அனைவருக்கும் பாக்கிய மிக்க நாடாக இருந்தது.

மேலும் அவரை உண்மையிலேயே நெருப்பில் எறிந்த பின் அவர் அதிலிருந்து மீண்டு வந்திருந்தால், அம்மக்கள் அந்த அற்புதக் காட்சியைப் பார்த்து, அனைவரும் அவருடைய காலடியில் விழுந்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவருடைய ஒன்று விட்ட சகோதரர் லூத் நபி மட்டும் ஈமான் கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே அல்லாஹ் தணித்தது மக்களிடையே இருந்த “ஆவேசத் தீ” என்பதுதான் எதார்த்தமான உண்மை ஆகும். (பார்க்க 37:91-100&29:23-26)

மாறாக அல்லாஹ் உருவாக்கிய நெருப்பு அல்ல. காரணம் அல்லாஹ்வின் சுன்னத்தில் – அதாவது நடைமுறைப்படுத்திய வழிமுறைகளில் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள் என்று திருக்குர்ஆன் 17:78 30:30 33:38 33:62 48:23 வாசங்கள் அறிவிக்கின்றன. மேலும், இதையே அல்லாஹ்வின் கலீமா என்றும் அறிவிக்கின்றது. அதாவது கலீமா (வாக்குகளில்) எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்கள் என்றும் அறிவிக்கின்றது. (பார்க்க - 10:33,17:27,40:6) எனவே ஒரேஒரு முறை ஒரேஒரு நபிக்காக அல்லாஹ் தெருப்பின் தன்மையை மாற்றிவிட்டதாக சொல்வது நடந்த வரலாற்றை கற்பனை காவியமாக மாற்றத்தான்

.

6மூஸா நபி தடியை எறிந்து பாம்பான கதை

இதுவும் ஒரு முக்கியமான விஷயமாகும். மூஸா நபி அவர்கள் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டி ஃபிர்அவுனை மிரள வைத்துவிட்டதாக ஆலிம்கள் வாராந்திர சொற்பொழிவில் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வார்கள், ஆனால் நடந்த உண்மை என்ன என்பதை நாம் உங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.

وَلَقَدۡ أَرَيۡنَٰهُ ءَايَٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَىٰ٥٦

20:56. நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம், ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்.

விளக்கம்: மூஸா நபி மூலமாக ஃபிர்அவ்னுக்கு ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலை எடுத்துரைத்தும், அவை எல்லாம் வெத்துப் பேச்சு என கூறி அவற்றை எற்க மறுத்துவிட்டான்.

قَالَ أَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ أَرۡضِنَا بِسِحۡرِكَ يَٰمُوسَىٰ٥٧

20:57.“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விடடு வெளியேற்று வதற்காகவா நம்மிடம் வந்தீர்?" என்று கூறினான்.

சூனியத்தைக் கொண்டு யாராவது ஓர் அரசனை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியுமா? இப்படி எல்லாம் மொழிபெயர்த்தது நியாயமா?

விளக்கம்: மாறாக அவன் மூஸா நபியைப் பார்த்து,“நீர் உன் வசீகரப் பேச்சைக் கொண்டு பொய்யான மார்க்கத்தை எடுத்துரைத்து, நாட்டை விட்டு எங்களை வெறியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று பலக் கோணங்களில் ஆதங்கத்துடன் கேட்க ஆரம்பித்தான்.

فَلَنَأۡتِيَنَّكَ بِسِحۡرٖ مِّثۡلِهِۦ فَٱجۡعَلۡ بَيۡنَنَا وَبَيۡنَكَ مَوۡعِدٗا لَّا نُخۡلِفُهُۥ نَحۡنُ وَلَآ أَنتَ مَكَانٗا سُوٗى٥٨

20:58.“அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம், ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாத படி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப்பாட்டை (எல்லோரும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில்ஏற்படுத்தும் (என்றான்).

இதை படித்தால் ஏதோ சூனியக்காரர்களுக்கு இடையே போட்டி தடத்த ஏற்பாடு செய்யப்பட்டது என தோன்றுகிறது. ஆக படிப்பவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்து இருக்கிறார்கள் என்றே புலனாகிறது.

விளக்கம்: “அவ்வாறாயின் இதேப் போன்று நாங்களும் நம் மதகுருமார்களை அழைத்து வந்து, உமக்குத் தக்க பதிலடி தருவோம். எனவே இந்தக் கருத்துப் போட்டியை வைத்துக் கொள்ள ஒருநாளை குறித்துச் சொல்லுங்கள். இதில் நானோ அல்லது நீரோ மாற்றம் செய்யாதவாறு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எனவே மக்கள் அனைவரும் திரளாக வந்து சேரும் ஒரு நாளை குறிப்பிட்டுச் சொல்லுங்கள்” என்றான்.

قَالَ مَوۡعِدُكُمۡ يَوۡمُ ٱلزِّينَةِ وَأَن يُحۡشَرَ ٱلنَّاسُ ضُحٗى ٥٩

20:59.“யவ்முஜ் ஸீனத்" (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற்பகல்) நேரமுமாக இருக்கட்டும்" என்று சொன்னார்.

விளக்கம்:அதற்கு மூஸா நபி, அழகு அலங்காரங்களுடன் அனைவரும் திரளாக ஒன்றுகூடும் திருநாளில் இந்த கருத்துப் போட்டியை வைத்துக் கொள்ளலாம் என்று அந்த நாளைக் குறித்துக் கொடுத்தார். அதற்கான முற்பகல் நேரமும் நிர்ணயிக்கப்பட்டது.

فَتَوَلَّىٰ فِرۡعَوۡنُ فَجَمَعَ كَيۡدَهُۥ ثُمَّ أَتَىٰ٦٠

20:60. அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, மத குருமார்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.

விளக்கம்:அதன்படியே ஃபிர்அவுனும் நாட்டில் பேச்சுத் திறமைமிக்க மதகுருமார்களை வரச் சொல்லி கட்டளைப் பிறப்பித்தான் (பார்க்க 7:111). அவ்வாறே அவர்களும் குறித்த நாளில் வந்து விட்டனர். அவர்களை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு போட்டியின் இடத்திற்கு ஃபிர்அவ்னும் வந்து சேர்ந்தான்.

قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ٦١

20:61.(அப்பொழுது) மூஸா மதகுரமார்களிடம், “உங்களுக்குக் கேடு தான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்,எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறுகெட்டு) அழிந்து விட்டான்" என்று கூறினார்.

விளக்கம்: அந்த கருத்துப் போட்டி நடைபெறுவதற்கு முன் மதகுருமார்களை மூஸா நபி சந்தித்து, “அல்லாஹ்வின் மீது பொய்யான விஷயங்களை இட்டுக்கட்டிக் கூறாதீர்கள். அவ்வாறு செய்பவர்களுக்குக் கேடுதான் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு பேசுங்கள். இல்லையென்றால் இறைவனின் நியதிப்படி நீங்கள் பல வேதனைகளுக்கு ஆளாவீர்கள். எந்தச் சமுதாயத்தில் இறைவனைப் பற்றி தவறான கற்பனைக் கதைகள் கூறப்பட்டு வந்ததோ, அது அழிவைச் சந்தித்தே இருக்கின்றன” என எச்சரித்தார்.

فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ٦٢

20:62. மத குருமார்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து (த்தங்களிடேயே) விவாதித்து (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.

விளக்கம்: அதைத் தொடர்ந்து மதகுருமார்களும் ஒன்று கூடி, தங்களுடைய அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தங்களுக்குள் கலந்தாலோசித்துக் கொண்டனர். அதன் பின்னரே அவர்கள் விவாதத்திற்கு ஆயத்தமானார்கள்.

قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ ٦٣

20:63. (மாகுருமார்கள் மக்களை நோக்கி:) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கி விடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.

கவனித்தீர்களா? இங்கேயும் சூனியம் என்று பொருள் தந்துள்ளார்கள். சூனியத்தைக் கொண்டு மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடியுமா? ஆச்சரியமே! விளக்கம் என்னவென்பதை கவனியுங்கள்.

விளக்கம்: அதன்பின் மதகுருமார்கள், திரளாக கூடியிருந்த மக்களைப் பார்த்து,“நிச்சயமாக இவ்விருவரும் தம் வசீகரப் பேச்சுத் திறமையால் உங்கள் அனைவரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பேச்சைக் கொண்டு அவர்கள் உங்களை நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்கள் மார்க்கப் பாதையை போக்கிவிடவும் விரும்பு கிறார்கள்” என்று கூறினார்கள்.

فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ ٦٤

20:64. ஆகவே உங்கள் திட்டத்ததை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள், இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர் தாம் வெற்றியடைவார்" (என்றும் கூறினர்)

விளக்கம்: அதன் பின் அவர்கள் விவாதத்திற்கு வந்த மற்ற குருமார்களைப் நோக்கி,“இன்றைய தினம் வேற்றுமை பகைகளை ஒதுக்கிவிட்டு, அனைவரும் ஓரணியாக நின்று, நம் அனைவருக்கும் பகைவராய் இருக்கும் இவர்களை முறியடிக்கத் தயாராகி விடுங்கள். இன்றைய தினம் வாதத்தில் யாருடைய கை மேலோங்கி நிற்கிறதோ, அவர்தாம் வெற்றியாளர் ஆவார்” என்று முழக்கமிட்டனர்.

قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ٦٥

20:65.“மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?" என்று (மதகுருமார்கள்) கேட்டனர்.

இங்கிருந்து எறிகின்ற விஷயம் ஆரம்பமாகிறது. இது ஒரு முற்றிலும் தவறான மொழியாக்கம் ஆகும். உண்மை என்னவென்பதை கவனியுங்கள்.

விளக்கம்: அதன்பின் விவாதத்தை ஆரம்பித்து வைக்க மூஸா நபியிடம் அவர்கள், “நீர் முதலில் வாதத்தை தொடங்குகிறீரா அல்லது நாங்கள் முதலில் தொடங்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ٦٦

20:66. அதற்கவர்: " அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.

அன்பர்களே! கவனித்தீர்களா? மத குருமார்கள் வைத்திருந்த கயிறுகளையும் தடிகளையும் சூனியத்தால் பாம்பாக்கியதாக பொருள் தந்துள்ளார்கள்.

மார்க்க உண்மைகளை ஃபிர்அவுனுக்கும் அவனுடைய அவைத் தலைவர்களுக்கும் எடுத்துரைத்து அவர்களை நேர்வழிப் படுத்துவதற்காக வந்ந மூஸா நபி மற்றும் அவருடைய சகோதரர் ஹாரூன் நபி முன்பாக மத குருமார்கள் என்ன செய்து காட்டியதாக எழுதியுள்ளார்கள் என்பதை கவனியுங்கள்.

` மார்க்க சம்பந்தப்பட்ட கருத்துப் போட்டியை திசைமாற்றி பாம்பாட்டி போட்டி என்று மாற்றியது விந்தையிலும் விந்தையே! அதன் விளக்கம் என்ன என்பதையும் கவனியுங்கள்.

விளக்கம்: அதற்கு அவர், “அவ்வாறல்ல. நீங்கள் உங்கள் வாதத்தை முதலில் எடுத்துரையுங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஒவ்வொருவராகத் தம் கைவசம் இருந்த மத சித்தாந்தங்களை சமர்ப்பித்தனர். அவர்கள் தம் பேச்சுத் திறமையால் அவற்றில் உண்மை இருப்பது போல் எடுத்துரைத்தனர். அவை மக்களைக் கவர்ந்துவிடுவது போல் மூஸா நபிக்குத் தோன்றிற்று.

فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةٗ مُّوسَىٰ٦٧

20:67. அப்போது, மூஸா தம் மனத்தில் அச்சம் கொண்டார்.

விளக்கம்:எனவே மூசா நபிக்கும் மனதில் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது. (மேலும பார்க்க 7:116)

قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ٦٨

20:68.“(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!" என்று நாம் சொன்னோம்.

விளக்கம்: அப்போது, “மூசாவே! நீர் பயப்படாதீர். நிச்சயமாக நீ சமர்ப்பிக்கும் மார்க்க விஷயங்களே மேலோங்கி நிற்கும்” என்று இறைவனிடமிருந்து ஆறுதல் செய்தி வந்தது.

وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرٖۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ٦٩

20:69.“இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும், அவர்கள் செய்த (பேச்சுகள்) யாவற்றையும் அது விழுங்கி விடும், அவர்கள் செய்தது பொய்யர்களின் சூழ்ச்சியே ஆகும், ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான்" (என்றும் கூறினோம்).

என்ன இது? மத குருமார்கள் சூனியம் செய்தால் அது தகாது. நபிமாரகள் செய்தால் அது தகுமா? அவர்கள் வெற்றி பெற மாட்டார்களா? இதுதான் வேதமா? உலக பொதுமறையாம் குர்ஆன் இப்படித்தான் முன்னுக்குப் பின் முரணாக பேசுமா? உலமாக்கள் ஏன் இத்தகைய மொழியாக்கத்தை தந்திருக்க வேண்டும்? இவ்வாசகத்தின் விளக்கம் என்ன என்பதை கவனியுங்கள்.

விளக்கம்:“எனவே உன் கைவசம் இருக்கும் மார்க்க உண்மைகளை அவர்கள் முன் சமர்ப்பியும். அவர்கள் சமர்ப்பித்த மார்க்க விஷயங்களை எல்லாம் முறியடித்து நீயே மேலோங்கியவனாக வருவாய். ஏனெனில் அவர்கள் எடுத்துக் காட்டிய விஷயங்கள் யாவும் வெறும் யூகங்களே ஆகும். நீ இறைவழிகாட்டுதலை ஆதாரப்பூர்வமாக அவர்கள் மனதில் பளிச்சிடும் படி எடுத்துரை. அவர்களால் உன்னை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது.” என்று மூசா நபிக்கு இறைவன் ஊக்கமளித்தான் (மேலும் பார்க்க 7:117-118).

அவ்வாறே அவரும்; இறைவனின் மார்க்க உண்மைகளை அவர்கள் முன் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைக்கவே, அவர்களுடைய மதப் போதனைகளின் சாயம் வெளுத்து விட்டது. மூஸா நபி மார்க்க உண்மைகளை எடுத்துரைத்து வெற்றிப் பெற்றார்.

فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ٧٠

20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) மதகுருமார்கள் ஸ{ஜுது செய்தவர்களாக வீழ்த்தப் பட்டு “ஹாரூனுடையவும் மூஸாவுடையவும் இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்" என்று கூறினார்கள்.

விளக்கம்: அவருடைய மார்க்க உண்மைகளைக் கேட்ட மதகுருமார்கள் அனைவரும் மூஸா நபிக்கு தலைவணங்கி, அவருடைய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதாக வெளிப்படையாக அறிவித்து விட்டனர். “ஹாரூன் மற்றும் மூஸாவுடைய இறைவனின் வழிகாட்டுதலை நாங்களும் மனமாற ஏற்றுக்கொள்கிறோம்” என்று அறிவித்தனர்.

அதற்கு ஃபிர்அவுன் மன்னனின் எதிர்வினை என்னவாயிற்று என்பதை கவனியுங்கள்.

قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَۖ فَلَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ فِي جُذُوعِ ٱلنَّخۡلِ وَلَتَعۡلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابٗا وَأَبۡقَىٰ٧١

20:71.“நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது), எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களை கழுவேற்றுவேன், மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார்? அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று (ஃபிர்அவ்ன்)கூறினான்.

இங்கு ஒரு விஷயத்தை கவனித்துப் பாருங்கள். சூனிய வித்தைகளுக்கும் ஈமான் கொள்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? அதற்கு ஏன் அவ்வளவு ஏன் ஆவேசம் அடையவேண்டும்? அதன் விளக்கத்தை கவனியுங்கள்.

விளக்கம்: இதைக் கவனித்து வந்த ஃபிர்அவ்ன் மன்னனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. அவன், “என் அனுமதி எதுவும் பெறாமலேயே நீங்கள் அனைவருமே அவருடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டீர்களா? நிச்சயமாக அவர் பேச்சில் மயக்கும் மகாசூரன் என்றே நினைக்கிறேன். நீங்கள் என் வழிக்கு வரவில்லை என்றால் நான் உங்களை மாறுகை மாறுகால் வாங்கி பேரித்த மரத்தில் உங்களைத் தொங்க விட்டுவிடுவேன். இவ்வாறு வேதனை அளிப்பதில் கடுமையானவன் நானா அல்லது மூசாவின் இறைவனா என்பதை தெரிந்து கொள்வீர்கள்” என கோபக் கனலில் கத்தினான்.

قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ٧٢

20:72. (மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம், ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கின்றாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துக்கொள், நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்" என்று கூறினர்.

\ கவனித்தீர்களா? எங்களுக்கு வந்த தெளிவான அத்தாட்சி என்கிறார்கள். அதென்ன கயிறு போட்டு பாம்பாக்கி அவர்களுடைய பாம்புகளை விழுங்கியது அத்தாட்சியா? விளக்கத்தை படியுங்கள்.

விளக்கம்: அதற்கு அந்த மதகுருமார்கள், “எங்களைப் படைத்த எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான ஆதாரங்களை விடவும், எங்களைப் படைத்தவனை விட உன்னை மேலானவனாக நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆகவே நீ என்ன தீர்ப்பு செய்ய இருக்கிறாயோ அதன்படியே செய்துகொள். நீ தீர்ப்பு செய்வதெல்லாம் நிகழ்கால இவ்வுலக வாழ்வில்தான் என்பதை தெரிந்துக்கொள்” என்று பதிலளித்து விட்டனர்.

மறுமை வாழ்வில் உனக்கு எந்தப் பாக்கியமும் கிடைக்காது என்பதை நாங்கள் மூசா நபி மூலம் தெரிந்துக் கொண்டோம்.

إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغۡفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكۡرَهۡتَنَا عَلَيۡهِ مِنَ ٱلسِّحۡرِۗ وَٱللَّهُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ٧٣

20:73. “எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) போதனைகளையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம், மேலும், அல்லாஹ்தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்கள்).

கவனித்தீர்களா? தடியை போட்டு பாம்பாக்கி காட்டி இந்த மார்க்க உண்மைகளை அந்த மத குருமார்கள் தெரிந்துக் கொண்டிருக்க முடியுமா? எனவேதான் மக்கள் முன்பு நடந்தது மார்க்க கருத்துப் போட்டியே என்று திரம் பட அறிவிக்கிறோம். மாயாஜால வித்தை அறவே கிடையாது.

விளக்கம்: மேலும் அவர்கள் ஃபிர்அவ்னிடம், “எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டோம். இதுவரையில் நாங்கள் போதித்து வந்த தவறான மதப் பிரச்சாரங்களால் ஏற்பட்ட தீய விளைவுகளிலிருந்து நிவாரணம் பெற எங்கள் இறைவனிடமே பாதுகாப்புத் தேடிக்கொள்கிறோம். அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் அவனுடைய செயல் திட்டங்களே மிகவும் மேலானவையாக இருக்கின்றன என்பதை நாம் மூஸா நபி மூலம் அறிந்துக் கொண்டோம்” என்று மிகவும் பணிவோடு கூறினர்.

إِنَّهُۥ مَن يَأۡتِ رَبَّهُۥ مُجۡرِمٗا فَإِنَّ لَهُۥ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ٧٤

20:74. நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது, அதில் அவன் மரிக்கவும் மாட்டான், வாழவும் மாட்டான்.

விளக்கம்: மேலும் அவர்கள் ஃபிர்அவ்னிடம், “நிச்சயமாக எவன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக காத்திருக்கிறது. அதில் அவன் சாகவும் மாட்டான்; வாழவும் மாட்டான் என்பதையும் நாங்கள் மூஸா நபி மூலமாக அறிந்துக் கொண்டோம்” என்றனர்.

وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ٧٥

20:75. ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.

விளக்கம்: மேலும் அவர்கள், “எந்த சமுதாயத்தவர்கள் இறைவழிகாட்டுதலை ஏற்று, ஆக்கப்பூர்வமான சமூக நலத்திட்டங்களைத் தீட்டி உழைத்து வருகிறார்களோ, அவர்களுக்கு உயர்வும் கண்ணியமும் நிச்சயம் உண்டு என்பதையும்”

جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ ٧٦

20:76. (அத்தகையவருக்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில்அவர் என்றென்றும் வசிப்பர், இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்)கூலியாகும்.

விளக்கம்: “எதுவரையில் அவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்களோ, அதுவரையில் அவர்களுக்கு சுவனத்திற்கு ஒப்பான சந்தோஷமான பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும். அங்கு அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ப தாராளமான பொருளாதார வசதிகள் கொண்ட சமுதாயமாக விளங்கும். இதுவே தன்நலமற்ற தூய எண்ணங்களுடன் செயல்படும் சமூகத்தவர்களுக்கு கிடைக்கும் சன்மானமாகும் என்பதையும் நாங்கள் மூஸா நபி மூலம் அறிந்துக் கொண்டோம்” என்றும் ஃபிர்அவ்னிடம் விளக்கமளித்து அவன் அறிவித்த தண்டனையைப் பொருட்படுத்தவில்லை.

சிந்தனையாளர்களே! மூஸா நபி அந்த மதகுருமார்களுக்கு எப்படி எல்லாம் மார்க்க உண்மைகளை விரிவாக எடுத்துரைத்து அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள வைத்துள்ளார் என்பதை கவனித்தீர்களா? கைத்தடியை கீழே எறிந்து பாம்பாக்கி, இந்த மார்க்க உண்மைகளை விளக்க முடியுமா? இந்தக் கருத்துப் போட்டி நடப்பதற்கு முன் அவர்கள் ஃபிர்அவுனிடம் கேட்ட சன்மானம் எங்கே? (பார்க்க 7:113-114) இந்தப் போட்டிக்குப் பின் அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஏற்பட்ட அசைக்க முடியாத ஈமான் எங்கே? தெளிவாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயமே!!

நாம் ஏற்கனவே அறிவித்தது போல் உலக பொது விவகாரங்கள் மற்றும் அரசியல் விஷயத்தில் குர்ஆன் இலக்கிய நயத்துடன் பேசுகிறது. அவ்வசனங்களை நேரடி பொருள் கொள்வதால் வரலாறு கற்பனை காவியமாக மாறுகிறது. இதைத் தான் நாம் குர்ஆனை மஹ்ஜூரா (25:30)ஆக்கியதாக குற்றம் சுமத்துகிறோம்.

7நூஹ் நபியின் ஆயுட்காலம் 950 ஆண்டுகள்?

அன்பர்களே! மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 ஆண்டுகளாகும்.

சிலர் அதிக பட்சமாக 100 முதல் 110 ஆண்டுகள் வரையில் உயிர் வாழ முடியும். ஆனால் நூஹ் நபி மட்டும் 950 ஆண்டுகள் வரை ஜீவித்து இருந்ததாக ஆலிம்கள் சொல்லி இதுவும் ஒரு அற்புதம் என்கிறார்கள். ஆனால் இது அல்லாஹ் நிர்ணயித்துள்ள இயற்கை சட்ட விதிமுறைக்கு எதிராக இருப்பதை நாம் காண்கின்றோம். அது மட்டுமின்றி ஆதம் (என்ற கற்பனையில் வடிந்த) நபி 2000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இப்றாஹீம் நபி 1500 ஆண்டுகள் வாழ்ந்தாரகள் என்று கதைகளை ஜோடித்து சொல்கிறார்கள். வாருங்கள் திருக்குர்ஆன் என்ன அறிவிக்கின்றது என்பதை கவனிப்போம்.

وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَلَبِثَ فِيهِمۡ أَلۡفَ سَنَةٍ إِلَّا خَمۡسِينَ عَامٗا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمۡ ظَٰلِمُونَ١٤

29:14. மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களை புயல் காற்றில் சிக்கிக் கொண்டது.

இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள். நூஹ் நபி 950 ஆண்டுகள் வரை அச்சமுதாயத்தினரிடையே தங்கி இருந்ததாக அறிவிக்கிறது. அவர் அத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக சொல்லவில்லை. எனவே நூஹ் நபி கொண்டுவந்த கொள்கை கொட்பாடுகள் அத்தனை ஆண்டுகள் ஜீவித்து இருந்ததாக பொருள்படுகிறது. அவர் கொண்டு வந்த கொள்கை கோட்பாடுகளை முற்றிலுமாக விட்டு விட்டார்கள்.

நூஹ் நபியை தொடர்ந்து ஆது கூட்டத்தார் என்ற பெயரில் சாம்ராஜ்ஜியம் நிலைபெற்றது. அவர்களை திருத்த ஹூது நபி வந்தார். (7:65) நூஹ் நபி சமூகத்தாருக்குப் பின் ஆட்சி அதீகாரத்தில் இவர்கள் இருந்ததாக 7;69 வசனம் உறுதிப் படுத்துகிறது. என வே இந்த வாசகத்தின் விளக்கம் இவ்வாறு வரும்.

விளக்கம்.: அதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களிடையே நூஹ் நபியின் போதனைகள் தொள்ளாயிறத்து ஐம்பது ஆண்டுகள் வரையில் ஜீவித்து இருந்தது. (i.e. Noha’s Era was 950 Years) பிற்காலத்தில் “ஆது” சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தனர். (7:69) அவர்கள் அநியாக்காரர்களாக மாறிவிட்டனர். இறுதியில் பேரொலியுடன் கூடிய புயல் காற்றில் சிக்கி அழிவை சந்தித்துக் கொண்டனர். (பார்க்க 69:6&7)

அன்பர்களே! நாமும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இன்றைக்கும் ஜீவித்து இருப்பது போல் அவருடைய போதனைகளை அவ்வப்போது எடுத்துரைக்கிறோம். அந்த வகையில் அவர் 1400 ஆண்டுகளாக ஜீவித்து இருப்பதாக பொருளாகும் அல்லவா? அது மட்டுமின்றி ஃகாய நாள் வரையிலும் அவர் ஜீவித்து இருப்பார் என்பதை தான் அவரை இறுதி நபி என்று திருக்குர்ஆன் 33;40 வாசகம் அறிவிக்கின்றது.

8குகைவாசிகளின் ஆயுட்காலம்?

நூஹ் நபியைப் போலவே திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள குகைவாசிகளைப் பற்றியும் விநோதமான முறையில் கதை சொல்கிறார்கள். பத்ரஸ் என்னும் பிரதேசத்தில் – ஈராக் நாட்டின் மேற்கு பகுதியில் (தற்போது ஜோர்டான் நாடு) கி.பி. 250 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த அஸ்ஹாபுல் கஹஃப் அல்லது அஸ்ஹாபுர் ரஃகீம் என்பவர்களைப் பற்றிய வரலாறுதான் இது.

அந்த குகைவாசிகளை விசித்திர பிறவிகள் என்று எண்ணிக் கொண்டீர்களா என்று திருக்குர்ஆன் எடுத்த எடுப்பிலேயே (18:9) சந்தேகத்தை நிவர்த்தி செய்து விடுகிறது. அதாவது மக்கள் பேசுவது போல் அவர்கள் விசித்திர பிறவிகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதாவது சில இளைஞர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை எடுத்துரைத்து நாட்டில் இருந்த சீர்கேடுகளை நீக்க முற்பட்ட போது (18:14&15) மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. (18:16) அதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க மறைவிடத்தை தேடி இறுதியில் ஒரு விசாலமான குகைக்குள் தஞ்சம் புகுந்தனர். (18:16) அதன் நுழைவாயில் குறுகலாகவும் உட்புறத்தில் எல்லா வாழ்வாதார வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.(18:10)

இவ்வாறு அவர்கள் தஞ்சமடைந்து தற்காப்பு பயிற்சிகளை மேற் கொண்டனர். அதன் பின் நாட்டின் நடப்பு என்ன என்பதை கண்டறிய அவர்களில் ஓரிருவரை வெளியே வர தீர்மானித்தனர். (18:19) அவர்களை அடையாளம் கொள்ளாதவாறு கவனமாக இருக்கும் படி அறிவுருத்தபடுகின்றனர் (18:20) எனவே அவர்கள் சில ஆண்டுகளே இருந்ததாக புலனாகிறது.

அனால் நாட்டின் நிலைமை மீகவும் மோசமாக ஆகியிருந்ததால் இவர்களை மக்கள் எதிர்பார்த்து காத்து கிடந்தனர். மக்களுக்கு உண்மை விளங்கிய பின் அவர்களை ஆதரித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்று சிறந்த முறையிலை ஆட்சி செய்தனர். சில காலத்தில் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் நினைவு சின்னமாக அழகான ஆலயத்தை கட்டி மகிழ்ந்தனர். (பார்க்க 18:21)

காலம் செல்ல அந்த குகைவாசிகளின் வீர தீர செயல்களைப் பற்றியும் அவர்கள் படைத்த சாதனைகளைப் பற்றி எல்லாம் மறந்து விட்டனர். இப்போது அவர்கள் எத்தனை பேர்? ஐந்து பேரா? ஆறு பேரா? அல்லது ஏழு பேரா? என்ற விவாதத்தில் காலத்தை கழிக்கின்றனர். எத்தனை பேர் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று அறிவித்துவிடும் படி சொல்லப்படுகிறது. அதைப் பற்றி யாரிடமும் தர்க்கம் வேண்டாம் என்றும் அறிவிக்கின்றது (18:22) காரணம்: அவர்கள் எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. அவர்கள் ஆற்றிய சாதனைகள் தான் முக்கியம். அவைதான் மக்களுக்கு படிப்பினையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

அது மட்டுமா? அவர்கள் எத்தனை ஆண்டுகள் குகைக்குள் தங்கினார்கள் என்ற சர்ச்சையும் வேகமாக பரவி வருகிறது. சிலர் 300 ஆண்டுகள் என்றும் சிலர் சரியாக கணித்து கூறுவதாக சொல்லி 309 ஆண்டுகள் என்றும் பெருமையாக பேசிக் கொள்கின்றனர். (18;25) எனவேதான் அவர்கள் எத்தனை ஆண்டுகள் தங்கி இருந்தார்கள் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று அறிவிக்கும் படி சொல்லப்படுகிறது. (18:26)

ஆக எத்தனை பேர் எத்தனை ஆண்டுகள் என்பது முக்கியமல்ல. மாறாக அவர்கள் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முயற்சி மற்றும் சாதனைகள் தான் முக்கியம். எனவேதான் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் எதைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் “மஷீயத்” என்கின்ற செயல் திட்டத்தில் இருக்கிறதா என்பதை அனுசரித்து செயல் பட அறிவுருத்துகிறது. (18:23&24)

9ஹுத் ஹுது ஒரு பறவையா?

وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَا لِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ٢٠

27:20. அவர் பறவைகளை (ப் பற்றியும்) பரிசீலனை செய்து: "நான் (இங்கே) ஹுத் ஹுதுவைக் காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகிவிட்டதோ? என்றுகூறினார்.

சாதாரண மொழியில் தைரன் என்ற வார்த்தைக்கு பறவை என்றுதான் பொருள். இன்றைய காலக் கட்டத்திலும் ஆகாய விமானத்திற்கும் தைரன் என்றே சோல்கிறார்கள். ஆனால் தைரன் என்ற வார்த்தைக்கு பறக்கும் குதிரைக்கும் சொல்லப்படுகிறது. காரணம்;அக்காலக் கட்டத்தில் அதுவே வேகமாக செல்பவையாக இருந்தது. எனவே நாம் தைரன் வார்த்தைக்கு குதிரைப் படை என்று பொருள் தந்துள்ளோம். ஏனெனில் போர்களத்தில் அவை பெரிதும் உதவுகின்றன. இதன் அடிப்படையில் வரும் விளக்கத்தை கவனியுங்கள்.

விளக்கம்: ஒருமுறை சுலைமான் நபி குதிரைப் படைகளையும் சேனைகளையும் மேற்பார்வை செய்து வந்தார். அதில் உளவுப் படையைச் சேர்ந்த, “ஹுத் ஹுதூ” என்பவரைக் காணமால் போகவே, அவரைப் பற்றி விசாரித்து வந்தார். நெடு நாட்களாகியும் அவரைப் பணியில் இல்லாமல் போனது அவருக்கு கோபம் ஏற்பட்டது.

لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ٢١

27:21. “நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன், அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன், அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்" என்றும் கூறினார்.

அக்காலத்தில் சுற்றுப்புற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக் கொள்ள அரசர்கள் உளவு படையை தயாரித்து அனுப்புவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு நியமிக்கப்பட்ட உளவு படை தலைவர் தான் ஹுத்ஹூது என்பவர். அவர் ஸபா நாட்டில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி அறிக்கையை சமர்ப்பித்தார்.

விளக்கம்: மேலும் சுலைமான் நபி, “சட்ட விரோதமாக அரசுக்கு தகவல் எதுவும் அனுப்பாமல் மாயமாய் மறைந்திருக்கும் அவருக்கு ராணுவச் சட்டப்படிக் கடுமையான தண்டனைக் கிடைக்கும். தான் பணியில் இல்லாமைக்குத் தக்க ஆதாரத்தைக் கொண்டுவரவில்லை என்றால் அவருக்குக் மரண தண்டனையும் கிடைக்கலாம்” என்றார்.

فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۢ بِنَبَإٖ يَقِينٍ٢٢

27:22. (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார், அதற்குள் (ஹுத் ஹுது வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். 'ஸபா'விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.

விளக்கம்: இதைக் கேள்வியுற்ற “ஹுத் ஹுதூ” என்கிற படைத்தலைவர் சில நாட்களில் அரசரிடம் விரைந்து வந்தடைந்தார். அவர் அரசரிடம், “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். அது ஸபா நாட்டைப் பற்றியதாகும். நான் சமர்ப்பிக்கும் தகவல்கள் யாவும் உண்மையானதே ஆகும்” என்று தான் நெடுநாட்களாக இல்லாதமைக்கு விளக்கமளித்தார்.

إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ٢٣

27:23. “நிச்சயமாக அ(த்தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன், இன்னும் அவளுக்கு (த் தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது, மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.

விளக்கம்:“அந்நாட்டை ஒரு பெண்மணி ஆட்சி செய்து வருகிறார். அந்நாட்டு அரசி எல்லா வகையான வளங்களையும், வசதி வாய்ப்புகளையும் கொண்டு தன்னிறைவு பெற்று ஆட்சி செய்து வருகிறார். அதனால் அவர்கள் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பிற நாட்டவரிடம் கையேந்துவதில்லை. அப்படிப்பட்ட மகத்தான பலம் வாய்ந்த ஆட்சியாக இருக்கிறது” என்று ஹுத் ஹுதூ தகவல் அளித்தார்.

وَجَدتُّهَا وَقَوۡمَهَا يَسۡجُدُونَ لِلشَّمۡسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ فَهُمۡ لَا يَهۡتَدُونَ٢٤

27:24. அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜுது செய்வதை நான் கண்டேன், அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத் துள்ளான், ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.

விளக்கம்:“ஆனால் அந்த அரசியும் நாட்டு மக்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, சூரியனைத் தெய்வமாக எடுத்துக் கொண்டு அதை வணங்கி வருகின்றனர். மேலும் அவர்கள் செய்து வரும் தவறானச் செயல்கள் யாவும் அவர்களுக்கு அழகாகக் காணப்படுகின்றன. எனவே அவர்களுடைய மனோ இச்சை அவர்களை நேர்வழிப் பெறுவதிலிருந்து தடுத்து வருகின்றது. அதனால் அவர்கள் நேர்வழிப் பெறவில்லை”

அதாவது அந்நாட்டு அரசும் மக்களும் இறைவழிகாட்டுதலைப் பின்பற்றாததால் அவர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். தற்சமயம் அவர்கள் சிறப்பாக வாழ்ந்தாலும், பிற்காலத்தில் அவர்களுடைய சமுதாயத்தில் சீற்கேடுகளும் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டு அழிவை ஏற்படுத்திவிடும். மேலும் அவர்களுடைய ஒழுக்க மாண்புகள் சீரழிந்து வருகின்றன. எனவே அந்நாடு அழிவை நோக்கிச் செல்கிறது என்ற உண்மை அந்நாட்டு அரசிக்குத் தெரியவில்லை.

أَلَّاۤ يَسۡجُدُواْۤ لِلَّهِ ٱلَّذِي يُخۡرِجُ ٱلۡخَبۡءَ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُونَ وَمَا تُعۡلِنُونَ٢٥

27:25. வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்: இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜுது செய்து வணங்க வேண்டாமா?

விளக்கம்:“வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிலுள்ள மறைவானவற்றிலிருந்து தேவைக்கு ஏற்ப வெளிப்படுத்துபவனும் ஆகிய ஏக இறைவனான அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணங்கி அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டாமா? அதுமட்டுமின்றி அவர்கள் செய்யும் மறைவான செயல்களும் வெளிப்படையான செயல்களும் அல்லாஹ்வுக்கு மறைவானவை அல்ல என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை”

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ۩٢٦

27:26. அல்லாஹ்- அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு)இல்லை, (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்" (என்றுஹுத் ஹுது கூறிற்று).

விளக்கம்:“அகிலங்களை எல்லாம் படைத்து அவற்றை சரியான முறையில் பரிபாலித்துத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அல்லாஹ்வைத் தவிர, வேறு யாருடைய ஆட்சி அதிகாரமும் எங்கும் நடைபெறுவதில்லை. உண்மை இவ்வாறிருக்க அவர்கள் இறைவனின் படைப்பாகிய சூரியனைக் கடவுளாகக் கருதி அதை வணங்கி வருவது சரியாகுமா? என்றும் அவர் கேட்டார்.

இப்படியாக உளவுப்படைத் தலைவரான ஹுத்ஹுது அந்நாட்டைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிந்து, சுலைமான் நபியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். மேற்சொன்ன அனைத்து விஷயங்களையும் கவனித்துப் பாருங்கள். ஒரு பறவையால் இத்தனை பணிகளையும் செய்ய முடியுமா? எனவே ஹுத் ஹுது என்பவர் உளவு படைத் தலைவர் என்பதே சரியான விளக்கம். நாமும் இலங்கை நாட்டின் தமிழ் வீரர்களை “விடுதலைப் புலி” என்கிறோம். அவர்கள் நிஜத்தில் புலிகளா? அது வீரத்தைக் குறிக்கும் சொல்லாகும். அதுபோலத் தான் அசுர வேகத்தில் செயல்படக் கூடிய படைத் தலைவர் தான் இதுவும்.

10ஸபா நாட்டு இளவரசி பளிங்கு மாளிகைக்கு விஜயம் செய்தது

ஸபா நாட்டு (இமன் நாடு) இளவரசி ஷீபா (Queen of Sheba) என்பவர் (அரபியில் பல்கீஸ்) Balquis) (என்பவர் ஸபா தாட்டை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். இருப்பினும் அந்நாட்டில் சீர் கேடுகளும் ஏற்பட்டு வந்தன. அக்காலத்தில் (கி,மு 10ஆம் நூற்றாண்டில்) ஆண்டு வந்து பெயரும் கீரித்தியும் பெற்ற இஸ்ரேலிய பேரரசர் சுலைமான் நபி (Solomon The Great) ஆவார். அக்காலத்தில் சுற்றுப்புற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக் கொள்ள உளவு படையை தயாரித்து அனுப்புவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு நியமிக்கப்பட்ட உளவு படை தலைவர் தான் ஹுத்ஹூது என்பவர். அவர் ஸபா நாட்டில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஸபா நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் சமூக சீர்கேடுகள் நிறைந்திருந்தை அந்த உளவுப் படைத் தலைவர் அறிந்துக் கொண்டார். அதற்கு காரணம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை பின்பற்றுவதை விட்டுவிட்டு சூரியனை கடவுளாக கருதி மக்கள் அனைவரும் தம் விருப்பம் போல் செயல்படுவதால் தான் என்பதை கண்டறிந்தார். எனவே தன் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ள அரசிக்கும் சுலைமான் நபி தூது அனுப்பினார். அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததை அடுத்து அவளுடைய அரியானத்தை கைப்பற்றி அவருக்கு பாடம் புகுட்ட திட்டமிட்டார்.

அவ்வாறே அவளுடைய அரண்மனையை கைப்பற்றியும் அவளிடமே அந்நாட்டை ஆளும்படி அறிவுருத்தினார். மேலும், தன் நாட்டிற்கு விஜயம் செய்யும்படி வரவேற்றினார்.

قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ٤٤

27:44. அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!" என்று சொல்லப்பட்டது, அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து)அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணி விட்டாள், எனவே (தன்ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்,) “அது நிச்சயமாக பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட் மாளிகை தான்!" என்று கூறினார். (அதற்கு அவள்) "இறைவனே! நிச்சயமாக எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன், அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் (முற்றிலு ம் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்" எனக் கூறினாள்.

விளக்கம்: ஸபா நாட்டு இளவரசிக்கு கண்ணாடி மாளிகையில் வரவேற்பு நடைப்பெற்றது. சுலைமான் நபி, அந்த மாளிகையின் நுழைவாயிலில் தண்ணீர் தடாகம் போன்று தளத்தை ஏற்படுத்தியிருந்தார். அதைத் தண்ணீர் என நினைத்து கலக்கம் அடைந்து, தன் ஆடையை கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்தினார். இதைக் கண்ட ஸுலைமான் நபி,“இது வழுவழுப்பான கண்ணாடிகளால் தளம் போடப்பட்ட மாளிகையாகும்” என்றார். இதைப் பார்த்து, பிரமித்துப் போன அவர், “என் இறைவா! நிச்சயமாக எனக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன். அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கும் சுலைமான் நபிக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்” என்றாள்.

படிப்பினை: அதாவது கண்ணாடியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தளத்தைத் தண்ணீர் தடாகம் என எவ்வாறு தவறாக எண்ணிக் கொண்டிருந்தாளோ, அவ்வாறே இறைவனின் படைப்பான சூரியனையே இறைவன் என தவறாக எண்ணிக் கொண்டிருந்ததை ஸுலைமான் நபி அரசிக்குப் புரிய வைத்தார். ஓர் அரசன் இன்னொரு நாட்டு அரசனுக்கு இத்தகைய உவமானப் பொருட்களைக் கொண்டு உண்மையை விளக்குவது மரபாக இருந்து வந்தது.

மேலும் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான வளர்ச்சி எந்த அளவுக்கு வளர்ந்து இருந்தது என்பதையும் இவ்வாசகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஸபா நாட்டில் இத்தகைய பளிங்கு மாளிகை எல்லாம் அக்காலத்தில் இல்லை. எனவே அந்தப் பளிங்கு மாளிகையைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாள். விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு எந்த அளவுக்கு வளர்ச்சிப் பெற்று சிறப்பாக வாழ முடியும் என்பதை அந்த அரசி தெரிந்துக் கொண்டார். எனவே இறைவனின் பிரமாண்டமான பரிபாலன ஏற்பாட்டினை ஏற்றுக் கொள்வதாக அவள் அறிவித்தார். காரணம் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமின்றி சமுதாய ஒழுக்க மாண்புகளையும் பேணிக்காக்க இறைவழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன என்பதையும் அவள் புரிந்து கொண்டார்.

`` ஆனால் திருக்குர்ஆனின் விளக்கத்தை தந்த நம் ஆலிம்கள் ஸபா நாட்டு இளவரசி பல்கீஸ் என்பவள் பெண் அல்ல. அவள் ஒரு தேவதை என்று சுலைமானிடம் கூறியதாகவும் தேவதைகளுக்கு கால்கள் பின்புறமாக திரும்பி இருக்கும் என்றும் சொன்னார்களாம். அதனால் அது சரியான தகவலா என்பதை கண்டறிய இவ்வாறு தடாகத்திற்கு ஏற்படுத்தியதாக எழுதியுள்ளார்கள். அது மட்டுமின்றி அவளை மணந்துக் கொண்டதாகவும் பைபிள்கள் கூறுகின்றன. ஆக உண்மை ஒன்றிருக்க மக்களை திசை திருப்புவதற்காகவே கட்டுக் கதைகளை இணைத்து குர்ஆனை மஹ்ஜூரா (25:30)ஆக்கிவிட்டார்கள். ஆச்சரயாமே!

11மீன் வயிற்றில் ஒரு நபி?

மீன் வயிற்றில் 40 நாட்கள் யூனுஸ் நபி இருந்ததாக பெருமையாக பேசி பேசி பேரானந்தம் அடைவார்கள். ஆலிம்கள் இது ஒரு மாபெரும் அற்புதம் என்பார்கள். இவ்வாறு ஒருவர் மீன் வயிற்றில் இருக்க சாத்தியமா என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்? விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது காற்று புகாத மீன் வயிற்றில் ஏறத்தாழ 120* செல்ஷியஸ் வெப்பமான இடத்தில் ஒரு மனிதர் இருக்க ஒரு போதும் சாத்தியமில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் விடும் கட்டுக்கதைகளுக்கு ஏற்ப குர்ஆனின் மொழிபெயர்ப்பை மாற்றி இருக்கிறார்கள். வாருங்கள் அவ்வசனங்களை பார்ப்போம்.

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ١٣٩

37:139. மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.

إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ١٤٠

37:140. நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ١٤١

37:141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).

விளக்கம்; நபிமார்கள் மார்க்க உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் போது பொரும்பாலானவர்கள் அதை ஏற்றறுக் கொள்வதில்லை. எல்லா நபிமார்கள் விஷயத்திலும் எதிர்ப்புகள் வலுக்கவே செய்தன. அதை தொடர்ந்து தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டால் நபிமார்கள் தனக்கு சாதகமாக இருக்கும் இடத்தை தேடி இடம் பெயர்ந்து சென்றுவிடுவார்கள். இதை நாம் ஹிஜ்ரத் என்கிறோம்.

ஆனால் மீனவ இனத்தைச் சேர்ந்த யூனுஸ் நபி அவசரப்பட்டு ஊரைவிட்டு வெளியேறிவிட முற்பட்டார். இதனால் அவர் படகு ஒன்றில் ஏறி பயணிக்க முற்பட்டார். ஆனால் பயண சீட்டு இல்லாத்தால் அவரை கடலில் தள்ளிவிடுகின்றனர்.

இங்கிருந்ததான் ஆலிம்களின் கட்டுக்கதைகள் ஆரம்பமாகிறது.

فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ١٤٢

37:142. ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.

விளக்கம்: கடலில் தள்ளப்பட்டதும் அவரை ஒரு மீன் கவ்விக் கொண்டது. فَٱلۡتَقَمَهُ என்ற வாரத்தைக்கு விழுங்கிவிட்டதாக பொருள் தருகின்றனர். மீன் ஒருவரை விழுங்கிவிட்டால் என்ன ஆகும்? அவர் அங்கு ஜீரணமாகி கழிவு பொருளாகத் தான் வருவார்.

فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ١٤٣

37:143. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் –

விளக்கம் ; ஆனால் வழக்கத்திற்கு மாறாக யூனுஸ் நபி மீன் வயிற்றில் தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டிருந்ததாக சொல்கிறார்கள். இங்கு முஸப்பிஹீன் என்று வருகிறது. ஸபஹ என்றால் வேகமாக நீந்தி கரை சேர்வது என்று பொருள். அதாவது மீன் கவ்விக் கொண்டதும் அதிலிருந்து விடுவித்து வேகமாக நீந்தி கரையை வந்தடைந்தார். அவ்வாறு அவர் நீந்தி வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருப்பார்?

لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ١٤٤

37:144. (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.

விளக்கம்: மீன் வயிற்றிலேயே இருந்து மீனுக்கு இரையாகி இருப்பார். அதன் பின் அவரால் ஒருபோதும் வெளியே வரவே முடிந்து இருக்காது. அதாவது அவருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர் நீந்தி கரையை வந்தடைந்தார். ஆனால் ஆலிம்களுக்கு எதுவெல்லாம் புரியாதோ அதை மறுமைநாளில் என்று வளைவு கோடு போட்டு தப்பித்துக் கொள்வார்கள். இவ்வாறு மொழியாக்கம் செய்து விட்டு அதன் பின் கட்டுகதைகளை அவிழ்துவிட்டுக் கொண்டு இருப்பார்கள். நாம் விளக்கத்தை தந்து விட்டோம். எது சரி என்பதை அன்பர்கள் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.

12முஹம்மது நபி(ஸல்) மேராஜுக்கு விஜயம் செய்தது?

இதுவும் முக்கியமாகப் பேசப்படுகின்ற ஒரு விஷயமாகும். இதற்கான ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே எடுத்து சொல்கிறார்கள். மேராஜுக்கு முஹம்மது நபி(ஸல்) போய் வந்தார் என்றால் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விடியற்காலையில் பொழுது விடிவதற்கு முன் ஜிப்ரயீல் என்கின்ற வானவரின் துணையைக் கொண்டு வானத்தை கடந்து அல்லாஹ்வின் அர்ஷுக்குச் சென்று அல்லாஹ்வை சந்தித்து வந்தார் என்பதைத் தான் மேராஜ் சம்பவம் என்று சொல்கிறார்கள். இதற்காக எடுத்துரைக்கும் திருக்குர்ஆன் வாசகம் இதோ.

سُبْحَٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًۭا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَٰتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ.

17:1 அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபதுல்லாவிலிருந்து தொலைவில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் யாவற்றையும் செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

அல்லாஹ் என்னவோ தன் அடியாரை (முஹம்மது நபியை) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரைதான் அழைத்துச் சென்றான். ஆனால் அங்கிருந்து வானத்தைக் கடந்து அர்ஷ் வரை சென்ற சம்பவத்தைப் பற்றி ரிவாயத்து புத்தகங்களில் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மேற்சொன்ன மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே ( .. ) போட்டு எழுதியுள்ளார்கள். அதாவது மஸ்ஜிதுல் அக்ஸா என்பது பைத்துல் முகத்தஸிற்கு அருகாமையில் உள்ள பள்ளிவாசல் என்றார்கள். முஹம்மது நபி காலத்தில் அத்தகைய பள்ளிவாசலே கிடையாதே என்று சில அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாதிட்டார்கள். அதற்கு ஆலிம்களால் சரிவர நிரூபிக்க முடியவில்லை. எனவே காலப்போக்கில் மஸ்ஜிதெ அக்ஸா என்பது பைத்துல் முகத்தஸ்தான் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதற்கேற்றவாறு மொழிபெயர்ப்பும் செய்து விட்டார்கள்.

இவ்வாறு எழுதி வைத்துக் கொண்டு, மேராஜ் சம்பவம் மிகப் பெரிய அற்புதம் என்று முஸ்லிம்களிடையே சொல்லி வருகிறார்கள். யாராவது மேராஜ் சம்பவத்தை ஏற்கவில்லை என்றால் அவர் முஸ்லிம் ஆக மாட்டார் என்றும் சொல்லி விடுகிறார்கள். அதன்பின் யாராவது அதைப் பற்றி வாதிடுவார்களா? அதையும் மீறி யாராவது வானத்தைக் கடந்து சென்ற சம்பவத்தைப் பற்றி 17:1 வாசகத்தில் இல்லையே என்று கேட்டால் முஹம்மது நபி அறிவித்ததை ஏற்க மறுக்கிறீர்களா என்று திருப்பி கேட்கிறார்கள். சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் அல்லாஹ் குர்ஆனில் அறிவித்திருக்கும் போது, (24:27) வானத்தை கடந்து சென்ற சம்பவத்தைப் பற்றி ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்டால், அதை எல்லாம் எழுதினால் குர்ஆன் மிகப் பெரிய நூலாக ஆகிவிடும் என்று பதிலளிக்கிறார்கள். சரி வாருங்கள் திருக்குர்ஆன் வானத்தை கடந்து பயணிப்பதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ٣٣

55:33 உலகிலுள்ள மனித சமுதாயமோ அல்லது ஜின் இனத்தை (பழங்குடியை) சேர்ந்த சமுதாயமோ, யாராக இருப்பினும் உங்களால் முடிந்தால் பூமியை விட்டு வானத்தை கடந்து செல்லுங்கள். ஆனால் அதற்குரிய (விமானம், ராகெட் போன்ற) உபாயங்கள் எதுவும் இல்லாமல் உங்களால் கடந்து செல்லவே முடியாது.

இந்த வாசகத்தை மேற்கோள் காட்டி முஹம்மது நபி மட்டும் ராகெட் விமானம் எதுவும் இல்லாமல் எப்படி வானத்தை கடந்து சென்றிருக்க முடியும் என்று கேட்டால் வழக்கமான பதிலாக, “அல்லாஹ் நாடினால்” முடியாதா என்கிறார்கள். இப்படித் தான் முன்னுக்குப் பின் முரணாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் கற்பனை வளத்தோடு பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். போதாத குறைக்கு அல்லாஹ்வையும் இழுத்து, ""அவன் நாடினால்"" இவர்கள் கூற்றுபடி அவனும் அவ்வாறே செய்து முடிப்பான் போலும்.

மேலும் அவர்களின் கூற்றின்படி தன் அடியாரை அல்லாஹ் அர்ஷுக்கு அழைத்துச் செல்வதாக இருந்திருந்தால் கஅபாவிலிருந்தே அழைத்துச் சென்றிருக்கலாமே. தேவையில்லாமல் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு ஏன் அழைத்துச் சென்று, அங்கிருந்து அர்ஷுக்கு அழைத்துச் செல்லவேண்டும்? கஅபதுல்லாவிலிருந்து அர்ஷுக்கு செல்லும் வழி இல்லையோ? அல்லது அல்லாஹ்வால் அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியவில்லையோ? இதற்கு யாராவது பதில் சொல்வார்களா?

மேலும் இதற்காக அவர்கள் பறக்கும் குதிரை ஒன்றைக் கண்டு பிடித்து, அதற்கு புராஃக் براق என்று பெயரிட்டு அதன் மீது சவாரி செய்து சென்றதாகச் சொன்னார்கள். அதன் வரைப் படங்களையும் தயாரித்து வீடுகளில் மாட்டி வைத்திருப்பார்கள். வேடிக்கை என்னவென்றால் அந்த குதிரையின் முகம் அழகான பெண்ணின் முகமாக வரைந்து இருப்பார்கள். அங்கேயும் இவர்கள் ஆண் ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க தாயராக இல்லை. பெண்ணின் மீது சவாரி செய்து சென்றதாக கதை கட்டுகிறார்கள். சரி. மேராஜ் பிரயாணத்தைப் பற்றி மேல்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிப்போம்.

மேராஜுக்கு சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலகிற்கு என்ன கொண்டு வந்தார் என்று கேட்டால், ஐந்து வேளை தொழுகையைக் கொண்டு வந்தார் என்று சொல்லி அதைப் பற்றி விவரமாக சொல்வார்கள். அதாவது முதன் முதலில் அல்லாஹ் தன் அடியாருக்கு ஐம்பது வேளை தொழுகையை நிர்ணயித்து கொடுத்ததாக அறிவித்தானாம். மிகவும் பூரிப்புடன் சந்தோஷமாக அவர் உலகிற்கு திரும்பி வரும் போது, மூஸா நபியை சந்திக்க நேர்ந்ததாம். அவர் அல்லாஹ்விடமிருந்து என்ன பரிசு எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு முஹம்மது நபி(ஸல்) ஐம்பது வேளை தொழுகை எடுத்துச் செல்வதாக சொன்னாராம். அதற்கு மூஸா நபி அத்தனை வேளை உங்கள் உம்மதுகளால் தொழுக முடியாது. எனவே கொஞ்சம் குறைத்து கொடுக்கும்படி அல்லாஹ்விடம் சென்று கேளுங்கள் என்று சொன்னாராம்.

அவருடைய ஆலோசனையின் படியே அவர் அல்லாஹ்விடம் சென்று கேட்டதற்கு, 25 வேளை தொழுகையை அல்லாஹ் குறைத்து விட்டானாம். இதை அறிந்த மூஸா நபி, முஹம்மது நபியிடம் மீண்டும் ஒரு முறை சென்று மேலும் குறைத்துக் கொடுக்கும்படி கேட்கச் சொன்னாராம். அதன்படியே அவரும் சென்று அல்லாஹ்விடம் கேட்டதற்கு 15 வேளை தொழுகையை தள்ளுபடி செய்து 10 வேளை தொழுகையை நிர்ணயித்து கொடுத்தானாம். இதை அறிந்த மூஸா நபி மீண்டும் ஒரு முறை சென்று மேலும் குறைத்துக் கொடுக்கும்படி அல்லாஹ்விடம் கேட்க அனுப்பி வைத்தாராம். அதன்படியே அவர் சென்றதற்கு, ஐந்து வேளை குறைத்து, ஐந்து வேளை தொழுகை இறுதியானது என்று தீர்மானித்தானாம்.

இதை அறிந்த மூஸா நபி மீண்டும் சென்று மேற்கொண்டு குறைத்துக் கொள்ளும்படி ஆலோசனைக் சொன்னாராம். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் சென்று குறைத்துக் கொடுக்கும்படி அல்லாஹ்விடம் சொல்வதற்கு வெட்கமாக இருப்பதாகச் சொல்லி விட்டாராம். அதன் பிறகு முஹம்மது நபி(ஸல்) அவர்கள், யார் ஐந்து வேளை தொழுகையை முறைப்படி தொழுது கொள்கிறார்களோ, அவருக்கு ஐம்பது வேளை தொழுகையின் நன்மை கிடைத்து விடும் என்று அறிவித்தாராம். இதுதூன் தொழுகை நிலை நிறுத்தப்பட்டதன் உண்மை வரலாறு என்று ரிவாயத்து புத்தகங்கள் அறிவிக்கின்றன.

இப்போதெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பத்து முறை அல்லாஹ்விடம் சென்றதாகவும் சிலர் இருபது முறை சென்றதாகவும் தன்னிச்சையாக யோசித்து யோசித்து சொல்லி வருகிறார்கள். வரும் காலத்தில் எத்தனை முறையாக மாறும் என்று தெரியவில்லை. அத்தனை முறை ஏன் அவரை மூஸா நபி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டால் அல்லாஹ்வின் ஜல்வா (ஒளி) அவர் செல்லும் போது பார்க்க முடிந்தது என்று இவர்களே யூகித்து பதில் அளிக்கிறார்கள்.

நீங்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். முஹம்மது நபியின் உம்மது எத்தனை வேளை தொழுது கொள்ளும் சக்தி பெற்றிருக்கிறார்கள் என்று அல்லாஹ்வுக்கும் தெரியவில்லை முஹம்மது நபிக்கும் தெரியவில்லையாம். ஆனால் 2800 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போன மூஸா நபிக்கு தெரிந்திருந்ததாம். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் சென்று அல்லாஹ்விடம் தொழுகையை குறைத்துக் கொடுக்கும்படி சொன்னாராம். ஏதோ அல்லாஹ்வுக்கும் முன்யோசனை இல்லை. முஹம்மது நபிக்கும் இல்லை என்பதுபோல் எழுதி இருக்கிறார்களே இதைப் பற்றி யாராவது யோசித்துப் பார்க்கிறார்களா? ஆனால் ஒவ்வொரு வருடமும் பள்ளிவாசல் பயான்களில் இதைப் பற்றி பல ஜோடனை கதைகளை தயாரித்து பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.

இந்த ரிவாயத்தை உண்மை என்று ஏற்றுக் கொண்டால், மூஸா நபி இன்னமும் நான்காவது வானத்தில் உயிருடன் இருப்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். முஹம்மது நபியின் நிலை என்ன என்று கேட்டால் اِنَّك مَىِّتُ நிச்சயமாக நீ மரணிப்பாய் என்று அல்லாஹ்வே திருக்குர்ஆனில் சொல்லி விட்டான். எனவே முஹம்மது நபி(ஸல்) காலமாகி விட்டார். ஆனால் யூதர்களின் கடவுளாகிய மூஸா நபி இன்னமும் உயிருடன் இருக்கிறார். இந்த ரிவாயத்தே அதற்கு ஆதாரம் என்றும், முஹம்மது நபியே அவரை சந்தித்துள்ளார் என்றும் சொல்லி யூதர்கள் பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள்.

17:1ஆவது வாசகத்தின் பொருள் என்ன?

17:1 விளக்கம் : மனித கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட சர்வ வல்லமையுடைய அல்லாஹ், தன் செயல் திட்டப்படி தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (மக்காவிலிருந்து) வளம் மிக்க மஸ்ஜிதெ அக்ஸாவிற்கு – தொலைவில் இருக்கும் மதினாவிற்கு இரவோடு இரவாக ஹிஜ்ரத் செய்ய ஏற்பாடு செய்தான். இதுவரையில் போதனை அளவில் இருந்த மார்கத்தை, உலக அரங்கில் நடைமுறைப்படுத்தி அதன் எழுச்சி நிலையை உலகார்க்கு நிரூபித்துக் காட்ட இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. உலக நிகழ்வுகள் யாவற்றையும் அறிந்து கொள்ளும் பேராற்றல் உடைய அல்லாஹ்வின் சொல்லாகும் இது.

மஸ்ஜிதுல் ஹராம் என்றால் மக்கா என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் மஸ்ஜிதெ அக்ஸா என்னும் போது பைத்துல் முகத்தஸ் என்கிறார்கள். அக்ஸா என்றால் தொலைவு என்று பொருள் வரும். மதினாவிற்கு, “ஜிம்னன்” “யஸ்ரபுன்” “மதீனதுன்” “அக்ஸன்” என்று பலப் பெயர்கள் உண்டு. திருக்குர்ஆனில் குஸ்வா பள்ளத்தாக்கு என்று 8:42இல் வருகிறது. அதுவும் மதீனாவைத் தான் குறிக்கும்.

பைத்துல் முகத்தஸ் விவகாரமோ முடிந்து போன ஒன்றாகும். (2:142) அதை விட்டுவிட்டு தலைமைச் செயலகமாக - கஅபாவையே அல்லாஹ் அறிவிக்கின்றான்.(2:144) ஆனால் ரிவாயத்துபடி பார்க்கும் போது, அல்லாஹ் முஹம்மது நபியை பைத்துல் முகத்தஸிற்கு அழைத்து சென்றதாக உள்ளது. இதிலும் யூதர்களின் சதி திட்டங்களின் சாயல் பளிச்சிடுகிறது. அதாவது யாராக இருப்பினும் வானத்தைக் கடந்து அர்ஷுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி பைத்துல் முகத்தஸ்தான் என்பதை மறைமுகமாக முஸ்லிம்களுக்கு சொல்வதாகத் தெரிகிறது. அதாவது காலம் காலமாக புனித இடமாக கருதப்பட்ட பைத்துல் முகத்தஸை அல்லாஹ் காலவதி ஆக்கியது, அவர்களால் ஜீரணிக்க முடியாத நிகழ்வு. எனவேதான் ரிவாயத்துகளை வைத்து முஸ்லிம்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

13சந்திரன் பிளந்தது?

சாதாரணமாக நாம் வீட்டில் பேசும் போது நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் தருவதாக இருக்கும். அதே வார்த்தையை அரசியல் ரீதியாகப் பேசும் போது அங்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் வரும். உதாரணத்திற்கு வீட்டில் பேசும்போது குழம்பு நல்ல ருசிதான். ஆனால் கொஞ்சம் உப்பு காரம் குறைவு என்போம். அதே சட்டசபையில் நடக்கும் விவாதங்களைப் பற்றி எழுதும் போது கார சாரமான விவாதம் என்கிறோம். அங்கு காரத்திற்கும் சாரத்திற்கு வேறு அர்த்தம் வரும். அதாவது விவாதங்களின் வேகத்தைக் குறிக்கும். இவ்வாறு பேசும் போதுதான் அந்த சொல்லுக்கே வலிமையும் அழகையும் சேர்க்கும். அது போலத்தான் திருக்குர்ஆன் உலக பொதுமறை என்பதால் குடும்பவியல் விவகாரத்தில் சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அதே அரசியல் மற்றும் உலக விவகாரங்களைப் பற்றி பேசும் போது, இலக்கிய நயத்துடன் பேசுகிறது. அதற்கு நாம் நேரடி மொழிபெயர்ப்பு செய்தால் அர்த்தம் அனர்த்தம் விடுகிறது.

நம் நாட்டிலும் ஒரு கட்சி தோல்வியுறும் போது சூரியன் அஸ்தமிட்டு விட்டான் என்கிறோம். இன்னொரு கட்சி தோற்கும் போது இலை உதிர்ந்தது என்போம். இதைப் படிக்கும் நாம் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்பதை எளிதாக அறிந்து கொள்கிறோம். அது போலத்தான் சந்திரன் பிளக்கும் விஷயமும் ஆகும். திருக்குர்ஆனின் வாசகத்தைக் கவனியுங்கள்.

ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ١

54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது, சந்திரனும் பிளந்து விட்டது.

இந்த வாசகத்தை நாம் நேரடியாக பொருள் கொண்டால் இறுதி நேரம் என்பது ஃகியாம நாள் என்றும் சந்திரனும் பிளந்து விட்டதாக பொருள்படும். அப்போ ஃகியாம நாள் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சந்திரன் எப்போதோ பிளந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஒரே வாசகத்தில் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. எனவே இந்த வாசகத்தை அரசியல் ரீதியாக கவனிக்கும் போது கீழ்கண்டவாறு பொருள் வரும்.

விளக்கம்: இதுவரையில் அளிக்கப்பட்ட வாக்குபடி, புரட்சி வெடிக்கும் காலக் கட்டம் நெருங்கிவிட்டது. அப்போது சந்திரனை தேசிய சின்னமாகக் கொண்டு நடக்கும் ஏகாதிபத்திய ஆட்சியமைப்பு பிளவுபட்டுப் போகும்.

அதாவது மக்கமா நகரில் குரைஷியர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. அதன் தேசிய கொடியின் சின்னம் சந்திரனாகும். இந்த வாசகத்திற்கு இந்தப் பொருiளையே தரமுடியும். காரணம் சந்திரனின் புவிஈர்ப்பைக் கொண்டுதான் பூமியில் உயிரினம் வாழமுடிகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி சற்றே தள்ளிப் போனாலோ அல்லது குறைந்து விட்டாலோ, இங்கு உயிரினம் உயிர் வாழ முடியாது என்பது பிரபல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். உண்மை இவ்வாறிருக்கும் போது, சந்திரன் பிளப்பது என்பது அல்லாஹ் உருவாக்கியுள்ள இயற்கைச் சட்டங்களுக்கு புறம்பான ஒன்றாகும்.

وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ٢

54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், “இது வழமையாக நடைபெறும் சூனியம்தான்" என்றும் கூறுகிறார்கள்.

கவனித்தீர்களா? அவர்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தைப் பற்றி முன் எச்சரிக்கை செய்தி வருகிறது. ஆனால் அவர்கள் அதை வெற்றுப் பேச்சு என்று சொல்லி உதாசீனப்படுத்தி விடுகிறார்கள். ஒருவேளை சந்திரனையே பிளந்து காட்டியே இருந்தாலும், அதைப் பார்த்து சூனியம் என்றுதான் சொல்வார்கள் போலும். அப்படியும் அவ்வாறு பிளந்து காட்டினாலும் ஒரு பலனும் இல்லை. (மேலும் பார்க்க 6:111) எனவே நாம் தந்த விளக்கம்தான் பொருத்தமானதாகும். ஏனெனில் மக்கமா நகரை முஹம்மது நபிஸல் அவர்கள் காலத்தில், போரிடாமலேயே வெற்றியை ஈட்டிய சம்பவத்தைப் பற்றி 59:2-6 திருக்குர்ஆன் வாசகங்கள் அறிவிக்கின்றது. அதை படித்துப் பாருங்கள்.

சிந்தனையாளாகளே! இதுதான் சந்திரன் பிளந்த சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் உண்மைகளாகும். இதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். முஹம்மது நபிஸல் அவர்கள் சந்திரனை பிளந்து காட்டியதாக கதைகளை ஜோடித்து சொல்லி வருகிறார்கள்.அதுவும் சந்திரன் பிளந்ததை அரபு நாட்டைச் சேர்ந்த யாரும் பார்க்கவில்லையாம். கேரளாவை சேர்ந்த யாரோ ஒரே ஒரு நபர் மட்டும் தான் பார்த்தாராம். பார்த்தவருக்கு கண் பார்வை சரியில்லாமல் இருந்திருக்குமோ? இவை எல்லாம் ஷேக்குமார்களின் புரளிகள் என்பது தெளிவு.

14மலைகள் தூள் தூளாகிவிடும் ?

நாம் ஏற்கனவே சொன்னது போல அரசியல் ரீதியாகப் பேசும் போது, பெரிய பெரிய செல்வந்தர்களை அசைக்க முடியாத மலைகள் என்போம். காரணம் முஹம்மது நபிஸல் காலத்திலும், செல்வத்தை வைத்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பல சூழ்ச்சிகளை செய்தவர்கள் ஏராளம். இஸ்லாமிய ஆட்சி நிலை நிறுத்தப்படும் கால கட்டத்தில், அவர்களுடைய செல்வக் குவிப்பு யாவும் குறைந்து சமதர்ம சமுதாயமாக உருவாகும். இதைப் பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡجِبَالِ فَقُلۡ يَنسِفُهَا رَبِّي نَسۡفٗا١٠٥

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப்போல் பரப்பி) விடுவான்" என்று நீர் கூறுவீராக.

அவ்வாறு தூள்தூளாக்கி என்ன பயன்? அதைப் பார்த்து யாராவது ஈமான் கொள்ள போகிறார்களா? ஒருபோதும் இல்லை. எனவே இதை உவமானமாக வைத்து நாம் இவ்வாறு பொருள் தருகிறோம்.

விளக்கம்:பெரியப் பெரிய மலைகளைப் போல் செல்வங்களையும் அதிகாரங்களையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பவர்களின் நிலைமை என்னவாகும் என அவர்கள் பயத்தில் கேட்கிறார்கள். அவர்களை எல்லாம் என் இறைவன் தரைமட்டமாக ஆக்கிவிடுவான் என்று கூறிவிடுவீராக.

இவ்வாசாகத்தில் வரும் ஜிபால் என்ற வார்த்தைக்கு “மலை” என்பது அதன் பொருளாகும். ஆனால் அரசியல் ரீதியாகப் பேசும் போது அது மலைகளைப் போல் செல்வங்களை குவித்து வைத்துக் கொண்டு தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற மமதையில் இருப்பவர்களைக் குறிக்கும். மேலும் இதன் தொடர்ச்சியாக வரும் வாசகங்களை வைத்துப் பார்க்கும் போது நாம் தந்த விளக்கமே பொருத்தமாக உள்ளது என்பதை அறிவீர்கள்.

فَيَذَرُهَا قَاعٗا صَفۡصَفٗا ١٠٦

20:106. “பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.

விளக்கம்:அதன் பின் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமதர்ம ஆட்சியமைப்பு ஏற்படும்.

لَّا تَرَىٰ فِيهَا عِوَجٗا وَلَآ أَمۡتٗا١٠٧

20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்."

விளக்கம்: அப்போது ஏழைப் பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளையும் வேற்றுமை பகைமையும் இருப்பதாக நீர் எங்கும் காணமாட்டீர்.

يَوۡمَئِذٖ يَتَّبِعُونَ ٱلدَّاعِيَ لَا عِوَجَ لَهُۥۖ وَخَشَعَتِ ٱلۡأَصۡوَاتُ لِلرَّحۡمَٰنِ فَلَا تَسۡمَعُ إِلَّا هَمۡسٗا ١٠٨

20:108. அந்நாளில் அவர்கள் (ஸுர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள், அதில் எத்தகைய கோணலும் இருக்காது, இன்னும் (அவ்வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.

விளக்கம்: அப்போது இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக அமைப்பும் ஆட்சியமைப்பும் உருவாகிட அழைப்புகள் வரும். அவர்களைப் பின்பற்றி அனைத்து தரப்பு மக்களும் செல்வார்கள். அதில் எந்த கோணலும் இருப்பதை நீங்கள் காணமாட்டீர். அப்போது அருட்கொடையாளனின் வழிகாட்டுதலுக்கு எதிராக எழுந்த குரல்கள் யாவும் ஒடுங்கிவிடும். அவர்கள் யாவரும் இருந்த இடம் காணாமல் போய் விடுவார்கள்.

يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا١٠٩

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.

விளக்கம்: அப்படியொரு கால கட்டங்களில் அருட்கொடையாளன் பொருந்திக் கொண்டவர்களைத் தவிர வேறு யாருடைய பரிந்துரையும் பலனளிக்காது.

இவை இஸ்லாமிய ஆட்சி காலத்தில் நடைபெறும் நீதிமன்ற விவகாரங்களாகும். அர்ரஹ்மானுக்குப் பொருந்திக் கொண்டவர்கள் என்றால் அர்ரஹ்மான் நிர்ணயித்துள்ள “சட்ட நிபுணர்கள்” என்ற பட்டம் பெற்ற வழக்கறிஞர்கள் என்பது அதன் பொருளாகும். அவர்கள் மட்டுமே குற்றம் சுமத்தப் பட்டவர்கள்; நிரபராதியாக இருந்தால், அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். மரணத்திற்குப் பின் தொடர்கின்ற கியாம நாளில் இத்தகைய சட்ட நிபுணர்களின் அவசியம் இருக்காது. காரணம் அனைத்து விஷயங்களையும் அறிபவன்தான் அல்லாஹ்.

சிந்தனையாளர்களே! நாம் ஏற்கனவே எழுதியது போல் ஜிபால் என்ற வார்த்தைக்கு செல்வந்தர்கள் என்றும் அகராதி அர்த்தங்கள் வருகின்றன. ஃகாமூஸ் மற்றும் லிஸானுல் அரப் போன்ற அகராதிகளைப் பாருங்கள். இந்த அர்த்தத்தைக் கொடுப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. திருக்குர்ஆனில் பல வாசகங்களில் பூமி ஆடாது அசையாதிருக்க மலைகளை ஆணிகளைப் போல் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. (பார்க்க 78:7) ஆணிகளைப் பெயர்த்து எடுத்துவிட்டால் இப்பூமியின் புவிஈர்ப்பு சிதறி பூமியே சின்னா பின்னமாகிவிடும். அதைத் தொடர்ந்து இங்கு யாரும் உயிர் வாழ முடியாது. ஆனால் திருக்குர்ஆன் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவ நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுகிறது. எனவே நாம் தந்துள்ள அர்த்தமே சிறந்தது.

15சூரியன் சுருட்டப்படும் ?

சிந்தனையாளர்களே! திருக்குர்ஆன் அருளப்படும் கால கட்டத்தில் மக்கமா நகரில் குரைஷியர்களின் ஏகாதிபத்திய ஆட்சியும், வல்லரசு நாடாக இருந்த ஈரான் நாட்டில் ஃகஸ்ரா என்கிற கொடுங்கோலனின் ஆட்சியும் நடைபெற்று வந்தன. குரைஷியர்களின் கொடிச் சின்னம் (ஃகமர்) சந்திரனாக இருந்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே அந்த சந்திரன் பிளந்து அந்த ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது (54-1). ஈரான் நாட்டின் கொடிச் சின்னம் (ஷம்ஸ்) சூரியனாகும். இந்த கொடுங்கோலாட்சி முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அழிக்கப்பட்டது. அதன்பின் அந்நாட்டில் மக்களாட்சி ஏற்பட்டு அதைத் தொடர்ந்து ஏற்படவிருக்கும் மறுமலர்ச்சிப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது.

வரவிருக்கும் காலங்களில் தன்னிச்சையாக நடைபெற்று வரும் ஏகாதிபத்திய ஆட்சிக்குப் பதிலாக குர்ஆனின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களின் கரங்களில் வந்து விட்டால் அந்த காலக் கட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவ்வாறு இருக்கும்.

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ١

81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப் படும் போது –

விளக்கம்: குர்ஆனிய ஆட்சிமுறை ஏற்படும் போது, சூரியனை சின்னமாக நடைபெற்று வரும் ஏகாதிபத்திய ஆட்சிமுறை சுருட்டி வைக்கப்பட்டு விடும்.

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ٢

81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும் போது -

விளக்கம்: அந்த ஆட்சியின் கீழ் இயங்கி வரும் சிறிய அரசமைப்புகளின் ஆதிக்கமும் வலுவிழக்க ஆரம்பிக்கும்.

وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ٣

81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது -

விளக்கம்: செல்வங்களைக் குவித்து வைத்துக்கொண்டு தம்மை அசைக்க முடியாத “மலைகள்” என்ற எண்ணத்தில் இருக்கும் சீமான்களின் நிலையையும் தடுமாற ஆரம்பிக்கும்.

சிந்தனையாளர்களே! மேற்கண்ட திருக்குர்ஆன் வாசகங்களுக்கு நேரடி பொருள் கொண்டால், இந்தப் பிரபஞச்த்தில் வெடிக்கும் மாபெரும் புரட்சி என்றே தெரிகிறது. தற்சமயம் நம்மிடம் உள்ள அறிவை வைத்துக் கொண்டு, அது எப்போது எவ்வாறு ஏற்படும் என்று கணித்துக் கூற இயலாது. ஆனால் மேற்சொன்ன புரட்சிகள் இவ்வுலகிலேயே நடைபெற்றதால் அதற்கு நாம் இவ்வாசகங்களுக்கு உவமானமாகப் பொருள் தந்துள்ளோம்.

16அபாபீல் பறவைகள் தாம் கஅபதுல்லாவைக் காப்பாற்றியதா?

ராஜ தந்திரம் என்பது போல, போர் தந்திரங்களும் முக்கியம் வாய்ந்தவை ஆகும். படைப் பலத்தை விட இந்த தந்திரங்கள் நல்ல பலன்களை ஈட்டித் தரும். இன்றைய நவீன யுத்தங்களும் இதே அடிப்டையில் தான் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த அத்தியாயம் பேசுகிறது. வரலாற்றுக் குறிப்புப் படி அப்ரஹா என்ற படைத்தலைவன் கஅபாவின் கட்டிடத்தை வேரோடு தகர்த்தெறிய எண்ணி ரகசியமாக திட்டமிட்டு பெரிய யானைப் படைகளுடன் கஅபாவிற்கு பக்கத்தில் உள்ள மலைக்குப் பின்புறத்தில் வந்து கூடினான். மறு நாள் காலையில் திடீர் தாக்குதல் நடத்தி அதை அழித்திட வேண்டும் என்பது அவனுடைய சதி திட்டம். ஆனால் அவன் கண்டதோ மிகப் பெரிய தோல்வியே. அது எப்படி என்பதை நாம் பார்ப்போம்.

ஏகாதிப்பத்திய ஆட்சியை நடத்தி வரும் அதிகார வர்க்கம் எப்பொழுதும் தம்மிடமுள்ள பெரிய படைப் பலத்தையே நம்பி தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற நினைப்பில் இருக்கும். ஆனால்

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ١

105:1. (நபியே!) யானை(ப் படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

விளக்கம்: யானைப் படை வீரர்களுடைய நிலைமையை உம்முடைய இறைவன் எவ்வாறு உருமாற்றினான் என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கவில்லையா? இதை அவர்களிடம் கேளுங்கள்.

أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ٢

105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விட வில்லையா?

விளக்கம்:அவர்களுடைய இரகசிய சதி திட்டங்கள் உமது இறைவனின் நியதிப்படி எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பதை நீங்களே பார்த்துக் கொண்டீர்கள் அல்லவா?

அந்த யானைப் படை வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்த மலைக்குப் பின்புறத்தில் இரகசியமாக கூடியிருந்தார்கள்.

وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ٣

105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

விளக்கம்: இறைவனின் நியதிப்படி பருந்துகள் மற்றும் மாமிச பட்சிகளின் கூட்டம் அந்தப் படைகள் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பறந்து வந்தன. இப்படியாக அந்த இரகசிய சதி திட்டம் அம்பலமானது.

பொதுவாக போர் சமயங்களிலோ அல்லது மிருகங்கள் வேட்டையாடும் போதோ, தமக்கு உணவு கிடைக்கும் என்பதை இயல்பாகவே தெரிந்து கொண்டு, அந்தப் பறவைகள் மேல் மட்டத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து வரும். அதே போல் மலைக்கு அப்பால் வழக்கத்திற்கு மாறாக பறவைகள் கூட்டம் கூட்டமாக பறப்பதைக் கண்டு, ஏதோ நிகழ்வதாக மக்காவாசிகளால் யூகிக்க முடிந்தது.

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ٤ فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ٥

105:4-5. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால் அவர்களை மென்று தின்னப் பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.

விளக்கம்: அதன்பின் நீங்கள் மலைகள் மீது ஏறி இரவோடு இரவாக கருங்கற்களை அவர்கள் மீது வீசி எறிந்தீர்கள்.* அந்தக் கூட்டத்தில் யானைகள் தாக்கப்பட்டதால் அவை இங்கும் அங்குமாக ஓடின. இதனால் அங்கு தங்கியிருந்த அந்தப் படைவீரர்கள் யானைகளால் மிதிபட்டு நசுங்கி போனார்கள். இப்படியாக அந்த பறவைக் கூட்டத்திற்கு மென்று தின்ன கூழ் போல சரியான ஆகாரம் கிடைத்து விட்டது.

எனவே படைபலத்தோடு சிந்தனைப் பலமும் என்றென்றும் அவசியம் ஆகும். தரை வழி தாக்குதலை விட வான் வழித் தாக்குதல்கள் எதிரிக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி எளிதில் வீழ்த்திட முடியும் என்பது இந்த அத்தியாயத்திலிருந்து புலனாகிறது. மேலும் மனித நேயம் மற்றும் மனித உரிமைகளை காப்பாற்றுவதற்காகவே போரிடுவதற்கு அனுமதி தரப்படுகிறது. (பார்க்க 22:39) அதுவும் நிர்ப்பந்தம் இருந்தாலொழிய போரிடுவதற்கு அல்லாஹ்வின் சட்டம் அனுமதிப்பதில்லை.

மேலும் தம்மை திருத்திக்கொள்ள எதிர் தரப்பினருக்கு தக்க கால அவகாசமளித்து, போர் அறிவிப்பு செய்து அதன் பின்னரே முறைப்படி போரிடவேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மற்றவர் சதி திட்டங்களை தீட்டுவது, உலகில் குழப்பங்களை ஏற்படுத்துவது, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது, வழிபாட்டுத் தலங்களை நாசமாக்குவது போன்ற செயல்களுக்கு ஒருபோதும் இஸ்லாத்தில் இடமில்லை. (பார்க்க 22:40)உண்மை இவ்வாறிருக்க அபாபீல் பறவைகளுக்கு போரிட வேண்டிய அவசியம் என்ன?

*அந்தப் பறவைகளே கற்களை வானத்திலிருந்து எறிந்ததாக மொழி பெயர்ப்பு செய்கிறார்கள். ‘தர்மீஹிம்’ என்ற சொல் முன்னிலையைக் (Second Personஐ) – “நீங்கள்” என்று குறிக்கும். படற்கையைக் (Third Person)ஐ – பறவைகளைக் குறிக்காது. மேலும் லூத் நபியின் சமுதாயத்தின் மீது, வானத்திலிருந்து பொழிந்த சுடப்பட்ட கற்களுக்கு “அம்தர்னா அலைஹா ஹிஜாரதின் மின் ஸிஜ்ஜீல்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க 11:82, 7:84) அதாவது நாம் அவர்கள் மீது சுடப்படட்ட கற்களை பொழிந்தோம். எனவே தர்மீஹிம் என்பதற்கு நாம் தந்துள்ள விளக்கஉரையே பொருத்தமானது.

17நரக காவலாளிகளாக பத்தொன்பது மலக்குகள்

நரக காவலாளிகளைப் பற்றி திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில், வெவ்வேறு கோணங்களில் சொல்லப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில், நரக காவலாளிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும் இவ்வுலகிலும் இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படும் சமுதாயங்கள் பல துயரங்களை சந்தித்து வருகின்றன. அதுவும் ஒரு வகையில் நரக வேதனைகள் தாம். அதையும் திருக்குர்ஆன் பேசுகிறது. ஆனால் 74ஆவது அத்தியாயத்தில் நரக காவலாளிகள் பத்தொன்பொது பேர் என்று செல்லப்படுகிறது. எனவே நாம் இவ்வுலகில் சந்திக்கின்ற துயரங்கள் மற்றும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வேதனைகள் என இரண்டு வகைகளாக விளக்கம் தந்துள்ளோம்.

سَأُصۡلِيهِ سَقَرَ٢٦

74:26. அவனை நான் “ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

விளக்கம்: இறைவழிகாட்டுதலை ஏற்க மறுத்தவன் தகாத செயல்களை எல்லாம் செய்து வந்தான். எனவே அவன் கடுமையான வேதனைகளுக்கு ஆளாவான்.

وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ٢٧

74:27.“ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

விளக்கம்: அந்த வேதனைகள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று உமக்குத் தெரியுமா?

لَا تُبۡقِي وَلَا تَذَرُ٢٨

74:28. அது (எவரையும்) மிச்சம் வைக்காது. விட்டு விடவும் செய்யாது.

விளக்கம்: அவன் சம்பாதித்து வைத்த செல்வங்கள், பெயர், புகழ் என எல்லாவற்றையும் அது சுட்டுப் பொசுக்கி விடும்.

لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ٢٩

74:29.(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.

விளக்கம்: இதனால் அவமானத்தால் அவனது முகம் கருத்துவிடும். நேற்று வரை அவன் இருந்த நிலை என்ன? இன்று அவனுடைய நிலை என்ன? எல்லாமே உருமாறிவிடும்.

عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ٣٠

74:30.அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு )இருக்கின்றனர்.

விளக்கம்: இப்படியாக அவனுக்கு பத்தொன்பது வகையான வேதனைகள் அவனை வாட்டி எடுக்கும். இதைப் பற்றி பல இடங்களில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ٣١

74:31.அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை. காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள், உறுதி கொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளமால் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்). எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?"எனக் கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான். இன்னும்தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான். அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றொருவரும் அறிய மாட்டார்கள். (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.

விளக்கம்

உலகில் மனிதனுக்குக் கிடைக்கும் இத்தகைய வேதனைகள் யாவும் இறைவன் நிர்ணயித்த “மனித செயல்களுக்கேற்ற விளைவுகள்” என்ற அடிப்படையிலேயே ஏற்படுவதாகும்.

அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் வகையில்தான் பிரபஞ்ச இயற்கைப் சக்திகள் படைக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆனின் அறிவுரைகளை மதிக்காதவர்கள்தாம், இந்த எண்ணிக்கையை வைத்து பல குழப்பங்களை ஏற்படுத்துவார்கள்.

ஆனால் வேதமுடையவர்கள், தங்களுடைய தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகளை எண்ணி திருந்தி கொள்வதற்கும்,

மூஃமின்கள் இவ்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேதனைகளைப் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் அவற்றிலிருந்து மீண்டு கொள்வதற்கும், இதைப் பற்றி குறிப்பிடப்படுகின்றன.

ஆனால் எவர் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அவர்களும்,

இறை நிராகரிப்பவர்களும் இந்த எண்ணிக்கையைக் கொண்டு இறைவன் நாடுவது என்னவென்று எதிர்மறையாகப் பேசுவார்கள். (பார்க்க 2:26)

இப்படியாக வழிதவறி நடக்க நாடுவோர் இறைவனின் நியதிப்படி வழிகேட்டில் சென்று விடுகிறார்கள்.

இறைவழிகாட்டுதலைப் பெற நாடி அதற்கேற்ற வகையில் முயல்பவர்களுக்கு நேர்வழி கிடைத்துவிடுகிறது.

ஆக விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் சக்திகளைப் பற்றி உண்மை, உமது இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

இதைப்பற்றி திருக்குர்ஆனில் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் நோக்கமே அவற்றைப் பற்றி நன்கறிந்து, மனிதன் நேரான வழியில் செல்ல வேண்டும் என்பதே.

இன்றைய கால கட்டத்தில் தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்த சமுதாயத்திலும் வேதனைகள் ஏற்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு சமுதாயத்தில் நிலவி வரும் தீய பழக்க வழக்கங்களால், மனிதனுக்கு இளம் வயதிலேயே ஏற்படும் நோய்களை எடுத்துக் கொள்ளுங்கள். உயிர்கொல்லி நோய், இருதய நோய், புற்று நோய், கைகால் வாதங்கள், பாலியல் நோய், எனப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். மனிதன் பிரபஞ்ச படைப்புகளில் ஒருவனாக இருப்பதால், அந்த இயற்கைச் சக்திகள் இவனுக்குள்ளேயும் செயல்பட்டு வருகின்றன. இவனுடைய தவறான செயல்களால் இவனுடைய உடல்நிலை பாதிப்புக்குள் ஆகின்றன. சில நோய்களுக்கு உடனே சிகிச்சை கிடைத்து விடுகிறது. மற்றும் சில, தீரா நோயாக அவனை வாட்டி வதைக்கின்றன. இதைப் பற்றி ஆராய்ந்து அறிந்து அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முயல வேண்டும். வயதான காலத்தில் ஏற்படும் நோய்கள் மரணத்தை விளைவிப்பதாக உள்ளன. அது “மலக்கு மவுத்” என்பதாகும்.(பார்க்க 32:11)

இரண்டாவதாக உலகில் சமுதாயங்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. சமுதாயங்களின் தவறான செயல்களால் வீழ்ச்சி ஏற்படும்போது, ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த அளவுக்கு அவை கடுமையானதாக இருக்கும்.

மூன்றாவதாக உலகில் நிகழ்கின்ற பூகம்பம், சுனாமி, புயல் காற்று, வெள்ளம், எரிமலைப் பிழம்பு, பஞ்சம் போன்ற வேதனை அளிக்கக்கூடிய அசம்பாவிதங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மனிதன் முயற்சிகளை மேற்கொண்டால், அவனுடைய வாழ்வு சிறக்கும். “சகர்” எனும் வேதனைகளை கூட்டி கழித்து எண்ணிக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தால் அவனுடைய பிரச்சனைகளுக்கு ஒருபோதும் விடுவுகாலம் கிடைக்காது. எனவே இறைவழிகாட்டுதல் இத்தகைய பேராபத்துகளிடமிருந்து மீண்டு வாழ வழி வகுக்கிறது.

நான்காவதாக மனிதனின் வாழ்க்கை மரணத்திற்குப் பின்பும் தொடரக்கூடிய ஒன்றாக இருப்பதால், அவன் உலகில் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப சுவனமும், நரகமும் கிடைக்கும். நன்மையான செயல்கள் மிகைத்திருந்தால் சுவர்க்கம் எனவும், தீயவை மிகைத்திருந்தால் நரகம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (பார்க்க 7:8-9) இவையே இறைவனின் நிலைமாறா சட்டமாகும். அங்குள்ள நரக காவலாளிகளும் பத்தொன்பது வகையாக இருக்கும் என்று புலனாகிறது.

18பூமியிலிருந்து வெளிப்படும் உயிர் பிராணி ?

۞وَإِذَا وَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِمۡ أَخۡرَجۡنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِ‍َٔايَٰتِنَا لَا يُوقِنُونَ٨٢

27:82.அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம், அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லை என்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.

விளக்கம்: உலகில் அநியாய அக்கிரமங்கள் தலை விரித்தாடும் போது, அவற்றை முறியடிக்க ஒரு வீரனோ அல்லது ஒரு ஜமாஅத் கூட்டமைப்போ உருவெடுக்கும். அது பாதிக்கப்பட்டவர்களை ஆதரித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். அந்த அரசு, இறைவனின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்பட்டு வரும் மோசமான நிலைமையைப் பற்றி மக்களிடம் அந்த ஜமாஅத் எடுத்துக் கூறும்.

இந்த வாசகத்தில் தாப்பதன் என்ற வார்த்தை வருகிறது. அதற்கு அர்த்தம் உயிர் பிராணி என்பதாகும். உயிர் பிராணிகளில் மனிதனும் அடங்குவான். (பார்க்க 6:38,11:5,22:18) எங்காவது அநியாயம் நடந்தால் “உங்களைத் தட்டிக் கேட்க ஒரு உசிரு வராமல் போவானா?” என்று நாமும் பேச்சு வாக்கில் கூறுகிறோம். எனவேதான் இந்த வாசகத்தில் வரும் தாப்பதன் என்ற வார்த்தைக்கு மாவீரன் அல்லது ஜமாஅத் என்று பொருள் தந்துள்ளோம். மேலும்

சில நேரங்களில் அத்தகைய அநியாயக்கார நாடுகள், அன்னியர்களின் தாக்குதலுக்கும் ஆளாகும். அப்போது அதை எதிர்கொள்ளும் வலிமையை இழந்து, அந்நாடு தோல்வியைச் சந்திக்கும். அதைத் தொடர்ந்து அச்சமுதாயம் அடிமைப்பட்டு வாழ நேரிடும். இதுதான் காலம் காலமாக நடைபெற்று வந்த உண்மையாகும்.

وَيَوۡمَ نَحۡشُرُ مِن كُلِّ أُمَّةٖ فَوۡجٗا مِّمَّن يُكَذِّبُ بِ‍َٔايَٰتِنَا فَهُمۡ يُوزَعُونَ٨٣

27:83. (அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப் பித்தவர்களை (ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக!).

விளக்கம்: இறைவனின் நிலைமாறா இதே சட்டத்தின் படியே இறைவழி காட்டுதலைப் பொய்ப்பிக்கும் ஒவ்வொரு சமூகத்தவர்களுக்கும் எதிராக சீர்த்திருத்தப் பாதுகாப்புப் படைகள் உருவெடுத்து வரும். சில சமயங்களில் இதுவே பன்நாட்டுப் படையாக உருவெடுத்து, உலக யுத்தங்கள் என்ற ரூபத்தில் உருவெடுக்கும். ஒரு பிரிவு மற்றப் பிரிவின் ஆதிக்கத்தை ஒடுக்க போராடும்.

19அற்புதமும் திருக்குர்ஆனும்

وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَٰتٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ٥٠

29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

மக்களில் சிலர் தம் இறைவனிடமிருந்து இறைத்தூதர் மீது ஏன் அற்புதங்கள் எதுவும் இறக்கப்படவில்லை என்ற கேள்விகளையே கேட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ் நம்மிடம் ஏன் நேரடியாக வந்து பேசுவதில்லை என்றும் கேட்பார்கள். (பார்க்க 2:119) அல்லாஹ்வின் எண்ணற்ற படைப்புகளின் அற்புதங்கள் அவர்களின் கண்ணெதிரே இருக்கும் போது, அவற்றை அவர்கள் கவனிக்க மாட்டார்கள்.

எனவே அவர்கள் எதிர்பார்க்கும் கண்கட்டி மாய வித்தைகளை செய்து காட்டுவது என் பணி அல்ல. மாறாக தவறான செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்யவே வந்துள்ளதாக அவர்களிடம் கூறிவிடுங்கள்.

அதாவது அல்லாஹ் படைத்த உலகில் மாயாஜால கண்கட்டி வித்தைகளை செய்துக் காட்டக்கூடிய ஏற்பாடுகள் உள்ளன. அது ஒரு கலை என்றே சொல்லலாம். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவை எல்லாம் கண நேர சந்தோஷத்தை மட்டும் தர வல்லது. இறைவனின் வழிகாட்டுதலோ ஒட்டு மொத்த மனித இனத்தின் தற்காலிக மற்றும் நிலையான சந்தோஷமான வாழ்க்கைக்கு வேண்டிய வழியை காட்டுகிறது. அவற்றை எடுத்துரைக்கத் தான் நபிமார்கள் வந்தார்கள். மாயாஜால வித்தைகளை செய்து காட்ட அல்ல.

20முடிவுரை;

அன்பர்களே! நபிமர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து திருமறை வேதத்தில் வரலாற்று உண்மைகள் எடுத்துரைக்கப்படுகிறது. ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் அவற்றை கற்பனை காவியமாக ஆக்கி குர்ஆனை மஹ்ஜூரா ஆக்கிவிட்டார்கள். எனவே நாம் திருக்குர்ஆனின் தெளிவுரை கொடுக்கும் போது அனைத்து வரலாற்று உண்மைகளையும் எதார்தத்திற்கு உட்பட்டு (Rational approach) தந்துள்ளோம். மேலும்

ஈஸா நபியின் பிறப்பு, இறப்பு மற்றும் மீண்டும் உலகிற்கு வருகை தருதல் போன்ற விஷயங்களை நாம் ஈஸா நபியின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில் பதிவிட்டு இருக்கிறோம். அதை படித்து அனைத்தையும் அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் ஓரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறோம். அதாவது உலகிற்கு வருகை தந்த நபிமார்கள் அனைவரும் சமுதாயத்தில் நிலவிவந்த சீர்கேடுகளை அகற்றி இறைவனின் வழிகாட்டுதலின் படி தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கிட அரும்பாடுபட்ட சீர்திருத்தவாதிகளே ஆவார்கள். மாயா ஜால வித்தைகளை காட்டி மார்க்கத்தை பரப்ப வந்த மந்திரவாதிகள் அல்ல.

அன்பர்களே! உலக படைப்புகளை சற்று ஆராய்ந்து பாருங்கள். அவற்றில் ஓவ்வொன்றும் அற்புதமான படைப்புகளாக இருப்பதை அறிவீர்கள். அத்தனை ஏன்? சூரிய குடும்பத்தில் இயங்கி வரும் நவக்கிரகங்கள் மற்றும் நவக்கிரகங்களை சுற்றி அமைந்துள்ள துணை கோள்கள் மற்றும் அவற்றின் ஓவ்வொன்றின் செயல்பாடுகளையும் ஆராயும் விஞ்ஞானிகளுக்கு அற்புதத்திலும் அற்புதமாக இருப்பதை பார்த்து வியந்து பாராட்ட வார்த்தைகளே இல்லை என்கின்றனர். (பார்க்க - 67:3&4) ஆனால் நம் ஆலிம்களோ வரலாற்று உண்மைகளை காவியமாக மாற்றி மக்களின் சிந்தனையை முறியடித்து விடுகின்றனர்.