۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
தலைப்பு வாரியான நூல்கள்

நான் அல்லாஹ்வை சந்தித்தால்?

27 பகுதிகள்  ·  221 வசனங்கள்

2அல்லாஹ் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியது

(“ஓ! மானிடா!’ என்ற ஓசை வந்தது. நான் திடுக்கிட்டு எங்கிருந்து ஓசை வருகிறது என இங்கும் அங்குமாக தேடி அலைந்தேன். (27:8) எனக்குள் உள்ளூர பயமும் ஏற்பட்டது. அதன் பின் மீண்டும் ஓசை வந்தது.)

۞
அல்லாஹ்நான் தான் அல்லாஹ்
?
கேள்விஅல்லாஹ்வா? அல்லாஹ் என்றால் யார்?
۞
அல்லாஹ்அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் நான் தான். (20:14)
?
கேள்விபரிபாலிப்பவனா? அப்படி என்றால் என்ன?
۞
அல்லாஹ்என்னுடைய ஒவ்வொரு படைப்பும் தன் ஆரம்ப நிலையிலிருந்து இறுதி இலக்கு வரை சென்றடையத் தேவையான அனைத்து உபக்கரணங்களையும் ஏற்பாடு செய்பவன்.
?
கேள்விஅப்படியா எனக்கு ஒன்றும் புரியவில்லையே. ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
۞
அல்லாஹ்குழந்தை பிறந்ததும் அதற்கு தேவை தாய்ப் பால். அதற்கு ஏற்பாடு செய்பவன் நான் தான். (31:14) அக்குழந்தை சற்று வளர்ந்ததும் அதற்கு தேவையான உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்கிறேன். இப்படியாக அவன் வளர்ந்து முழு மனிதனாக ஆகும் வரை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்பவன் நான் தான்.
?
கேள்விஅவை எல்லாம் இயற்கை படைப்புகள் தானே. அவற்றிலிருந்து தானே அனைத்தும் கிடைக்கின்றன.
۞
அல்லாஹ்உண்மைதான். ஆனால் அந்த இயற்கை படைப்புகளை படைத்தது நான்தானே. அதைப் பற்றி நீ சிந்திக்கவில்லையே!
?
கேள்விஆமாம். உன் இயற்கைப் படைப்பின் வல்லமைப் பற்றி சிந்திக்காதது என் தவறுதான். நீ படைத்த மற்ற படைப்புகளை சற்று விவரமாக சொல்ல முடியுமா?
۞
அல்லாஹ்உன்னை சுற்றியுள்ள பல்வேறு மரங்கள் மற்றும் செடி கொடிகளை (6:99) கவனிக்கமாட்டாயா? அது மட்டுமா பலவேறு நிறங்களுடைய மலைகள் (35:27) அதினின்று ஓடும் ஆறுகள் (13:17), வானத்தில் கதிர் வீச்சுடன் கூடிய சூரியன் மற்றும் ஒளி வீசும் சந்திரன். (10:5), வானில் மின்னும் லட்சோப லட்சம் நட்சத்திரங்கள் (41:23) என அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை எல்லாம் எண்ணி உன்னால் கணக்கிட முடியாது.(18:109)
?
கேள்விஅமாம் உண்மைதான். ஆனால் இயற்கை படைப்புகள் என்றதும் எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. அதாவது மனிதனும் புதிய புதிய பொருட்களை உருவாக்கிக் கொண்டுதானே இருக்கிறான். இதில் உன் பங்கு என்ன?
۞
அல்லாஹ்அது உண்மைதான். ஆனால் அவன் படைக்கும் ஒவ்வொரு படைப்புக்கும் மூலப் பொருட்கள் அவசியமாகின்றன. அந்த மூலப் பொருட்களை படைத்தது நான் தானே. (2:29)

மூலப் பொருட்களின் துணையின்றி மனிதனால் எதையும் படைக்க முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். (No thing can be made out of nothing) இதுதான் அல்லாஹ்வின் அளவற்ற வல்லமையும் மனிதனின் எல்லைக் கோடும் ஆகும்.

3அல்லாஹ்வை பார்க்க முடியுமா?

?
கேள்விஇவை அனைத்தையும் செய்யக்கூடிய நீ ஏன் என் கண் முன் தோன்றக் கூடாது? உன்னை பார்க்க வேண்டும் என்ற அளவு கடந்த ஆசை எனக்கு இருக்காதா?
۞
அல்லாஹ்உனக்கு மட்டும் அல்ல. எல்லோருக்கும் இருக்கும். ஆனால் என்னை யாராலும் பார்க்க முடியாது.
?
கேள்விஏன் உன்னை என்னால் காண முடியாது?
۞
அல்லாஹ்அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் சகல வல்லமையும் உடையவன் நான். நீ வாழும் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அளவே என் வல்லமையை வெளிப்படுத்துகிறேன். நீ என்னை காணவேண்டும் என்றால் என்னை நானே உருவகப்படுத்தி உன் கண் முன் தோன்ற வேண்டும். அவ்வாறு செய்தால் நீ வாழும் இடமே சின்னாபின்னமாகி விடும். என்னை காண வேண்டும் என்ற ஆசை மூஸா நபிக்கும் இருந்தது (7:143)
?
கேள்விஅளவிலா வல்லமை உடைய உன்னை காண வேண்டும் என்று மக்களுக்கும் ஆசை இருக்காதா?
۞
அல்லாஹ்ஒரு கட்டத்தில் இஸ்ரவேலர்கள் என்னை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர் (2:55) அதன் பின் என் வல்லமையின் சான்றை கடுகளவு வெளிப்படுத்தினேன். அவர்கள் அருகில் இருந்த மலை வெடித்து சிதறி எரிந்து விட்டது. அதை அடுத்து அனைவரும் மூர்ச்சை ஆனார்கள் (7:155)
?
கேள்விஏன் அவ்வாறு நடந்தது?
۞
அல்லாஹ்சகல வல்லமைகளை உடைய நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவில் வல்லமையை வெளிப்படுத்தியதன் விளைவுதான் அந்த சம்பவம். மேலும் உன் முன்பாக ஒரு குறிப்பிட்ட உருவத்தில் தோன்றினால் அதே போல் உருவ பொம்மைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விடுவாய். அதனால் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. எல்லாம் உனக்குத் தான்.
?
கேள்விஎனக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? உன்னை சந்தோஷப்படுத்த ஒரு உருவ அமைப்பு இருப்பது நல்லதுதானே?
۞
அல்லாஹ்உருவமே இல்லாத சகல வல்லமையும் உடைய என்னை ஒரு குறிப்பிட்ட உருவ அமைப்பில் கொண்டு வந்துவிட்டால் நீ உழைப்பதை விட்டுவிட்டு அந்த உருவத்தின் முன்பாக நின்றுக் கொண்டு உன் தேவைகளை நிறைவேற்றித் தரும்படி மன்றாடிக் கொண்டு இருப்பாய். (13:14) இவ்வாறு செய்வதால் உனக்கு ஒரு பலனும் கிடைக்காது.
?
கேள்விஉன்னை காண வேண்டும் என்று முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் ஆசை இருந்ததா?
۞
அல்லாஹ்என்னை ஒரு போதும் காண முடியாது என்று அறிவித்து அவருடைய ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். (6:103)

4அல்லாஹ்வை சந்திக்க முடியுமா?

?
கேள்விஅது சரி. உன்னை சந்திப்பதை நம்பாதவர்கள் நரகவாசிகள் ஆவார்கள் என்று அறிவித்து இருக்கிறாயே (10:7&8) எப்படி?
۞
அல்லாஹ்நான் எத்தனை முறை சொல்வது? எனக்கு ஒரு குறிப்பிட்ட உருவம் இருந்தால் தானே என்னை சந்திப்பதற்கு. உருவமே இல்லை எனும் போது என்னை எப்படி சந்திக்க முடியும்?
?
கேள்விசரி. உன்னை சந்திப்பதைப் பற்றி நான் எப்படிதான் பொருள் கொள்வது? அதைப் பற்றி நீ என்னதான் சொல்கிறாய்?
۞
அல்லாஹ்மனிதனுடைய எந்தெந்த செயல்களுக்கு என்ன பலன்கள் அல்லது விளைவுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கனவே தீர்மானித்து விட்டேன். அதாவது நற்செயல்களுக்கு நற்பலன்கள் தீய செயல்களுக்கு தீய விளைவுகள் என்ற சட்ட விதிமுறைகளை உருவாக்கி விட்டேன். அந்தந்த செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை சந்தித்துக் கொள்வதைத் தான் என்னை சந்திப்பதாக அறிவித்தேன். (Every Action has its own equivalent opposite reaction)
?
கேள்விசரி. நான் மரணித்த பின் உன்னை சந்திக்க முடியுமா?
۞
அல்லாஹ்மரணித்த பின்பும் நான் விதித்த விதிமுறைகளின்படி உன் செயலுக்கு ஏற்றவாறு பலன்களை/விளைவுகளை சந்திப்பதைத் தான் என்னை சந்திப்பது என்று பொருள்.
?
கேள்விஅந்த விதிமுறைகள் என்ன?
۞
அல்லாஹ்உன் வாழ்நாள் செயல்களின் பதிவேட்டில் நற்செயல்களின் எடைத்தட்டு மிகைத்திருந்தால் சுவர்க்கத்திற்கு செல்வாய். தீமைகளின் எடைத்தட்டு மிகைத்திருந்தால் நரக வேதனைகளை அனுபவிக்க நேரிடும் (7:7-9) (23:102&103)
?
கேள்விஆமாம். மனித செயல்களின் அளவுக்கோல் என்ன?
۞
அல்லாஹ்செயல்கள் கடுகளவே இருந்தாலும் உலகின் எந்த பகுதியில் செய்திருந்தாலும் (10:61 & 35:16) நன்மை பயக்கும் செயல்கள் நற்செயல்களின் ஏட்டிலும தீய செயல்கள் தீ செயல்களின் ஏட்டிலும் இருக்கும்.(99:7&8)
?
கேள்விகணக்கெடுப்பதில் அவ்வளவு கடுமையான திட்டமாக இருக்கே. மிகவும் பயமாக இருக்கு. சரி. மரணத்திற்குப் பின் மனிதனிடம் பேசுவது போல் சில அறிவிப்புகளை செய்து இருக்கிறாயே (6:30)
۞
அல்லாஹ்அவை யாவும் மரணத்திற்குப் பின் மனிதனின் அவல நிலை குறித்து இருக்கும். அதை வஹீ மூலம் முன்கூட்டியே செய்த உண்மை அறிவிப்புகளாகும். காரணம் மரணத்திற்குப் பின் யாரும் இவ்வுலகில் உள்ள யாரிடமும் அறிவிக்க முடியாதே. அதனால் நான் முன்னெச்சரிக்கை செய்தியாக முன்கூட்டியே அறிவித்துவிட்டேன்.
?
கேள்விஏன் அவ்வாறு செய்தாய்?
۞
அல்லாஹ்தன் சுய விருப்பப்படி செயல்பட மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்த நான் (6:35) அவனுடைய செயல்களுக்கு உரிய விளைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சக்தியை யாருக்கும் நான் அளிக்கவே இல்லை. (18:29)
?
கேள்விஉன்னிடமே திரும்பி செல்ல வேண்டி வரும் என்று அறிவித்து இருக்கிறாயே (2:46)
۞
அல்லாஹ்நான் இல்லாத இடமே இல்லை எனும்போது (58:7) என்னை தேடி எந்த இடத்திற்கு செல்வாய்? நான் சொன்ன விஷயமே வேறு.
?
கேள்விஆமாம். அதை கவனிக்க தவறிவிட்டேன். அந்த வசனத்தை எப்படி புரிந்துக் கொள்வது?
۞
அல்லாஹ்நான் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு எதிராக மனித எவ்வளவு தான் செயல்பட்டாலும், அவனது பிரச்சினைகள் தீர அவன் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நான் அறிவித்த வழிகாட்டுதலின் பக்கமே திரும்பி வந்தாக வேண்டும். இதுதான் அதன் பொருள் ஆகும்.
?
கேள்விகடைசி உன்னை சந்தோஷப்படுத்த என்னதான் வழி?
۞
அல்லாஹ்என்னை சந்தோஷப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நான் எப்போது துக்கத்துடனோ வருத்தத்துடனோ இருக்கிறேன் என்று

நீ என்னை சந்தோஷப்படுத்த? துக்கம் சந்தோஷம், மறதி, கோபம், சிறிப்பு ஆகியவை எல்லாம் மனித சரீரத்தில் உள்ள தன்மைகளாகும். இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான்.

5ஈமான் கொண்ட முஸ்லிம்களின் நிலை

?
கேள்விஅகிலங்கள் அனைத்திலும் உன் ஆதிக்கமே செயல்படும் போது, உன் மீது ஈமான் கொண்ட முஸ்லிம்களின் நிலைமை ஏன் மிகவும் மோசமாக உள்ளது? உலக அரங்கில் முஸ்லிம்கள் யாவரும் துயரத்தில் சிக்கி உள்ளார்களே?

அல்லாஹ: என் மீது ஈமான் கொண்டால் மட்டும் போதுமா? (29:2&3) உலக படைப்புகள் எல்லாம் மனிதனின் தேவைகளை நிறைவேற்றவே படைத்துள்ளதாக எத்தனை இடத்தில் குர்ஆன் மூலம் அறிவித்து இருக்கிறேன். (16:12-14) (31:20) (39:5) அவற்றை எல்லாம் அராய்ந்து பயனடைய சொல்லியிருக்கிறேனே (3:190&191) அதை விட்டு விட்டு என்னை சதா கூவிக்கொண்டு இருந்தால் நான் எப்படி நேரடியாக உதவி செய்ய முடியும்?

?
கேள்விமுஸ்லிம்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாயா?
۞
அல்லாஹ்நான் ரப்புல் ஆலமீனாக இருக்கிறேன். அதாவது அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிப்பவன். (1:2) (10:10) ரப்புல் முஸ்லிமாக இல்லை. முஸ்லிம்களை மட்டும் பரிபாலிப்பவன் அல்ல. எனவே முஸ்லிம்களுக்கு என்று தனிப்பட்ட சலுகை எதுவும்

இல்லை.(17:18-20) (53:29)

?
கேள்விஅப்போ உன்மீது ஈமான் கொள்வது வீண்தானே?
۞
அல்லாஹ்என் மீது ஈமான் கொண்டால்தான் என் புறத்திலிருந்து அருளப்பட்ட வேத அறிவுரைகள் உனக்கு கிடைக்கும். அவ்வேத அறிவுரைகளின் படி வாழ்ந்தால் தானே உன் வாழ்க்கையில் ஏற்படும்

சிக்கல்களிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும்.

?
கேள்விஏன்? உன்னால் நேரடியாக முஸ்லிம்களை உதவி செய்ய முடியாதா?
۞
அல்லாஹ்அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும்

அளவிலா வல்லமை உடையவன் நான். என்னால் உனக்கு உதவ முடியாதா? என் செயல்திட்டம் அவ்வாறு இல்லை. மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்ததோடு அவனுக்கு சிந்தித்து செயலாற்றும் தகுதியையும் (32:9) அளித்து அவனுக்கு நபிமார்கள் மூலம் நேர்வழியும் காட்டி இருக்கிறேன். (17:9) அதன் படி செயல்பட்டால் தான் மனிதனுக்கு அனுகூலங்கள் கிடைக்கும். (பார்க்க 4:175)

6மனித படைப்பு எதற்காக?

?
கேள்விமனிதனை எதற்காகத் தான் படைத்தாய்?
۞
அல்லாஹ்இது ஒரு முக்கியமான கேள்வி. அகிலங்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் யாவும் என் கட்டளைக்கு சிரம் பணிந்து செயல்பட்டு வருகின்றன. (16:49&50) என் படைப்புகளில் ஒன்றாகிய சுதந்திர மனிதனும் தன் முழு விருப்பத்துடன் என் கட்டளைக்கு இணங்கி வாழ வேண்டும். (7:3). இதுதான் மனிதனை படைத்ததன் நோக்கமாகும்.
?
கேள்விஅவ்வாறு வாழ்வதால் என்ன பயன்?
۞
அல்லாஹ்உன் வாழ்வில் துக்கமோ துயரமோ நெருங்காது. (2:36) (2:62) உன் வாழ்வில் எல்லா விதமான சந்தோஷங்களும் கிடைக்கும்.
?
கேள்விமனிதனோ ஜின்களோ உன்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளதாக சொல்லி இருக்கிறாயே. (51:56)
۞
அல்லாஹ்நான் ஒன்றும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. عبد அப்து என்றால் அடிமை. அதாவது என் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படுவது என்று பொருள்.
?
கேள்விஉனக்கு ஏன் அடிபணிந்து செயல்பட வேண்டும்?
۞
அல்லாஹ்எல்லாம் உன் நன்மைக்காகத் தான்.
?
கேள்விஎல்லாம் என் நன்மைக்காகத் தான் என்றால் அப்படியே படைத்து இருக்கலாமே! ஏன் தீமை விளைவிக்கும் விதமாகவும் படைத்தாய்?
۞
அல்லாஹ்நான் நாடியிருந்தால் மற்ற உயிரினங்களைப் போல் மனிதனையும் ஒரு குறிப்பிட்ட திசையில் வாழும்படி படைத்து இருக்கலாம். (11:118) அவ்வாறு படைப்பதில் எனக்கு சிறிதளவும் சிரமம் இல்லை. அவ்வாறு படைத்திருந்தால் மனிதனுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம் பறி போயிருக்கும். நீயும் மற்ற உயிரினங்களைப் போல் தத்தம் இயல்பின் அடிப்படையில் வாழ்ந்து இருப்பாய். உன்னில் எந்த முன்னேற்றமும் இருந்திருக்காது.
?
கேள்விஉன்னுடைய செயல் திட்டம்தான் என்ன?
۞
அல்லாஹ்மனித படைப்பாகிய உனக்கு பார்வைப் புலன், கேட்கும்

திறன் மற்றும் சிந்தித்து செயல்படும் திறமைகளை அளித்துவிட்டு (17:36) கூடவே மற்ற எந்த படைப்புக்கும் அளிக்காத முழு

சுதந்திரத்தையும் அளித்து இருக்கிறேன். (32:9)

?
கேள்விஇதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?
۞
அல்லாஹ்உனக்கு நான் அளித்துள்ள ஐம்புலன்களையும் பயன்படுத்தி நான் என் தூதர் மூலம் காட்டிய வழிமுறைப்படி நீ வாழந்து வர வேண்டும். தெளிவில்லாத விஷயங்களில் மூழ்கி விடக்கூடாது. (17:36)
?
கேள்விஉன் வழிகாட்டுதலின்படி வாழ்ந்தால் பல சிக்கல்கள் வரும் என்றும் வாழ்வில் துயரங்களை சந்திக்க நேரிடும் என்றும் அறிவித்து

இருக்கிறாயே (2:214)

۞
அல்லாஹ்அகிலங்கள் அனைத்திலும் என்னுடைய ஆதிக்கமே நடைபெறுகிறது. மனித உலகிலும் என்னுடைய மேலாண்மையே நடைபெற வேண்டும். அதாவது என் விருப்பப்படி மனித கரங்களால் நான் காட்டிய வழியில் ஆட்சி நடைபெற வேண்டும். அத்தகைய ஆட்சிமுறையை ஏற்படுத்தும் போது சமூக சீர்கேடுகளை நீக்க வேண்டி வரும். அதனால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். (2:155)

அதன் பின் சந்தோஷங்களே.

?
கேள்விஇது எனக்கு தேவையா? ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடாமல் நான் ஏன் வீணாக சிரமங்களுக்கு ஆளாக வேண்டும்?
۞
அல்லாஹ்உலகில் மனிதன் தன் விருப்பம் போல் ஆட்சி செய்து நிம்மதியான சமுதாயத்தை உருவாக்கவே முடியாது. நடைமுறை உலகமே இதற்கு சாட்சி. இதை இப்படியே தொடர விட்டால் நாட்டில் (உலகில்) கலகம், கலவரம் யுத்தம் என்று பல சிக்கல்கள் உருவாகி

வரும். அதில் நீயும் சிக்கிக்கொள்வாய். (2:24)

7அல்குர்ஆன் – இறை வேதம்

?
கேள்விஉன் வழிகாட்டுதல்கள் எனக்கு எங்கு கிடைக்கும்?
۞
அல்லாஹ்நான் அளித்துள்ள வேத அறிவுரைகளில் கிடைக்கும் (6:92)

.

?
கேள்விவேதமா? அது என்ன?
۞
அல்லாஹ்நான் அகிலங்களைப் படைத்து பரிபாலிக்க நிலைநிறுத்திய சட்ட விதிமுறைகளை அறிவிக்கும் நூல்தான் வேதம் என்பதாகும்.
?
கேள்விஅந்த வேதத்திற்கு பெயர் இல்லையா?
۞
அல்லாஹ்உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நான் வேத அறிவுரைகளை அருளி இருக்கிறேன். (14;4) அந்தந்த மொழியில் அதற்கு பெயர் இருக்கும்.
?
கேள்விஉன்னிடமிருந்து அந்த வேத அறிவுரைகளை யார் கொண்டு வந்தது?
۞
அல்லாஹ்ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேத அறிவுரைகளை அனுப்பி வேத்தேன். (2:151)
?
கேள்விஅப்படியா? அந்த தூதர்களுக்கு அவ்வேத அறிவுரைகள் எவ்வாறு கிடைத்தன?
۞
அல்லாஹ்என்னுடைய ஏற்பாட்டின்படி ஜிப்ரீல் எனும் மின்னணு அலை ஓசையின் மூலம் நபிமார்கள் உள்ளத்தில் அருளினேன். (2:97)
?
கேள்விஇப்போதும் உன் தூதர்கள் மூலம் உன் வழிகாட்டுதல்களை அளிக்கின்றாயா?
۞
அல்லாஹ்இல்லை. இறுதியாக அரபு நாட்டை சேர்ந்த முஹம்மது என்பவர் மூலம் (47:2) அரபி மொழியில் அருளினேன். (33:40) அவர் மூலம் நிறைவான வேத அறிவுரைகளை அறிவித்து விட்டேன். (5:3)
?
கேள்விஏன் அவ்வாறு செய்தாய்? தமிழ் நாட்டை சேர்ந்த நான் என்ன பாவத்தை செய்தேன்? நான் பேசும் மொழியில் ஏன் உன் அறிவுரைகளை அறிவிக்கவில்லை?
۞
அல்லாஹ்மொழி வல்லுனர்களை வைத்து நீ பேசும் மொழியிலும் மொழிபெயர்த்து தந்துள்ளேன். அதை நீ படிக்கவில்லையா? உனக்கு ஒரு கடிதம் வந்தால் ஓடி பிடித்து அதை படித்து விஷயங்களை தெரிந்துக் கொள்கின்றாய். ஆனால் என்னிடமிருந்து வந்த வேத அறிவுரைகளை படிக்க உனக்கு நேரமே இருப்பதில்லையா?
?
கேள்விஎன் தாய் மொழியிலா? அதற்கு என்ன பெயர்?
۞
அல்லாஹ்அரபி மொழியில் அருளிய வேதத்தின் பெயர் கூட உனக்குத் தெரியாதா? அதன் பெயர் “அல் குர்ஆன்” என்பதாகும்.

8திருக்குர்ஆனில் முரண்பாடுகள்?

?
கேள்விஅதுவா? அதைப் படித்தால் ஒன்றுமே புரியவில்லையே. முன்னுக்குப் பின் முரணாக இருக்கே.
۞
அல்லாஹ்என் வேதத்தில் முரண்பாடுகள் எதுவும் இல்லை. (4:82) மொழி பெயர்ப்புகளில் சில கோளாறுகள் இருக்கின்றன.
?
கேள்விமொழிபெயர்ப்புகளில் கோளாறா? அது எப்படி?
۞
அல்லாஹ்என்னையும் ஓர் அரசனைப் போல் பாவித்து அர்த்தம் எழுதி விட்டார்கள். மேலும் ஒவ்வொரு மொழியும் இலக்கிய நடையிலும் உவமான வடிவிலும் பேசும். அவ்வாறே அரபு நாட்டு மக்களும் இலக்கிய நடையில் பேசினார்கள். அவர்கள் பேசிய அரபி மொழியிலேயே வேதத்தை அருளினேன் (42:7&46:12).ஆனால் மொழியாக்கம் செய்தவர்கள் அவ்வசனங்களுக்கு நேரடி அர்தத்தை எழுதி அனர்த்தம் ஆக்கிவிட்டார்கள். (3:7)
?
கேள்விஇதற்கு எதிராக நீ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
۞
அல்லாஹ்மனிதன் செய்யும் தவறான செயல்களுக்கு உடனடியாக தண்டனை அளிக்கும் திட்டம் என்னிடம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் இந்த பூமியில் யாரும் உயிர் வாழ்ந்திருக்க முடியாது. (16:61) எல்லாமே முடிந்திருக்கும். எனவே நான் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் கால அவகாசம் கொடுத்துள்ளேன்.
?
கேள்விஅது சரி. இப்போது உன் வேத அறிவுரைகளை சரியாக புரிந்துக்கொள்ள என்ன ஏற்பாடு செய்துள்ளாய்?
۞
அல்லாஹ்என்னுடைய அடியார் ஒருவர் மூலம் “திருக்குர்ஆன் தெளிவுரை” என்ற பெயரில் என் வேதத்தை விவரமாக எழுதி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதைப் படித்து வேத உண்மைகளை அறிந்துக்கொள்.
?
கேள்விதிருக்குர்ஆன் தெளிவுரையா? அது எங்கே கிடைக்கும்?
۞
அல்லாஹ்எதையும் தீர விசாரித்து தேடினால் தான் கிடைக்கும். அமர்ந்த இடத்திலேயே எல்லாமே கிடைக்க வேண்டும் என்று ஆயிரம் தான் விரும்பினாலும் ஒரு போதும் உனக்கு கிடைக்காது. (13:14)

9அல்லாஹ்வின் அர்ஷ்

?
கேள்விஅது சரி. வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஆறு நாட்கள் ஆயிற்றாமே?
۞
அல்லாஹ்“யவும்” என்ற அரபி வார்த்தைக்கு நேரம் என்று பொருள். அந்த நேரம் நாட்களாகவும் இருக்கலாம் யுகங்களாகவும் இருக்கலாம். என்னுடைய ஒரு நாள் என்பது உன் கணக்குபடி 50 ஆயிரம் வருடங்களாகும். (74:4) அதாவது உலகத்தை பல படித்தரங்களை கடக்கச் செய்து நீண்ட கால திட்டத்தின் கீழ் படைத்துள்ளேன்.
?
கேள்விஆறு நாட்கள் என்பது சரி இல்லையா?
۞
அல்லாஹ்ஒருபோதும் சரியில்லை. காரணம். நான் சூரிய குடும்பத்தை படைத்து அதில் பூமியை பூரணமாக படைத்த பின்புதான் 24 மணி நேரம் கொண்ட நாள் என்று உருவானது. இதற்கு முன்பெல்லாம் நாள் கணக்கு இருந்ததில்லை. இல்லாத ஒன்றை நான் வேதத்தில் அறிவிப்பேனா?
?
கேள்விஆறு நாட்கள் என்பதன் உண்மையான பொருள் என்ன?
۞
அல்லாஹ்ஆறு காலக் கட்டங்கள் என்று பொருள். ஒவ்வொரு காலக் கட்டமும் நிறைவு பெற யுகங்கள் பல கடந்துவிட்டன.(32:5)
?
கேள்விஏன் இப்படி? ஆகுக என்றால் ஆகிவிடும் என்று சொல்லி இருக்கின்றாயே. (2:117)
۞
அல்லாஹ்“ஆகுக” என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தியதாக பொருள் கொள்கிறாயா? அப்படியே நான் சொன்னதாக பொருள் கொண்டாலும் எதைப் பார்த்து நான் சொல்லி இருப்பேன்? அல்லது யாரைப் பார்த்து சொல்லி இருப்பேன்.?
?
கேள்விமென்மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றாயே!
۞
அல்லாஹ்ஒரு குழப்பமும் இல்லை. எல்லாம் மொழிபெயர்ப்பால் வந்த வினை. அதாவது “குன்” ஆகுக என்றால் “ஒரு படைப்பை உருவாக்கும் திட்டம் இருந்தால்” என்று பொருள்.
?
கேள்விசரி. நான் இதை ஒப்புக்கொள்கிறேன். காரணம்: எல்லாவற்றையும் நீதானே படைத்தாய். “ஆகுக” என்றால் உடனே ஆகிவிடும் என்று சொல்லி இருக்கன்றாயே! (2:117)
۞
அல்லாஹ்“உடனே” என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பாளர்கள் இணைத்துக் கொண்டார்கள். (3:47) “குன்” என்றால் ஒரு படைப்பு என் செயல்திட்டப் படி உருவாக இருந்தால் “ஃபயகூன்“ அது நிர்ணயிக்கப்பட்ட கால அளவுபடி” உருவாகி வரும் என்று பொருள்படும்.
?
கேள்விஇதை ஒரு உதாரணத்தை மேற்கோள்காட்டி விளக்கினால் புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
۞
அல்லாஹ்பூமியை இரண்டு நாட்களில் படைத்ததாக மொழியாக்கம் செய்து இருக்கிறார்கள். (41:9) இதை இரண்டு காலக் கட்டங்கள் என்று பொருள் கொண்டால் உனக்கு தெளிவு கிடைக்கும். அதாவது பூமி ஒரு கட்டத்தில் கடிய சூடுள்ள சகதியாகவும் அதை சுற்றி வாய்வு மண்டலமாகவும் இருந்தது (41:11) அப்படி ஒரு காலக் கட்டம். அதன் வெப்பம் தணிவதற்கு யுங்கள் பல கடந்தன. அவ்வாறு கடந்த பின் இந்த பூமியில் உயிரினங்கள் உருவாவதற்கு ஏற்ற நிலையை அடைந்தது. இது இரண்டாவது தற்போதைய காலக் கட்டம். ஆக இரண்டு காலக் கட்டங்கள்.
?
கேள்விஅது சரி நான்கு நாட்களில் உணவு சீர் செய்ததாக சொல்லி இருக்கிறாயே (41:10)
۞
அல்லாஹ்அதுவா? நான்கு நாட்கள் என்பது நான்கு பருவக் காலங்களை குறிக்கும். அந்தந்த பருவக் காலங்களில் தான் பல்வேறு விதமான தானிய வகைகள் மற்றும் கனி வகைகளை விளையச் செய்கிறேன்.
?
கேள்விஆக ஆறு காலக் கட்டங்களை எவ்வாறு கூறலாம்?
۞
அல்லாஹ்இரவு பகல் என்ற இரு காலக் கட்டங்கள் மற்றும் நான்கு பருவக் காலங்கள். ஆக ஆறு காலக் கட்டங்கள் ஆகும்.
?
கேள்விஉன் அர்ஷ் (சிம்ஹாசனம்) தண்ணிரின் மீது இருக்கிறதாமே? (11:7)
۞
அல்லாஹ்மனிதன் எண்ணி இருப்பது போல் நான் ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டு இருக்கவில்லை. “அர்ஷ்” என்பது கட்டுப்படுத்தும் என் வல்லமையை குறிக்கும் சொல்லாகும்.
?
கேள்வி11:7 வாசகத்தை எப்படிதான் புரிந்துக் கொள்வது?
۞
அல்லாஹ்பூமியில் வாழும் அல்லது உருவாகும் உயிரினங்களுக்கு நீராதாரம் அவசியமான ஒன்றாகும், அதை நானே மழை நீராக பொழிய வைக்கிறேன்.(15:22) நீர் ஆதாரத்தின் கட்டுப்பாடு என்னிடமே உள்ளது. (14:32) இப்படியாக அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் வல்லமை என் கட்டுப்பாட்டிற்குள் உள்ள விஷயங்களாகும். இவ்வாறு புரிந்துக் கொள்.

10முதல் மனிதன் யார்?

?
கேள்விநீ படைத்த முதல் மனிதன் யார?
۞
அல்லாஹ்முதல் மனிதன் இரண்டாவது மனிதன் என்பதெல்லாம்

கிடையாது. மனித இனம் பூமியில் இருந்து புற்பூண்டு உருவாவது போல் உருவாக நான் ஏற்பாடு செய்தேன். (71:17) அதுவும் பலப் படித்தரங்களைக் கடக்கச் செய்து முழு மனிதனாக படைத்தேன். (76:1)

?
கேள்விஆதம் என்பவரை படைத்ததாக சொல்கிறார்களே அப்படி இல்லையா?
۞
அல்லாஹ்நான் அப்படி ஒன்றும் என் வேதத்தில் எங்கும் சொல்லவில்லை. ஆதம் என்பது மனிதன் நாகரீகம் அடைந்த காலக் கட்டத்தை குறிக்கும். இதை நான் ஓரிடத்தில் “பஷர்” என்றும் சொல்லி இருக்கிறேன் (15:37) கூட்டு வாழ்க்கை முறைக்கும் “ஆதம்” என்பார்கள்.
?
கேள்விஉன் படைப்பு சட்டத்தின் கீழ் உருவான மனித இனத்தின் படித்தரங்களின் கால நிலைப் பற்றி எவ்வாறு கூறலாம்?
۞
அல்லாஹ்மனித படைப்பு மற்றும் அவனுடைய வளர்ச்சிப் படித்தங்களைப் பற்றி மக்களுக்கு புரிய வைப்பதற்காக ஆதிகால மனிதன், கற்கால மனிதன், உலோக கால மனிதன், நவீன விஞ்ஞான கால மனிதன் என்று பிரித்து கூறி வருகிறீர்களே அவ்வாறே கூறலாம்.
?
கேள்விமனிதனை களிமண்ணால் செய்ததாக சொல்கிறாயே.(32:7) மனிதனைப் போல் பொம்மை செய்து அதில் உன் ரூஹ்வை ஊதினாயா?
۞
அல்லாஹ்நான் ஏற்கனவே சொன்னது போல் மனிதனை புற்பூண்டு விளைவது போல் மண்ணின் சத்திலிருந்து விளையச் செய்தேன் (71;17) முதலில் அவனை “அலக்” என்ற நிலையில் படைத்தேன் (96:2)
?
கேள்வி“அலக்கா”? அலக் என்றால் என்ன?
۞
அல்லாஹ்அலக் என்றால் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி அகும்.
?
கேள்விஅதனால் தான் ரத்தத்தை உறிஞ்சும் தீய குணம் மனிதனிடத்தில் இருக்கிறதா?
۞
அல்லாஹ்என் வழிகாட்டுதலின்படி சமூக அமைப்பு இருந்தால் மனிதன் பிறர் உழைப்பில் சுகம் காணமாட்டான். அவன் யாருடைய ரத்தத்தையும் உறிஞ்சவும் மாட்டான். என் அறிவுரைக்கு மாற்றமாக செயல்படும் சமுதாயத்தில் தான் இத்தகைய தீய குணங்கள் இருக்கும்.
?
கேள்வி“அலக்” என்ற நிலைக்குப் பின் என்ன செய்தாய்?
۞
அல்லாஹ்அதன் பின் அதை சதைப் பிண்டமாக படைத்தேன். அந்த நிலையில் இன்ன பொருள் என்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய தகுதியும் அவனுக்கு இருந்ததில்லை. (76:1) அவனில் இருந்த குறைப்பாடுகளை படிப்படியாக நீக்கி அவனை செவ்வையாக்கி (15:29) முழு மனிதனாக படைத்தேன்.
?
கேள்விஅதன் பின் என்னவாயிற்று?
۞
அல்லாஹ்பூமியிலிருந்து மனிதன் உருவாகும் நிலையை மாற்றி ஆண் பெண் சேர்க்கை மூலம் இனப் பெருக்கம் பல்கும்படி செய்தேன். (4:1) (32:8)
?
கேள்விமிகவும் ஆச்சரியமான விஷயம் தான் இது. அதன் பின் நீ என்ன செய்தாய்?
۞
அல்லாஹ்காலம் செல்ல செல்ல மனிதனுக்கு “ரூஹ்” எனும் தனிச் சிறப்பு மிக்க ஆற்றலை அளித்து வந்தேன். இதன் பயனாக அவனுள் செவிப்புலனும் பார்வைப் புலனும் சிந்தித்து செயலாற்ற

அறிவாற்றலும் படிப்படியாக வளரச் செய்தேன் (32:9)

?
கேள்விஇதெல்லாம் உண்மைதானா? மற்ற உயிரினங்களுக்கும் இத்தகைய ஆற்றல்களை அளித்து இருக்கிறாயே?
۞
அல்லாஹ்மற்ற உயிரினங்களுக்கு அளிக்கப்பட்ட ஆற்றல் குறுகிய வட்டறைக்கு உட்பட்டவை ஆகும். அதாவது தன் ஆகாரத்தை தேடிக் கொள்வது; தன்னை பாதுகாத்துக் கொள்வது; தன் இனப் பெருக்கம் செய்துக் கொள்வது போன்றவற்றிற்கு மட்டும் ஆற்றல்களை அளித்துள்ளேன். (24:41) ஆனால் மனித இனத்திற்கு மட்டும் ஒரு படி மேலாக சுயமாக சிந்தித்து செயலாற்றக் கூடிய அறிவாற்றலை கொடுத்துள்ளேன். (32:9)
?
கேள்விஅந்த 24:41 வசனத்தில் மற்ற உயிரினங்களுக்கு ஸலாத் மற்றும் தஸ்பீஹ் தெரியும் என்று சொல்லி இருக்கிறாயே?
۞
அல்லாஹ்ஸலாத் என்றால் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் என்று பொருள்படும். தஸ்பீஹ் என்றால் தத்தம் கடமைகளை நிறைவேற்றக் கூடிய வழிமுறை மற்றும் அதற்குரிய முயற்சிகள் என்பதாகும். மனிதனை தவிர்த்து மற்ற உயிரினங்கள் அனைத்தும் தாமே தெரிந்துக் கொள்ளும்.
?
கேள்விஇவை எல்லாம் உண்மைதானா? நீ அருளிய வேதத்தில் இவை எல்லாம் சொல்லப்பட்டிருப்பதை யாரும் தெரியப்படுத்த வில்லையே.
۞
அல்லாஹ்உலகங்களை படைத்த நானே மனிதனையும் படைத்தேன் (38:75) . நான் எப்படி படைத்தேன் என்பதை சொல்லாமல் விடுவேனா? அவ்வேதத்தை படித்து அறிந்துக் கொள்வது உன் கடமை (ஸலாத்) ஆகும்.
?
கேள்விஇதைப் பற்றி எல்லாம் நான் கேள்வி பட்டதே இல்லையே!
۞
அல்லாஹ்நான் அறிவித்த வேத உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்காதது மார்க்க அறிஞர்களின் மெத்தனப் போக்கு ஆகும். இவ்வாறு செய்து அவர்கள் தம் வயிறுகளில் நெருப்பை அள்ளி கொட்டிக் கொள்கிறார்கள். (2:174)
?
கேள்விஅனைத்தையும் செய்யக் கூடிய நீ அவர்களை தண்டித்து இருக்கலாமே?
۞
அல்லாஹ்மனிதனுக்கு முழு சுதந்திரத்தை (Free Will) அளித்த பின் அவனுடைய வாழ்க்கைக்கான சரியான பாதையை காட்டுவதே என்னுடைய செயல்திட்டமாகும். (2:151) எனவே மனிதன் எடுக்கும் முடிவில் நான் தலையிடுவதற்கில்லை.(76:3)
?
கேள்விவிந்தையான செயல்திட்டமாக இருக்கிறதே!
۞
அல்லாஹ்நீ முதன் முதலில் கேள்விப்படுவதால் இது உனக்கு ஆச்சரியமாக இருக்கு. ஒரு வேளை நீ நீனைப்பது போல் நான் செயல்படுவதாக இருந்தால் ஒட்டு மொத்த (Complete Plan) செயல் திட்டத்தையே மாற்ற வேண்டி வரும். அப்படி செய்வதற்கில்லை.
?
கேள்விஏன்? உன்னால் மாற்றி அமைக்க முடியாதா?
۞
அல்லாஹ்எந்த ஒரு செயல் திட்டத்தையும் உருவாக்க எண்ணினால்

அதற்குரிய செயல்பாடுகளை தீர்மானித்த பின்பே உருவாக்குகிறேன். ஒரு முறை உருவாக்கி விட்டால் அதில் திருத்தங்களை செய்வது என்பது என்னிடத்தில் இல்லை. இதுவே என்னுடைய “ஸுன்னத்”

ஆகும். (17:77)

?
கேள்விஸுன்னத்தா? ஸுன்னத் என்றால் என்ன?
۞
அல்லாஹ்ஸுன்னத் என்றால் என்னுடைய செயல்முறை திட்டங்கள் அல்லது நடைமுறை சட்டங்கள் என்பதாகும்.அவற்றில் ஒருபோதும் மாறுதலை காண மாட்டீர் (8:23),(17:77),(33:38)(33:62)

11நபிமார்களைப் பற்றிய உண்மைகள்

?
கேள்விஸுன்னத் என்றால் முஹம்மது நபி செயல்பட்டவை என்று நான் கேள்விப் பட்டேனே!
۞
அல்லாஹ்நபி எனப்படுபவர் என்னுடைய சட்ட விதிமுறைக்கு எதிராக அல்லது மாற்றமாக ஒருபோதும் செயல்படமாட்டார். அதாவது என் அறிவுரை என்னவோ அதன்படியே செயல்படுவார் (4:64)
?
கேள்விநபியை பின்பற்றினால் உன்னை பின்பற்றுவதற்கு சமம் என்று அறிவித்து இருக்கிறாயே (3:32) (4:80)
۞
அல்லாஹ்எந்த நபியும் என் அறிவுரைக்கு மாற்றமாக செயல்படவே முடியாது. எல்லோரிடமும் என் அறிவுரைகளை புத்தக வடிவில் உடனே நபிமார்களால் தர இயலவில்லை. எனவே அவர் அறிவிக்கின்ற மார்க்க அறிவுரைகளை பின்பற்றுவுது என்னை

பின்பற்றுவதற்கு சமம் என்று அறிவித்தேன் (4:80)

?
கேள்விநபி பின்பற்றிய வழிமுறைகள் என்னவென்று வேறு புத்தகங்களில் தேடக் கூடாதா?
۞
அல்லாஹ்உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையும் கொள்கை கோட்பாடுகளையும் வேதத்தில் முழுமையாக தெளிவாக்கிய பின்னர் (2:159) வேறு புத்தகங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன?
?
கேள்விநபிமார்களின் பணி என்ன?
۞
அல்லாஹ்(1) நான் படைத்துள்ள படைப்புகளின் உண்மை நிலையை எடுத்துரைப்பது. (2) மக்கள் கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை நீக்கி அவர்களுடைய சிந்தனா சக்தியை தூய்மை ஆக்குவது. (3) வேத அறிவுரைகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவற்றை பின்பற்ற வைப்பது, (4) அவற்றை பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது. (2:129)
?
கேள்விஅவ்வளவுதான் நபிமார்களின் பணியா?
۞
அல்லாஹ்நான் காட்டிய வழியில் சமூக அமைப்பை ஏற்படுத்தி அதை தொடர்ந்து ஆட்சியமைப்பை ஏற்படுத்துவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளும் அவர்களுக்கு உண்டு. (73:5) (24:55)
?
கேள்விநபியின் மறைவிற்குப் பின் என்ன செய்வது?
۞
அல்லாஹ்அவர் பின்பற்றிய வேத அறிவுரைப் படி செயல்பட வேண்டும் என்று நான் பல முறை அறிவித்து இருக்கின்றேனே (3:110) (3:144)
?
கேள்விஅப்போது ஹதீஸ் என்று சொல்கிறார்களே அதை நான் எவ்வாறு புரிந்துக் கொள்வது?
۞
அல்லாஹ்நான் நபி மூலம் குர்ஆனில் அறிவித்த அறிவுரைகள் எல்லாமே “ஹதீஸ்” தான் என்று அறிவித்து இருக்கின்றேனே. (39:23) (45:6) (4:87)
?
கேள்விதிருக்குர்ஆனை தவிர்த்து வேறு எதையாவது நபியின் உள்ளத்தில் இறக்கி அருளினாயா?
۞
அல்லாஹ்நான் நபிக்கு அருளியது குர்ஆன் மட்டுமே என்று அறிவித்து அதற்கு நானே சாட்சி என்று (6:19)இல் அறிவித்து இருக்கின்றேனே. நான் மட்டுமின்றி மலக்கும் சாட்சி நிற்பதாக அறிவித்தேனே (4:166)

12நபியின் மீது தரூத் அனுப்புவது

?
கேள்விமுஹம்மது நபியின் மீது தரூத் அனுப்புவதாக சொல்லி இருக்கிறாயே (33:56)
۞
அல்லாஹ்நானே அகிலங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருக்கும் போது நான் யாருக்கு தரூத் அனுப்புவேன்? எல்லாம் மதவாதிகள் செய்த குழப்பங்கள் ஆகும்.
?
கேள்விஅப்போது “யுஸல்லூன அலன் நபீயி” என்பதை நான் எப்படி புரிந்துக் கொள்வது?
۞
அல்லாஹ்நபிமார்கள் கொண்டுவரும் சீர்திருத்த பணிகளுக்கு நானும், நான் படைத்த இயற்கை சக்திகளாகிய மலக்குகளும் பக்கபலமாக இருக்கிறோம். என் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட முஃமின்களும் நபிக்கு துணை புரிந்தால் அவருடைய செயல்திட்டம் துரிதமாக நிறைவேறும் என்றுதான் சொன்னேன். (33:56)
?
கேள்விநபிமார்களுக்கு மட்டும் தான் துணை புரிவாயா?
۞
அல்லாஹ்இல்லை. யாரெல்லாம் என் வழிகாட்டுதலின்படி சமூக அமைப்பை ஏற்படுத்த முயல்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நானும் நான் படைத்த இயற்கை சக்திகளாகிய மலக்குகளும் பக்க பலமாக இருந்து நிச்சயம் துணை புரிவோம் (41:30&31)

13அல்லாஹ்வுக்கு அழகிய கடன்?

?
கேள்விஆமாம். நீ மக்களிடம் பணம் கேட்டாயாமே. உனக்கு ஏதாவது பணச் சிக்கல் ஏற்பட்டதா? (57:11)
۞
அல்லாஹ்நான் எந்த தேவையுமற்றவன். எனக்கு நிகர் நானே ஆவேன். (அத்தியாயம் 112) நான் மக்களிடம் கேட்டது என் தூதர் கொண்டுவந்த சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றத் தான்.
?
கேள்விஅதற்கு ஏன் கடன் கேட்பது? சர்வ வல்லமை உடைய நீயே நேரடியாக கொடுத்து உதவி செய்து இருக்கலாமே,
۞
அல்லாஹ்மனிதனை கலீஃபாவாக ஆக்கிய பின் மனிதன் தான் இந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
?
கேள்விகலீஃபாவா? அப்படி என்றால் என்ன?
۞
அல்லாஹ்இவ்வுலகத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய பொறுப்பை

மனிதனுக்கு அளித்துள்ளேன். இதைத் தான் ஃகிலாஃபத் (Governance) என்று சொன்னேன். (6:165) (35:39).

?
கேள்விஎனவே அழகிய கடன் எதற்கு?
۞
அல்லாஹ்ஆட்சி பீடத்தில் அமர்ந்துக் கொண்டு வெறும் அதிகாரத்தை செலுத்தினால் மட்டும் போதாது. மக்கள் நலத் திட்டங்களை தீட்டி சமுதாய மேம்பாட்டிற்காக உழைக்கவும் வேண்டும். அச்செயல் திட்டங்களை நிறைவேற்ற உதவி செய்வதையே கடனாக கொடுக்கும் படி சொன்னேன். (64:17)
?
கேள்விகடனாக ஏன் கேட்டாய்? தானமாக கேட்டிருக்கக் கூடாதா?
۞
அல்லாஹ்கடன் என்றால் அதன் பலன்கள் பன் மடங்காய் பெருகி உங்களுக்கு திரும்பி கிடைத்து விடும் (2:261) தானம் என்றால் அதன் பலன் திரும்ப கிடைக்காது (2:264)
?
கேள்விசற்று விளக்கம் தேவை.
۞
அல்லாஹ்நான் மேலே சொன்ன இரு வசனங்களையும் சற்று நிதானித்துடன் நன்றாக படித்து பாருங்கள். உண்மை உங்களுக்கே விளங்கும். எதையும் படிக்க வேண்டிய முறையில் படித்தால் தானே புரியும். (2:121)
?
கேள்விஇப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
۞
அல்லாஹ்நீ ஒரு அமைப்பை (அறக்கட்டளை) ஏற்படுத்தி (2:265)

அதன் மூலம் சமூக நலத்திட்டங்களை தீட்டி அதற்காக உழைத்து வா, (2:215) பொது மக்களிடமிருந்து அதற்காக பணத்தை திரட்டு. அவ்வாறு திரட்டிய செல்வத்தை (9:60) இல் சொன்னபடி சமுதாய மேம்பாட்டிற்காக பயன்படுத்து. அதனால் உனக்கு கிடைக்கும் சந்தோஷங்களுக்கு அளவே இருக்காது. அவை யாவும் நீ செய்யும் நற்செயல்களுக்கு நான் அளிக்கும் பலன்களாகும்.

14மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?

?
கேள்விமனிதன் மரணித்த பின் கபருகளில் வேதனை அளிப்பாயா?
۞
அல்லாஹ்நான் என்னுடைய வேதத்தில் எங்கும் அவ்வாறு சொல்லவே இல்லை. எல்லாம் யூதர்களின் வதந்திகள் ஆகும். மனிதனை புதைத்த பின் அவனது சரீரம் மண்ணோடு மண்ணாகி அழுகிவிடுகிறது.
?
கேள்விமரணத்திற்குப் பின் தண்டிப்பதாக வேதத்தின் பல இடங்களில் சொல்லி இருக்கிறாயே. இவ்வுலகத்தில் உன்னால் தண்டிக்க முடியாதா?
۞
அல்லாஹ்அகிலங்கள் அனைத்திலும் என்னுடைய சட்டம் ஒரே சீராக செயல்படுகின்றன.(42:53) மனிதன், தன் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அல்லது விளைவுகளை அடைந்துக் கொள்ள வேண்டும் என்பது நான் நிலைநிறுத்திய சட்டமாகும். அதை இவ்வுலக வாழ்வில் அனுபவிக்க வேண்டி வரும். இங்கு தப்பித்தால் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற நிலையான வாழ்வில் அனுபவிக்க வேண்டி வரும்.
?
கேள்விமனிதனுக்கு மட்டும் ஏன் இந்த சட்டம்?
۞
அல்லாஹ்மனிதனுக்கு மட்டும் தான் இவ்வுலகில் முழு சுதந்திரத்தை அளித்துள்ளேன். செயல்படுவதற்கு அளித்த சுதந்திரம் செயல்களின் விளைவுகளை மாற்றி அமைக்கும் சக்தியை மனிதனுக்கு நான் அளிக்கவே இல்லை. (39:39-41)
?
கேள்விஎன்னை மண்ணில் புதைத்த பின் என் உடல் மண்ணோடு மண்ணாகிவிடும். அதன் பின் என்னை எப்படி உருவாக்குவாய்? (17:49-51)
۞
அல்லாஹ்அகிலங்களையே படைக்கும் வல்லமை இருக்கும் போது உன்னை மீண்டும் படைப்பதற்கு எனக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது? உன்னை மீண்டும் படைப்பது எனக்கு கடினமா? (79:27)
?
கேள்விஇத்தகைய சட்ட விதிமுறைகளை உருவாக்கியதன் நோக்கம் என்ன?
۞
அல்லாஹ்எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம். கேட்பார் யாருமில்லை என்று மனிதன் எண்ணிக் கொள்கிறான். உண்மை என்னவென்று அவனுக்கு தெரிவதில்லை. (69:25-30) அவனுடைய செயல்பாடுகள் யாவும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது என்பதை வேதத்தின் மூலம் அறிவித்துவிட்டேன். (17:13-15) (33:64-68) (39:56) (69:25-40) (78:40) என் அறிவுரைப்படி வாழ்வதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம் (18:29)
?
கேள்விஅந்த சட்ட விதிமுறைகளைப் பற்றிய விவரம் உண்டா?
۞
அல்லாஹ்ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் செய்து வந்த நன்மை தீமை ஆகியவற்றின் கணக்கு வழக்கு எடுத்துக் கொள்ளப்படும். நன்மையான செயல்கள் மிகைத்திருந்தால் சுவனத்திற்கு செல்வார். தீய செயல்கள் மிகைத்திருந்தால் நரகத்திற்கு செல்வார். (7:8&9)
?
கேள்விஉன் மீது ஈமான் கொண்டவர்களுக்கு சலுகை ஏதாகிலும் உண்டா?
۞
அல்லாஹ்என்னுடைய சட்ட விதிமுறைகளில் யாருக்கும் எவ்வித சலுகையோ பாகுபாடோ ஒரு போதும் கிடையாது. அவரவர் செயல்கள் என்னவோ அதன்படியே தீர்ப்பு வழங்கப்படும். அதில் யாருக்கும் அணு அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. (36:54)
?
கேள்விநீ மிகவும் இரக்கமுடையவன். எனவே முஸ்லிம்களை மட்டும் சில காலம் நரகத்தில் தள்ளி பொறித்து விட்டு அதன் பின் சுவனத்திற்கு அனுப்பிவிடுவாய் என்று ஆலிம்கள் சொல்ல கேள்வி பட்டேன். இது உண்மையா?
۞
அல்லாஹ்நான் அப்படிப்பட்ட வாக்கு எங்கும் யாருக்கும் அளிக்கவே இல்லை. இத்தகைய ஆதாரமற்ற செய்தியை என் மீது இட்டுக்கட்டி சொல்கிறார்கள் (2:80) தீமையை சம்பாதித்தவர்க்கு நிரந்தர நரகமே (2:81)

15பாவ மன்னிப்பு?

?
கேள்விஅப்போ பாவ மன்னிப்பு என்பதெல்லாம் கிடையாதா?
۞
அல்லாஹ்அறியாமையில் செய்யும் செயல்களுக்கு மட்டும் பாவ மன்னிப்பு உண்டு (4:17) அதிலும் சில நிபந்தனைகள் உண்டு.
?
கேள்விஅந்த நிபந்தனைகள் என்ன என்பதை அறிவிக்க மாட்டாயா?
۞
அல்லாஹ்தான் செய்யும் செயல்கள் தவறானவை என்பதை அறிந்த உடன் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். (4:17) தீய செயல்களுக்கு பிராயச்சித்தமாக நற்செயல்களை செய்து (25:70&71) தன் நன்மையின் எடைத்தட்டை மிகைக்கச் செய்ய வேண்டும்.
?
கேள்விநீ மிகவும் இரக்கமுடையவன் மன்னிப்பவன் என்று குர்ஆனில் பக்கத்திற்கு பக்கம் அறிவித்து இருக்கிறாயே. அது உண்மை இல்லையா?
۞
அல்லாஹ்எந்தெந்த செயல்களுக்கு என்ன விளைவுகள் அல்லது பலன்கள் என்று விதிமுறைகளை நிர்ணயித்த பின் தீய செயல்களுக்கு மன்னித்து விடுவதாக அறிவிப்பேனா?
?
கேள்விஉன் மீது ஈமான் கொள்வதால் நீ இரக்கத்தை காட்டக் கூடாதா?
۞
அல்லாஹ்ஈமான் கொள்வதால் உனக்குத் தான் பலன். (49:17) பாவங்களுக்கு தண்டனை என்று அறிவித்த பின் மன்னிப்பு என்றால் அந்த தண்டனை இல்லை என்றாகிவிடும். பாவச் செயல்களால் பிறருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பாதித்தவர்களுக்கு அநீதி இழைத்ததாக ஆகிவிடுகிறதே.
?
கேள்விஅப்போ மன்னிப்பவன் என்பதை எப்படி புரிந்துக் கொள்வது?
۞
அல்லாஹ்மனிதன் தெரிந்தோ தெரியாமலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ தவறிழைத்தால் அதன் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெற நான் மருத்துவ ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன். அதற்காக நான் பயன்படுத்திய வார்த்தை “கபூர்” غفور Ghafoor என்பதாகும். அதாவது நிவாரணம் அளிப்பவன், பாதுகாப்பு அளிப்பவன் என்று பொருள். அதை தவறுதலாக மன்னிப்பவன் என்று எழுதிவிட்டார்கள்.
?
கேள்விஎவ்வளவு பெரிய அநியாயம் இது! இதனால் பாவச் செயல்களை தாராளமாக செய்யலாம் என்ற தைரியம் மக்களுக்கு வந்து விடுமே?
۞
அல்லாஹ்இப்போது தான் நீ சிந்திக்க ஆரம்பித்துள்ளாய். நான் ஏற்படுத்திய விளைவுகள் என் சட்டம் யாருக்காகவும் ஒரு போதும் மாறாது (29:2&3)

16ஆஃகிரத்து மீது ஈமான் எதற்கு?

?
கேள்விஈமான் கொள்ளும் விஷயத்தில் ஆஃகிரத்து மீது ஈமான் கொள்வது நிபந்தனையாக இருப்பதாக சொல்கிறாயே. ஏன்?
۞
அல்லாஹ்நான் ஏற்கனவே சொன்னது போல் தன் விருப்பப் படி

செயல்படுவதற்கு முழு சுதந்திரத்தை மனிதனுக்கு அளித்த நான் அவனுடைய செயல்களின் விளைவுகளை தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஒருபோதும் அளிக்கவில்லை. (18:29) எனவே, தான் செய்யும் ஒவ்வொரு காரியமும் என்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மனிதன் முன்கூட்டியே சிந்தித்து செயலில் இரங்க வேண்டும். ஆக ஆஃகிரத் மீது ஈமான் கொள்வது என்பது தன் செயல்களின் என்ன இறுதி விளைவு ஏற்படும் என்பதை சிந்தித்து செயலாற்றுவது என்பதாகும்.

?
கேள்விஇதெல்லாம் பெரிய விஷயமா? ஒவ்வொரு செயலுக்கும் என்ன விளைவு என்பதை மனிதனாலும் எளிதாக கண்டுபிடித்துக் கொள்ள முடியும் அல்லவா?
۞
அல்லாஹ்ஆம். மனிதனாலும் அறிந்துக் கொள்ள முடியும். ஆனால் குறுகிய காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மட்டும் (Short Term Effects) மனிதனால் அறிந்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு நெருப்பில் கை வைத்தால் அது சுட்டு எரிச்சலை ஏற்படுத்தும். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும். இது போன்றவை. ஆனால் நீண்ட காலத்திற்குப் பின் ஏற்படும் பாதிப்புகளை (Effects on the Long Run) அவனால் அறிந்துக் கொள்ள முடிவதில்லை.
?
கேள்விசில செயல்களை எடுத்துரைத்து விளக்கினால் நன்றாக இருக்கும்.
۞
அல்லாஹ்அரசு பணியாட்கள் லஞ்ஜம் வாங்கக்கூடாது என்று நான் அறிவித்துள்ளேன். (2:188) லஞ்ச லாவண்யம் நீண்ட காலத்திற்குப் பின் ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கும்.
?
கேள்விஎன்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
۞
அல்லாஹ்இதனால் அரசுக்குப் போய் சேரவேண்டிய பணம் களவாடப்படும். நாட்டில் இருப்போர் இல்லாதோர் என்ற இடைவெளி விரிவடையும், ஒரு சிலரிடம் செல்வம் குவியும். அதனால் பண வீக்கம் ஏற்படும். இல்லாதோர் துயரத்திற்கு ஆளாவார்கள். சமூக சமன்பாடு சீரழியும். இதெல்லாம் லஞ்ஜம் வாங்குபவருக்கும் அதை கொடுத்து மீட்பவர்களுக்கும் தெரியாது. ஆஃகிரத் (இறுதி) விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்.

17அல்லாஹ்வுடன் ஷைத்தான் மோதல்?

?
கேள்விஆமாம் அனைத்து வல்லமையும் உடைய உன்னிடம் ஷைத்தான் மோதியதாக சொல்லி இருக்கிறாயே?
۞
அல்லாஹ்அனைத்தையும் படைத்த எனக்கு எதிராக செயல்படும் தகுதி பிரபஞ்சத்தில் யாருக்கும் இல்லை (16:49-50)
?
கேள்விஆனால் ஷைத்தான் மட்டும் எப்படி எதிர்த்து நின்றது?
۞
அல்லாஹ்மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன். நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள். மனிதனுக்கு மட்டும்தான் இவ்வுலகில் முழு சுதந்திரத்தை அளித்து இருக்கிறேன். வேறு எந்த படைப்பிற்கும் நான் தரவில்லை. எனவே அவனுள் எழுகின்ற தகாத எண்ணங்கள் என் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கிறது. அவ்வாறு எனக்கு கட்டுப்படாத எண்ணங்களை நான் ஷைத்தான் என்று குறிப்பிடுகிறேன்.

அவ்வளவுதான்.

?
கேள்விஉனக்கு கட்டுப்படாத தீய சக்தியை இப்லீஸ் என்றுதானே குறிப்பிட்டு இருக்கிறாய்?
۞
அல்லாஹ்அந்த வாசகத்திலும் இப்லீஸ் என்று குறிப்பிடுகையில் அபா வஸ்தக்பரா ابی وستکبرا என்று சொல்லி இருக்கிறேன். அதாவது ஆணவங்கொண்டு என் கட்டளையை மீறுவது (2:34) ஆனால் ஷைத்தான் என்பது மனிதனுள் இயங்கி வரும் தீய உந்துதல்களைக் குறிக்கும். (2:36)
?
கேள்விஇப்லீஸ் மற்றும் ஷைத்தான் ஆகிய இரண்டும் ஒரே அடிப்படையை கொண்டதாகும் என்று சொல்லலாமா?
۞
அல்லாஹ்ஆம் அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

போன்றதாகும். அரபி மொழி வாக்கிய அமைப்பில் இடத்திற்கு தகுந்தவாறு மாறி மாறி வரும். ஆனால் இப்லீஸ் என்ற வார்த்தை நம்பிக்கையின்மை மற்றும் இயலாமை என்ற அர்த்தத்திலும் வரும். (6:44) (23:77)

?
கேள்விஷைத்தான் தன்னை நெருப்பில் படைத்ததாக அறிவிக்கின்றானே (7:12) அது உண்மையா?
۞
அல்லாஹ்நான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்ற மனப்பான்மை மனிதனிடம் இருக்கிறது. எதையும் சுட்டுப் பொசுக்கும் தன்மை நெருப்பிற்கு உண்டு. ஆணவம் அகம்பாவம் என்ற “தீ”ய குணங்கள் மனித நேயத்தை சுட்டுப் பொசுக்கி விடும். எனவே இதை ஷைத்தான் சொல்வதாக உவமானமாக சொல்லி

இருக்கிறேன்.

?
கேள்விஅவ்வாறு ஏன்? நேரடியாக அறிவித்து இருக்கக்கூடாது? சாதாரணமாக குர்ஆனை படிக்கும் போது குழப்பமாக இருக்கிறதே!
۞
அல்லாஹ்நீ சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக “ஆதம்” என்ற தலைப்பில் பேசும் போது, பலமுறை (2:30-39), (7:11-25), (15:28-44), (17:61-65), (20:116-128), (38:71-85) நான் உரையாடல் வடிவில் அறிவித்து இருக்கிறேன். நீ குர்ஆனை ஆராய்ந்து பா்ர்பதே இல்லை. (4:82) அதைப் படித்து பார்க்க வேண்டிய முறைப்படி படிப்பதுமில்லை (2:121) உண்மையை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
?
கேள்விஷைத்தான் ஒரு காலத்தில் மலக்குகள் இனத்தவனாக இருந்ததாக சொல்கிறார்களே?
۞
அல்லாஹ்தவறு. நான் படைத்துள்ள பிரபஞ்சத்தை செயல்படுத்த உருவாக்கிய பல்வேறு சக்திளே மலக்கு என்பதாகும். அவை முழுக்க முழுக்க எனக்கு கட்டுப்பட்டு செயல்படுபவை ஆகும். (16:49) ஆனால் மனிதனுக்கு நான் முழு சுதந்திரத்தை கொடுத்துவிட்டதால் அவன் நல்லது கெட்டது ஆகிய இரண்டையும் செய்யக் கூடியவனாக இருக்கின்றான். இதனால் அவன் எனக்கு எதிராகவும் செயல்படுகிறான்.
?
கேள்விஏன் மனிதனுக்கு மட்டும் முழு சுதந்திரத்தை அளித்தாய்?
۞
அல்லாஹ்இவ்வுலகத்தை படைத்த நான் அதை கட்டிக்காத்து வழிநடத்திச் செல்லும் பொறுப்பை (Governing Authority) மனிதனுக்கு அளிக்க வேண்டும் என்பது என் செயல் திட்டம். (6:165) இந்த பொறுப்பை தட்டிக் கழித்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அவனுக்கே (35:39) அதற்காக நான் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை (Free Will) அளித்தேன்.
?
கேள்விஇந்த பொறுப்பை மனிதனுக்கு அளிக்காமல் இருந்திருதால் என்ன ஆகி இருக்கும்?
۞
அல்லாஹ்மனிதனும் மற்ற உயிரினங்களைப் போல தன் இயல்பின் அடிப்படையில் வாழ்ந்திருப்பான் (11:118) அவனுக்கு எந்த தனிச் சிறப்பும் இருந்திருக்காது.
?
கேள்விநீ படைத்த மனிதனை மிருகங்களை விட மோசமானவர்கள் என்று விமர்சித்து இருக்கிறாயே? (7:179)
۞
அல்லாஹ்மனிதனுக்கு சிந்தனா சக்திகள் இருந்தும் அவற்றைக் கொண்டு அவன் நல்லுணர்வு பெற நாடுவதே இல்லை. அவர்களுக்குக் கண்கள் இருந்தும் அவற்றைக் கொண்டு உலகில் நடைபெற்று வரும் அநியாயத்தைப் பற்றி கவனித்து பார்ப்பதே இல்லை. அவர்களுக்கு காதுகள் இருந்தும் அவற்றைக் கொண்டு என் அறிவுரைகளைக் கேட்க

நாடுவதே இல்லை. இத்தகையவர்களை என்னவென்று சொல்வது?

18மலாயிகா மீது ஈமான் ஏன்?

?
கேள்விமலக்கைப் பற்றி ஏதோ சொன்னாய். மலக்கு மீது ஈமான்

கொள்வது நிபந்தனையாக இருப்பதாக சொல்லி இருக்கிறாயே? (2:177)

۞
அல்லாஹ்அகிலங்களை படைத்த நான் அவற்றை செயல்பட வைக்க பல்வேறு சக்திகள் அவசியமாகின்றன. அவை எல்லாமே என் கட்டளைக்கும் சிறம்பணிகின்றன. (16:48) இந்த உண்மையை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
?
கேள்விசற்று விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.
۞
அல்லாஹ்பூமியை சுற்றியுள்ள காற்று மண்டலத்தை உன்னால் காண முடியாது. ஆனால் அதைக் கொண்டு கோடான கோடி உயிரினங்களுக்கு வாழ்வு கிடைக்கிறது. பூமிக்கு புவிஈர்ப்பு கிடைக்கிறது. அதனால் மழைநீர் கிடைக்க உதவுகிறது. உனக்கு வாழ்வாதார பொருட்கள் கிடைக்கின்றன. புவிஈர்ப்பு கொண்டு உன்னால் பூமியில் சிரமமின்றி நடமாட முடிகிறது. இன்னும் பலப்பல. இவை யாவும் உன் கண்களுக்குப் புலப்படாத இயற்கை சக்திகள் (மலாயிகா) ஆகும்.
?
கேள்விஜிப்ரீல் என்பது மலக்கா?
۞
அல்லாஹ்ஆம். என் வஹீச் செய்தியை நபியின் உள்ளத்தில் இறக்கி அருள நான் ஏற்படுத்திய பிரத்யேக சக்தி ஆகும். (2:97) இதை உங்கள் மொழியில் ஒலி அலைகள் (Micro Sound Wave System) என்று சொல்கிறீர்கள்.
?
கேள்விநபிக்கு மட்டும் தான் உன் செய்திகள இறங்குமா?
۞
அல்லாஹ்அவர் உள்ளத்தில் பதிந்த என் வழிகாட்டுதல்களை புத்தக வடிவில் (குர்ஆனை) பதிவு செய்து மக்களுக்கு கொடுத்து விட்டார். (80:13). அதை நீ படிக்கும் போது ஓசைகளாக கேட்பவர் உள்ளத்தில் சென்றடைகிறது. (7:204) இவ்வாறாக ஜிப்ரீல் என்னும் அலை ஓசை இன்றைக்கும் உலகம் முழுவதும் செயல்பட்ட வண்ணம் இருக்கிறது,
?
கேள்விமலக்குகளைப் பற்றிய மேல்கொண்டு உண்மைகளை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
۞
அல்லாஹ்மலக்குகளைப் பற்றிய உண்மைகளை “மலக்குடன் ஒரு சந்திப்பு” என்ற தலைப்பில் எழுத வேத்தேன். அதைப் படித்து மலக்குகளைப் பற்றிய முழு உண்மைகளை தெரிந்துக்கொள்.
?
கேள்விஆமாம் மனித செயல்களை எல்லாம் பதிவு செய்வதாக சொல்கிறாயே (21:94) (54:52). அதன் பொருள் என்ன?
۞
அல்லாஹ்செயல்கள் சிறியதோ பெரியதோ நாம் பதிவு செய்யாமல் விடுவதில்லை. இதன் பொருள் யாதெனில் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்கள் மற்றும் விளைவுகள் கிடைத்தே தீரும் என்பதே (27:75) நாம் நம் விருப்பம் போல் செயல்படலாம். யாரும் கேட்பாரில்லை என்று மனிதன் எண்ணிக் கொள்கிறான். (34;3) உண்மை அதுவல்ல அவனின் செயலுக்குரிய கேள்வி முறை கண்டிப்பாக உண்டு (45:29)

19சுவனம் என்றால் என்ன?

?
கேள்விநற்செயல்களை செய்தால் சுவனம் என்றும் தீய செயலகளை செய்து வந்தால் நரகம் என் திருக்குர்ஆனில் பல இடங்களில் சொல்லி

இருக்கிறாயே!

۞
அல்லாஹ்ஆம். சுவனம் என்பது மன நிறைவான யாதொரு பயமோ துக்கமா இல்லாத சந்தோஷமான வாழ்க்கை முறை ஆகும்.(2:62) அவை இவ்வுலக வாழ்விலும் கிடைக்கும் மரணத்திற்குப் பின்பும் கிடைக்கும். (16:30-32)
?
கேள்விதனக்கும் சந்தோஷமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றுதானே மனிதனும் பாடுபடுகிறான்? இதில் உன் அறிவுரை என்ன?
۞
அல்லாஹ்நீ சொல்வது என்னவோ உண்மை, ஆனால் அவன் தானும் தன் குடும்பமும் சந்தொஷமாக இருந்தால் போதும் என்று எண்ணத்தில் முயல்கிறான். மற்றவர்களைப் பற்றிய கவலை அவனுக்கு இருப்பதில்லை. ஆனால் உன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோஷமாக வாழ வைத்து அதில் உன் பங்கிற்கு நிலையான சந்தொஷத்தை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். (98:7&8)
?
கேள்விதிருக்குர்ஆனில் சுவனத்திற்கு உதாரணமாவது என்று சொல்கின்றாயே சுவனத்தை விவரித்து கூற இயலவில்லையா? (13:35)
۞
அல்லாஹ்அறிவுப் புலன்களுக்கு புலப்படாத மறைவான உண்மைகளை உதாரணங்கள் மூலமாகத் தான் விளக்க முடியும். சுவனம் எப்படி இருக்கும் என்பதை என் வழிகாட்டுதலின் படி முயன்றால் மட்டுமே கிடைக்கும். அல்லது நீ மரணித்த பின்பே தெரிந்துக் கொள்வாய்.
?
கேள்விநீ ஆசை காட்டி ஏமாற்றுவது போல் தெரிகிறது.
۞
அல்லாஹ்எண்ணற்ற படைப்புகளில் மனித படைப்பும் ஒன்று

(31:28) மற்ற படைப்புகள் அனைத்தும் இவ்வுலகத்திலேயே முடிந்து விடும். ஆனால் மனித வாழ்க்கை மட்டும் அவனது மரணத்திற்கு பின்பும் தொடர வேண்டும் என்பது என் செயல்திட்டம். உன்னை ஏமாற்றி எனக்கு என்ன கிடைக்கப் போகிறது? நான் எவ்வித தேவேயுமற்றவனாக இருக்கிறேன். (112:2)

20அல்லாஹ்வின் வர்ணங்கள்

?
கேள்விஉனக்கு பல வர்ணங்கள் இருப்பதாக சொல்லி இருக்கிறாயே (2:138)
۞
அல்லாஹ்என்னுடைய வண்ணங்கள் என்பது உலகத்தை படைத்து செயல்படுத்திய தன்மைகள் பற்றியதாகும். ஆன்மீகவாதிகள் அதை சாயம் பூசி வாழ்நாள் முழுவதும் உச்சரித்துக்கொண்டு இரு என்று மக்களுக்கு சொல்லி என் அறிவுரைகளை புறக்கணித்து விட்டார்கள்.
?
கேள்விநீ சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லையே.
۞
அல்லாஹ்என்னுடைய வர்ணங்கள் என்பது உலகம் முழுவதும் வியாபித்து இருக்கின்ற சிறப்பு குணநலப் பெயர்கள் – ஸிஃபத்துகள் - செயல் வடிவங்கள் ஆகும்.
?
கேள்விஓஹோ! அஸ்மாவுல் ஹுஸ்னாவா? அதை நான்

தினந்தொறும் உன்னுடைய தொண்ணூற்று ஒன்பது பெயர்களை (திருநாமங்களை) உச்சரித்துக் கொண்டு பேரானந்தம் அடைகிறேன்.

۞
அல்லாஹ்பார்த்தாயா? நீயே இப்படி செய்துக் கொண்டிருப்பதால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்னுடைய குண நலன்களை உனக்குள் வளர்த்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
?
கேள்விஎன்ன சொல்கிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!
۞
அல்லாஹ்நான் ரஹீம் (இரக்கமுடையவன்) என்றால் நீ கல்நெஞ்சக்காரனாக இருக்கப் போகிறாயா? அவ்வாறு இரக்கமுடையவனாக இருந்தால்தான் என்னுடைய படைப்புகளை சீராக பராமரித்து வருவாய். மற்ற விவரங்களுக்கு நான் எழுத வைத்த “அல்லாஹ்வும் மனிதனும்” என்ற நூலை படிக்கவும்.

21பிரார்த்தனை அவசியமா?

?
கேள்விஎனக்கு வேண்டியதை உன்னிடம் மட்டுமே பிரார்த்தித்து கேட்கும் படி சொல்லி இருக்கிறாயே (2:186)
۞
அல்லாஹ்ஆமாம். அதே வாசகத்தில் என்னுடைய அறிவுரையை கேட்டு அதன் படி செயல்பட்டால்தான் நீ கேட்டது கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறேனே அதை கவனிக்கவில்லையா? (அதனால் நீ நேர்வழி பெறுவாய்)
?
கேள்விஅப்போ நான் பிரார்த்தித்து கேட்பதை எல்லாம் நீ தர மாட்டாயா?
۞
அல்லாஹ்நிச்சயம் தருவேன். ஆனால் வெறும் வார்த்தை ஜாலங்களால் கிடைக்காது. உன் வேண்டுதலுக்கு ஏற்ப முயற்சியும் ஞானமும் அவசியம். எடுத்துக்காட்டு – உணவு தானியங்கள்.
?
கேள்விஅனைத்தையும் உழைத்தே பெற்றுக் கொள்ள முடியும் என்றால் உன்னிடம் ஏன் பிரார்த்திக்க வேண்டும்?
۞
அல்லாஹ்உழைப்பும் ஞானமும் இருந்தால் போதும் என்றால் என்னுடன் கூடிய தொடர்பு துண்டிக்கப்படும். (2:27) அதன் பின் நீ உன் மனோஇச்சைப் படி தான் செயல்படுவாய். இறுதி விளைவு வேதனை மிக்க வாழ்வுதான்.
?
கேள்விஅப்போ நீ என்னதான் சொல்ல வருகிறாய்?
۞
அல்லாஹ்“அர்ராஜிகு”வாக இருக்கும் நான் உணவளிப்பவன். ஆனால் நேரடியாக வானத்திலிருந்து உணவளிக்காமல் அதன் விளைச்சலுக்கு தேவேயான நீர், காற்று, சூரிய வெப்பம், மற்றும் பூமியின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன். அவற்றை பயன்படுத்தி உனக்குத் தேவேயான உணவு வகைகளை பயிரிட்டுக் கொள்ள வேண்டும்.
?
கேள்விஇதெல்லாம் எல்லோருக்கும் தெரியுமே!
۞
அல்லாஹ்அவ்வாறு உழைத்து பெற்ற வாழ்வாதாங்களை மக்கள் அனைவருக்கும் சரி சமமாக பங்கிட்டு அனைவருக்கும் கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும். மேல்கொண்டு விவரங்களுக்கு பிரார்த்தனையும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் என்ற நூலை எழுத வைத்தேன். அதை தேடி கண்டுபிடித்து படித்து உண்மைகளை அறிந்துக் கொள்ளவும்.

22பெண்கள் விவகாரத்தில் கோளாறு?

?
கேள்விஒருவர் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று 4:3இல் சொல்லி பெண்களுக்கு எதிராக அநியாயம் செய்துவிட்டாயே?
۞
அல்லாஹ்எதையும் மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்து சிந்தித்து படித்து ஆராயும் படி எத்தனை முறை சொல்வது? (பார்க்க: 2:121 மற்றும் 25:73) அதை நீ கவனிக்கவில்லையா? போர், கலவரம் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் அகதிகளாக தஞ்சமடைந்த (60:10) (Emergency period) பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களின் பாதுகாப்பு கருதி நான்கு பெண்கள் வரையில் மணந்துக் கொள்ளலாம் என்று தான் அறிவித்தேன். அதுவும் தற்காலிக ஏற்பாடு தான். அவர்களின் பாதுகாப்பிற்கு “மாற்று ஏற்பாடு இல்லை என்னும் பட்சத்தில்” என்று சொல்லி இருக்கின்றேனே அதை கவனிக்க தவறி விட்டாயே.
?
கேள்விமமறுமணம் செய்துக்கொள்ள முதல் மனைவியின் அனுமதியும் தேவை இல்லை என்கிறார்களே? உண்மையா?
۞
அல்லாஹ்இவை எல்லாம் நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஷரீஅத் சட்டங்கள் ஆகும். மனைவியரிடையே நீதமான முறையில் நடந்துக்கொள்ள முடியாது என்ற பயமுள்ளவர்கள் ஒரு மனைவி என்ற நிலையான சட்டப்படி இருந்துக் கொள்ளட்டும் என்று அறிவித்து இருக்கின்றேனே. (4:3) முதல் மனைவியின் அனுமதி தேவை என்று இதிலிருந்து உனக்கு புரியவில்லையா?
?
கேள்விமனைவி மற்றும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட

பெண்களோடு உடலுறவு கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று அறிவித்து இருக்கிறாயே, (23:6 & 70:30)

۞
அல்லாஹ்நான் அவ்வாறு கூறவே இல்லை. வெட்க ஸ்தலங்களை பேணிக் காப்பதைப் பற்றி தான் கூறி இருக்கிறேன். அதுவும் மருத்துவ சிகிச்சை போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில் பணிவிடை ஆட்களிடம் மர்ம உருப்புக்களை காட்டிக் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்று தான் சொல்லி இருக்கிறேன்.
?
கேள்விஒருவர் தன் மனைவியை பார்த்து “தலாஃக்”, “தலாஃக்,” “தலாஃக்” என்று மூன்று முறை சொல்லிவிட்டால் தலாஃக் – விவாகரத்து ஆகிவிடும் என்று நீ சொன்னாயா?
۞
அல்லாஹ்நான் எங்கும் அவ்வாறு சொல்லவே இல்லை. கணவன் மனைவி இடையே பிணக்கு உண்டானால் நடுவர்களை வைத்து தீர்த்துக் கொள்ளும் படி சொல்லி இருக்கின்றேனே (4:35) மேலும் விவரங்களுக்கு திருக்குர்ஆன் கூறும் தலாஃக் சட்டங்கள் என்ற நூலை எழுத வைத்துள்ளேன். அதை படித்து அதன் படி தீர்ப்பு கூறுங்கள்.
?
கேள்விபாகப் பிரிவினை விவகாரத்தில் ஏன் ஆண்களுக்கு இரு பங்கு பெண்களுக்கு ஒரு பங்கு என்று அறிவித்து பெண்களுக்கு எதிராக அநியாயம் செய்து விட்டாயே?
۞
அல்லாஹ்பொதுவாக என் வழிகாட்டுதலை பின்பற்றாத சமுதாயங்களில் ஆண் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். ஆண்கள் தான் சமுதாயத்தை வழிநடத்தி செல்வார்கள். பெண்கள் குடும்பம் மற்றும் பிள்ளைகளை பராமரித்து வருவார்கள். ஆண்களுக்கு சமுதாய பொறுப்பு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு இரு பங்கு என்று அறிவித்தேன். சொத்துக்களை அனுபவிக்க அல்ல.
?
கேள்விபெண்கள் வீட்டையும் பிள்ளைகளை பராமரிப்பதற்காக மட்டும் படைத்தாயா? அவர்கள் சமூக பணிகளில் பங்கெடுக்கக் கூடாதா?
۞
அல்லாஹ்நான் “நம்பிக்கை கொண்டவர்களே” என்று என் வேதத்தில் சொல்லும் போது அது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலரையும் குறிக்கும். ஆண்கள் செய்யும் அத்தனை சமூக பணிகளிலும் பெண்களாலும் பங்கெடுத்துக் கொள்ள முடியும் என்று 33:35இல் அறிவித்து இருக்கின்றேனே.
?
கேள்விகோஷா என்ற பெயரில் பெண்களுக்கு முகமூடி போட்டுக் கொள்ள சொன்னாயா?
۞
அல்லாஹ்நான் அவ்வாறு சொல்லவே இல்லை. பெண்கள் வெளியே வருகையில் தளர்ந்த ஆடைகளை அணிந்து தம் மார்புகளை முன்றாணைக் கொண்டு மூடி மறைத்து வரும்படிதான் சொன்னேன். (24:31)வெளியே செல்லக் கூடாது என்று சொல்லவும் இல்லை. முகத்தை மூடிக் கொள்ளவும் சொல்லவில்லை.

23அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்)

?
கேள்விநீ நாடியோர்க்கு மட்டும்தான் நேர்வழி காட்டுவாயாமே!
۞
அல்லாஹ்அதற்குள்ளே மறந்துவிட்டாயா? எத்தனை முறை சொல்வது? மனிதனுக்கு நான் முழு சுதந்திரத்தை அளித்துள்ளேனே. அதன் படி நேர்வழி பெற மனிதன் நாடினால் தானே அவனுக்கு நான் நேர்வழி காட்ட முடியும். (10:105&18:29) நேர்வழி பெற அவனுக்கு நாட்டமே இல்லை என்றால் நான் எப்படி நேர்வழி காட்ட முடியும்?
?
கேள்விபிள்ளையை பள்ளிகூடத்தில் சேர்த்தால் தான் பாடத்தை கற்றுத் தர முடியும் என்கின்றாயா? காஃபிர்கள் உள்ளத்தில நீ ஏன் முத்திரை இட்டுவிட்டாய்? (2:7)
۞
அல்லாஹ்“தம் உள்ளத்தில் திரை ஏற்பட்டுள்ளது” என்று அவர்களே அறிவிக்கும் போது (41:5) அவர்களுடைய சுதந்திரத்தில் நான் தலை இடுவதற்கில்லை. அதனால் நானும் அவர்களின் உள்ளத்தில் திரை ஏற்படுத்தி விட்டேன்.
?
கேள்விஇதென்ன அநியாயம்? அவர்கள் சிறிதளவாவது சிந்திக்க வேண்டாமா?
۞
அல்லாஹ்இப்போதாவது உண்மை புரிகிறதே. இதை மக்களுக்கு எடுத்துரைப்பது உன் கடமை (ஸலாத்) ஆகும். (5:67)
?
கேள்விஇவ்வாறு மக்களுக்கு எடுத்துரைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
۞
அல்லாஹ்அவர்களின் தீய செயல்களால் வேதனைகள் வந்தடையும் போது எங்களுக்கும் நேர்வழி கிடைத்திருந்தால் நாங்களும் சிறப்பாக செயல்ப்பட்டு இருப்போமே என்று புலம்பிக்கொண்டு இருப்பார்கள். (20:134) (மேலும் பார்க்க : 4:165, 5:19, 6:156-157, 7:172-173, 28:47, 39:56-58)
?
கேள்விஅது சரி. நீ நாடியோருக்கு அளவின்றி வாழ்வாதாரங்களை அள்ளி கொடுப்பாயாமே. (2:212)
۞
அல்லாஹ்உழைப்பிற்கேற்ப பலன் என்ற சட்டத்தை இவ்வுலகில் நடைமுறைப்படுத்தி இருக்கிறேன் (53:39) இதில் ஈமான் கொண்டவர்கள் ஈமான் கொள்ளாதவர்கள் என்ற பாகுபாடு கிடையாது (17:18-20)
?
கேள்விஉன் வேதத்தில் அறிவுரைகளை ஒரே சீறாக சொல்லாமல் இங்கும் அங்குமாக சிதரிக் கிடக்குதே ஏன்?
۞
அல்லாஹ்கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உலகப் படைப்புகள் மற்றும் வரலாற்று ஆதாரங்களுடன் வேத உண்மைகளை அறிவித்தேன். இதனால் புரிந்துக் கொள்ள உனக்கு சிரமமாக இருக்கு.
?
கேள்விஇப்போது நான் என்ன செய்ய?
۞
அல்லாஹ்என் அறிவுரைகள் மற்றும் கொள்கை கோட்பாடுகளை தலைப்பு வாரியாக பிரித்து ஒவ்வொரு தலைப்பிலும் வேத நிலைப்பாடு என்னவென்பதை கண்டறிந்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். (73:4)
?
கேள்விஉதாரணத்திற்கு ஒரு சில தலைப்புகளை எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும்.
۞
அல்லாஹ்நீதித் துறை, திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள், பாகப் பிரிவினை, பொதுப்பணி போன்ற தலைப்புகளை பிரித்து (Classified Qur’an) அறிவிக்கலாம்.
?
கேள்விஇவ்வாறு யாராவது தலைப்பு வாரியாக பிரித்து எழுதி இருக்கிறார்களா?
۞
அல்லாஹ்என்னுடைய அடியார் ஒருவரை வைத்து திருக்குர்ஆன் கூறும் வாழ்வியல் என்ற நூலை வெளியிட வைத்துள்ளேன். அதை

வாங்கி படித்து அதன்படி வாழ்ந்து உன் சுவன வாழ்வை ஈட்டிக்கொள்.

?
கேள்விஏதோ வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து அறிவுரைகளை செய்வதாக சொன்னாயே. அது எதற்கு?
۞
அல்லாஹ்நபிமார்கள் மற்றும் என் தூதர்கள் (ரசூல்கள்) சமுதாய சீர்கேடுகளை நீக்க அயராது எடுத்துக் கொண்ட முயற்சி - அதைத் தொடர்ந்து சுயநலவாதிகளின் எதிர்ப்பு; அதை எதிர்கொள்ள அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி என்பது போன்ற உண்மைகள் இன்றைய காலக் கட்டத்தில் வாழும் இளைஞர்களுக்கும் சிந்திப்பவர்களுக்கும் படிப்பினையாகவும் உபதேசமாகவும் இருக்கும். (2:66) (3:137-138) (14:52)

24அவுலியாக்களின் உண்மை நிலை?

?
கேள்விஆமாம் அவுலியாக்கள் எனப்படுபவர்கள் யார்?
۞
அல்லாஹ்யார் நான் அறிவித்த வழிகாட்டுதலை உளமாற ஏற்று அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் நான் (அவுலியா) உற்ற நண்பனாவேன் பாதுகாவலனாவேன். (2:257)
?
கேள்விஅப்படி பாதுகாவலனா இருப்பதாக தெரியவில்லையே! உலகில் முஸ்லிம்கள் துயரத்தில் சிக்கி இருப்பதைத் தானே நான் பார்க்கிறேன் ?
۞
அல்லாஹ்வஹீ மூலம் அறிவித்ததை மட்டும் பின்பற்றி செயல்படும்படி நான் அறிவுருத்தி இருக்கிறேனே! அதை தவிர்த்து மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என்று நம்பி மோசம் போகாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யவில்லையா?(7:3) மேலும் வஹீச் செய்திகளை சதா ஓதிக்கொண்டு இருந்தால் என்ன பலன் கிடைக்கப் போகுது?
?
கேள்விஉன்னை தினம் தினம் தியானித்து உன்பாதையில் மரித்த மஹான்கள் எல்லாம் இறப்பதில்லை. என்றென்றும் உயிருடன் இருப்பதாக நீ சொன்னதாக கேள்வி பட்டேனே அதெல்லாம் உண்மை

இல்லையா?

۞
அல்லாஹ்நான் காட்டிய வழியில் செயல்பட்டு மார்க்கத்தை நிலைநாட்ட பாடுபட்ட வீரர்கள் கொல்லப்பட்டால் அவர்களை மரணித்ததாக சொல்லாதீர்கள் என்று தான் அறிவித்து இருக்கிறேன். (2:154) அத்தகையவர்களுடைய வாழ்வு இறந்த பின்பும் மலரும் என்று தான் சொன்னேன்.
?
கேள்விமார்கத்தை நிலைநாட்டுவதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது? மக்களின் நன்மைக்காகத் தானே மார்க்கம்?
۞
அல்லாஹ்சமுதாயத்தில் மார்க்கத்தை நிலைநாட்டினால் சுயநலக்கார கூட்டத்திற்கு பிடிக்காது. எனவே அது எதிர்த்து நிற்கும். (3:135) அந்த எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது சமுதாயத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் தலைவருக்கு (நபிக்கு) ஆதரவாக படைவீரர்கள் பல துயரங்களுக்கு ஆளானார்கள் (3:!46) அத்தகையோரைப் பற்றிதான் நான் குறிப்பிட்டேன் (2:154)
?
கேள்விஅத்தகைய உன் நேசர்களாகிய அவுலியாக்களுக்கு நீ அளிக்கும் சன்மானம் என்ன?
۞
அல்லாஹ்மிக்க பயபக்தியுடன் செயல்படும் வீரர்களின் (அவ்லியாக்கள்) வாழ்வில் துயரமோ துக்கமோ அச்சமோ நெருங்காது (10:62) அவர்களின் தற்காலிக வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் உலகத்தை விட்டு பிரிந்த பின் தொடரும் வாழ்வும் சந்தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும். இது என் வாக்கு ஆகும். அதில் எக்காலத்திலும் மாறுதல் ஏற்படாது (10:63 &64)
?
கேள்விஅத்தகைய மஹான்களின் புதைவிடத்திற்குச் சென்று நம் கோரிக்கைகளை வைத்தால் நீ நிறைவேற்றித் தர மாட்டாயா?
۞
அல்லாஹ்இறந்தவர் இறந்தவர்தான். இவ்வுலகில் தங்கி இருக்கப் போவதில்லை (16:20) உங்கள் கோரிக்கைகள் அவர்கள் காதுகளுக்கு எட்டவும் எட்டாது. (46:5) அவர்களிடமிருந்து பதிலும் கிடைக்காது (7:194) அவர்கள் உங்களுடைய கோரிக்கையை எப்படி என் வரை கொண்டு வர முடியும்?
?
கேள்விஅவுலியாக்கள் உன் நேசர்கள் தானே. அவுலியாக்கள் மூலமாக உன்னிடம் தானே கேட்கிறோம். அவ்வாறு கேட்பதில் என்ன தவறு இருக்கப் போகுது?
۞
அல்லாஹ்உன் உள்ளத்தில் ஊடுவிச் செல்லும் எண்ணங்களையும் அறிந்துக் கொள்ளும் பேராற்றல் உடையோம் நாம். (39:7) ஏனெனில் உன் நாடி நரம்பை விட அருகாமையில் இருப்பவன் நான் (50:16) உண்மை இவ்வாறு இருக்கும் போது இடையில் அவுலியா எதற்கு?
?
கேள்விநாங்கள் எல்லாம் பாவிகள். அதனால் நீ கேட்கமாட்டாய். எனவே உன் நேசர்கள் (அவுலியாக்கள்) மூலமாக கேட்டால் நீ தருவாய் என்று பலர் சொல்கிறார்கள். இது தவறா?
۞
அல்லாஹ்இதெல்லாம் பணம் சம்பாதிப்பதற்காக தர்காவாசிகள் கஷ்டத்தில் வாடும் ஏழை எளியோர்களை ஏமாற்றி பிழைக்கும் வித்தையே ஆகும். அவ்வாறு ஈட்டிய செல்வங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை நெருப்பில் காய்ச்சி அவர்களின் முதுகளிலும் நெற்றியிலும் விலாப் புறங்களிலும் சூடு போடப்படும் (10:35&35)

நீ ஏன் பாவியாக இருக்கிறாய்? என் அறிவுரைப்படி வாழ்ந்து நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழு. உனக்கு என் புறத்திலிருந்து என்ன அநியாயம் நடக்கப் போகுது? (4:40)

25அல்லாஹ் ஒருவனே

?
கேள்விநீ ஒருவனாக இருக்கையில் திருக்குர்ஆனில் ஏன் “நாம்” என்றும் “எழுப்புவோம்” என்பது போன்ற பன்மை பதங்களை பயன்படுத்துகிறாய்?
۞
அல்லாஹ்நானும் நான் ஏற்படுத்திய நிர்வாக ஏற்பாடுகள் (Functioning Systems) சார்பாக அறிவிக்கும் போது அவ்வாறுதான் சொல்ல முடியும்
?
கேள்விஇது எனக்கு புரியவில்லை. சற்று விவரமாக சொன்னால் நன்றாக இருக்கும்.
۞
அல்லாஹ்நீயும் ஒரு நிர்வாகத்தின் முதலாளியாக இருந்தும் மற்றவர்களுக்கு கடிதம் எழுதும் போது நாம் என்ற பதத்தையே பயன் படுத்துகிறாய் அல்லவா? அது போலத் தான் இதுவும்.
?
கேள்விஅல்லாஹ் ஒருவனே என்பதை எவ்வாறு புரிந்துக் கொள்வது?
۞
அல்லாஹ்நான் அனைவருக்கும் ஒரே சீராக சரிசமமான முறையில் நடத்துபவன். ஆளுக்கு ஒரு சட்டம் ஒரு விதிமுறை ஆளுக்கு தகுந்தார் போல் அணுகுமுறை என்பதெல்லாம் என்னிடம் கிடையாது. அனைவருக்கும் ஒரே அல்லாஹ் தான்.

26ஜிஹாத் எனும் அறப்போர்?

?
கேள்விஜிஹாத் என்ற அறப்போர் என்றால் என்ன?
۞
அல்லாஹ்நான் காட்டிய வழியில் சமுதாய நலனுக்காக பாடுபடுவது ஜிஹாத் ஆகும். சமுதாயத்தில் நலிந்த மக்களின் துயர்துடைப்புக்காக தான் ஈட்டிய செல்வத்தை அர்பணிப்பது ஜிஹாத் ஆகும். இத்தகையோரே சமுதாயத்தின் உயர்நிலைக்கு செல்ல தகுதியுடையவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு நான் மகத்தான வெற்றிக்கு வழிவகுப்பேன் (பார்க்க – 9:20)
?
கேள்விகாஃபிர்களை வெட்டுங்கள் என்று நீ வேதத்தில் சொல்லி இருக்கிறாயா?
۞
அல்லாஹ்உலக மக்களுக்கு நான் முன்மொழிந்த மார்க்கம் இஸ்லாம் என்பதாகும். (3:19) அதாவது ஒட்டுமொத்த சமுதாய மக்களின் நலன் காத்தல் என்பதாகும். இதை தவிர்த்து வேறு எந்த மார்கத்தை பின்பற்றினாலும் அது நான் உருவாக்கிய விதிமுறைக்கு மாற்றமானதாகும். அதனால் இவ்வுலகில் நிலைத்து நிற்காது. இறுதியில் அச்சமுதாயம் மிகப் பெரிய நஷ்டத்தில் தான் இருக்கும் (3:85)
?
கேள்விமிக மிக அழகான உன் செயல் திட்டம் என்பதை தான் ஓப்புக்கொள்கிறேன். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே. காஃபிர்களை வெட்டுங்கள் என்று ஏன் சொன்னாய்? (9:5) (47:5)
۞
அல்லாஹ்சமுதாய சமன்பாட்டையும் சாந்தியையும் ஏற்படுத்த பாடுபடும் கூட்டம் ஓரு புறம். அதை கெடுக்க துடிக்கும் சாத்தானிய கூட்டம் மறுபுறம். (4:76) சமுதாய நலனை சீரழிக்கும் கூட்டத்தை விட்டு வைப்பீர்களா? அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தானே சமூக நலத்திட்டங்களை வேகமாக நிறைவேற்ற முடியும். அதனால் தான் அவர்களை வெட்டி சாய்க்க அனுமதி அளித்தேன். (2:191) (9:111)
?
கேள்வி9:111 வசனத்தில் ஏதோ வியாபாரம் செய்வதாக சொல்லி இருக்கிறாயே என்ன வியாபாரம்?
۞
அல்லாஹ்வியாபாரம் என்பது கொடுக்கல் வாங்கல் ஆகும். என் பாதையில் நீர் போராடினாலோ அல்லது போரிட்டாலோ அதற்கு பகரமாக சுவன வாழ்வை அளிப்பேன். இவை காலம் காலமாக நடப்பவையே ஆகும்.
?
கேள்விஅதனால் தான் முஜாஹிதீன்கள் போரில் இறந்தால் சொர்க்கம் என்று சிப்பாய்களை ஏமாற்றுகிறார்களா?
۞
அல்லாஹ்அதெல்லாம் நாட்டை ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துவதற்காகவும் அடிமைப் படுத்துவதற்காகவும் கொள்ளை அடிப்பதற்காகவும் செய்யும் போர் ஆகும். அதற்கெல்லாம் என் ஆதரவு கிடைக்காது.
?
கேள்விஇப்போதெல்லாம் அநியாயம் அக்கிரமம் செய்யும் நாடுகளே வெற்றி பெறுகின்றதே.
۞
அல்லாஹ்அதெல்லாம் தற்காப்பு விஷயத்தில் மெத்தனப் போக்குள்ள பலவீனமான நாடுகளை மட்டுமே தாக்கி வெல்ல முடியும். பலம் வாய்ந்த நாடுகளை ஒன்றும் செய்ய முடியாது.
?
கேள்விகொலைக்காக பழி தீர்த்துக்கொள்வதை கடமை ஆக்கியிருக்கிறாயே?(2:178) இது எப்படி நியாயமாகும்.
۞
அல்லாஹ்ஃகிஸாஸ் قصاص என்ற அரபி வார்த்தைக்கு பழி தீர்ப்பது என்று தப்பா மொழி பெயர்த்து இருக்கிறார்கள். கொலைக் குற்றங்களுக்குத் தக்க தண்டனை அளிப்பதை நான் கடமை ஆக்கினேன். (5:45)
?
கேள்வியார் வேண்டுமானாலும் பழிக்கு பழி வாங்கலாமா?
۞
அல்லாஹ்முற்றிலும் தவறான கருத்தாகும். இதெல்லாம் நீதி மன்ற விவகாரங்களாகும். அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனை அளிக்க நீதி மன்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
?
கேள்விஉன் ஆதரவு யாருக்கு கிடைக்கும்?
۞
அல்லாஹ்நான் அறிவித்த இஸ்லாம் எனும் ஒட்டு மொத்த சமுதாய நலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் பாடுபடும் நாடுகளுக்கே என் ஆதரவு.
?
கேள்விஇஸ்லாத்தில் ஐந்து கடமைகள் என்று சொல்கிறார்களே. சரியா?
۞
அல்லாஹ்நான் அறிவித்த மற்ற கடமைகளைப் பற்றி நீ கவனித்துப் பார்க்க மாட்டாயா? 24ஆவது அத்தியாயத்தையே கடமை ஆக்கி இருக்கின்றேனே (24:1) அதை கவனிக்கவில்லையா? அத்தனை ஏன்? ஒட்டு மொத்த குர்ஆனின் கொள்கை கோட்பாட்டினையே கடமை ஆக்கி இருக்கின்றேனே (28:85) அதை நீ கவனிக்கவில்லையா? உன் வசதிக்கு ஏற்ப ஐந்து கடமைகள் என்று சுருக்கிவிட்டால் யாருக்கு நஷ்டம்?

27: “அல்லாஹ்வுக்காக” செயல்படுவது ?

?
கேள்விவானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் உனக்காக ஸஜ்தா செய்வதாகவும் (16:49) தஸ்பீஹ் ஓதுவதாகவும் (57:1) சொல்லி இருக்கிறாயே?
۞
அல்லாஹ்நான் யாதொரு தேவையுமற்றவன். நான் யாரையும் சார்ந்து இல்லை. (அல்லாஹுஸ் ஸமது) (112:2) எனக்கு நிகர் நானே. (112:4) எனக்காக யாரும் எதையும் செய்ய இயலாது.
?
கேள்விபின்னே அல்லாஹ்வுக்காக என்பதை எவ்வாறு புரிந்துக் கொள்வது?
۞
அல்லாஹ்அகிலத்தில் உள்ளவை அனைத்தும் எனக்கு கட்டுப்பட்டு செயல்படும் போது “அல்லாஹ்வுக்காக” என்று சொல்வது முற்றிலும் தவறான மொழியாக்கம் ஆகும். நான் ஏதோ யாரையோ சார்ந்து இருப்பது போல் பொருள் ஆகிவிடுகிறது அல்லவா?
?
கேள்விஎது சரியான மொழியாக்கம்?
۞
அல்லாஹ்அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க – அறிவுரைக்கு இணங்க – வழிகாட்டுதலுக்கு இணங்க என்று மொழியாக்கம் செய்வதே என் அளவற்ற வல்லமைக்கு சான்றாக விளங்கும்.
?
கேள்விஅப்போ முஸ்லிம்கள் நிரைவேற்றி வரும் கடமைகளை “அல்லாஹ்வுக்காக” செய்வதாக சொல்கிறார்களே. இது சரி இல்லையா?
۞
அல்லாஹ்எப்படி சரியாகும்? நான் விதித்த கடமைகள் யாவற்றையும் நிரைவேற்றி வந்தால் அவர்களுக்குத் தான் நன்மைகள்

கிடைக்கும். எனக்கு என்ன வேண்டி இருக்கு?

?
கேள்விஇதை சற்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்!
۞
அல்லாஹ்உலகிலுள்ள எந்த சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரியே. யாரெல்லாநம் என் வழிகாட்டுதலை ஏற்று ஆற்றல் மிக்க நற்செயல்களை செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் நான் விதித்த விதிமுறைகளின் படி நற்பலன்கள் சன்மானங்களாக கிடைத்து வரும். அவர்களுடைய வாழ்வில் துயரமோ துக்கமோ நெருங்காது. (2:38) (2:62) இது போன்ற வசனங்கள் திருக்குர்ஆன் மூலம் பல முறை அறிவித்து இருக்கிறேன்.
?
கேள்விஅது சரி. ஏதோ உனக்காக “தஸ்பீஹு” செய்வதாக பல அத்தியாய தொடக்கத்தில் சொல்லி இருக்கிறாயே. உலக படைப்புகளிடம் ஜப மணிகள் இருக்கின்றதா?
۞
அல்லாஹ்“ஸபஹா” என்றால் நீந்துவது (36:40) ஒதுக்கப்பட்ட கடமைகளை செவ்வன நிறைவேற்றுவது (73:7) என்பது போன்ற அர்த்தங்களில் வரும். நான் விதித்த கடமைகளை நிரைவேற்ற விருப்பமில்லாமல் மனிதன் கையில் ஜபமணியை வைத்துக்கொண்டு உருட்டிக் கொண்டு இருக்கிறான். அவ்வாறு செய்வதால் என்னை அவன் பணியவைக்க முடியுமா? (11:80) (29:22) இன்னும் பல.

28“ரூஹ்” வைப் பற்றிய உண்மைகள்

?
கேள்விரூஹ் என்றால் என்ன?
۞
அல்லாஹ்உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் பிறப்பு முதல் இறப்பு வரை சரீரத்தில் இயங்கி வரும் ஆற்றல் தான் ரூஹ் என்பதாகும்.
?
கேள்விசற்று விவரமாக கூறினால் நன்றாக இருக்கும்.
۞
அல்லாஹ்அதாவது பார்வைப் புலன் செவிப் புலன் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியன ரூஹ்வில் அடங்கும்.
?
கேள்விஇதை மனிதனுக்கு அளித்ததாக 32:9இல் கூறி இருக்கிறாயே.
۞
அல்லாஹ்மனித இனத்திற்கு அளித்ததை போல் மற்ற உயிரினங்களுக்கும் அளித்து இருக்கிறேன். (24:41) (16:67&68) ஆனால் மற்ற உயிரினங்களுக்கு அளிக்கப்பட்ட ஆற்றல் குறுகிய வட்டறைக்குள் இருக்கும். அவற்றிற்கு வஹீ எனும் வழிகாட்டுதல்கள் அதனதன் உடலமைப்பிலேயே பொருத்தி விட்டேன். அதன்படியே அவை அனைத்தும் வாழ்ந்து வரும்.
?
கேள்விமனிதனுக்கு அளிக்கப்பட்ட “ரூஹ்” எனும் ஆற்றலை பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
۞
அல்லாஹ்மற்ற உயிரினங்களுக்கு அளிக்கப்பட்டது போலவே மனிதனுக்கும் சரீர தேற்றங்கள் இருக்கும். அதாவது பசி, தாகம், சுவாசம், பிறப்பு, இறப்பு இனப் பெருக்கம் என எல்லாமே இருக்கும். இவை அனைத்தும் என் கட்டுப்பாட்டிற்குள் இயங்கக் கூடியவை. அதற்கும் ஒரு படி மேலாக சிந்தித்து சுயமாக செயலாற்றும் திறமை மனிதனுக்கு அளித்துள்ளேன். அதற்காக கல்வியறிவு பெற ஏற்பாடுகளையும் செய்நு இருக்கிறேன். கல்வியை பயில்வதற்காக பல்வேறு மொழிகள் மற்றும் அவற்றின் எழுத்து வடிவத்தையும் அளித்து இருக்கிறேன். (96:4&5)
?
கேள்விஇதெல்லாம் சரி. மனிதனுக்கு பிரத்யேகமாக அளிக்கப்பட்ட “ரூஹ்”வைப் பற்றிய உண்மை என்ன? (17:85)
۞
அல்லாஹ்மனித இனத்திற்கு தனிச் சிறப்பு மிக்க ஆற்றலானது மனித வாழ்விற்கு உயிரோட்டம் அளிக்கும் என்னுடைய வேத அறிவுரைகள் எனும் “ரூஹ்” ஆகும். (16:102)
?
கேள்விஇந்த “ரூஹ்” எனும் அறிவுரைகளின் பயன்கள் யாவை?
۞
அல்லாஹ்நான் மனிதனுக்கு அளித்த உலக படைப்புகளை ஆராய்ந்து அறிந்து செயல்படக் கூடிய ஆற்றல்கள் ஒருபுறம். (2:31) என்னுடைய ரூஹ் எனும் வழிகாட்டுதல்கள் அடங்கிய வேத அறிவுரைகள் மறு புறம், இவை இரண்டும் ஒருகிணைந்து செயல்பட்டால் மனித ஆற்றல்கள் சரியான திசையில் வேகமாக வளர்ந்து நான் படைத்த மலக்குகளின் உதவியும் கிடைத்து தலைசிறந்த சமுதாயம் உருவாகும். (41:30&31)

28மனசாட்சியே உன் நிலைப்பாடு என்ன?

?
கேள்விஆமாம். மனசாட்சி படி நடந்துக் கொண்டாலே போதும். எல்லாமே சீராகி வரும் என்று பலர் சொல்ல கேள்விபட்டு இருக்கிறேன். இது சரியா?
۞
அல்லாஹ்சிந்திக்கும் ஆற்றல், அறிவாற்றல், உள்ளம், மற்றும் சரீர தேற்றங்களாகிய சுவாசம், பசி, தாகம், பாலியல் போன்ற உணர்வுகள், இவற்றை நிறைவேற்ற துடிக்கும் மனம் ஆகியன மனித படைப்பில் இயங்கி வரும் உணர்வுகளாக இருக்கின்றன. இவற்றை இயக்க வைக்கும் மூளை, இருதயம் மற்றும் நரம்பு மண்டலங்கள் (Nervous System) ஆகியவை மற்ற உடல் உருப்புக்களையும் இயக்க வைக்கும் சக்திகளாகும். இவை யாவும் என் மனித படைப்பின் அம்சங்களாகும்.
?
கேள்விஇதெல்லாம் சரி. என் கேள்விக்கு பதில் இது அல்லவே.
۞
அல்லாஹ்உன் கேள்வி சற்று விசாலமானது. பொறுமையுடன் ஆர அமர படித்து தெரிந்துக் கொள்ள வேண்டி விஷயமாகும்.
?
கேள்விஅப்படியே செய்கிறேன். உன் நேர்வழி பெற எனக்கு வேறு வழி இல்லை.
۞
அல்லாஹ்சரி. கவனமாக படிக்கவும். மனித மனம் மூன்று நிலைப்பாடுகள் கொண்டதாக இருக்கும். அவை (1) நஃப்ஸெ அம்மாரா نفس لاممارۃ (12:53) (2) நஃப்ஸெ லவ்வாமாنفس اللوامۃ (75:2) மற்றும் (3) நஃப்ஸெ முத்மயின்னா الننفس المطم‏ئنۃ(89:27) ஆகும். அதில் முதல் வகை நஃப்ஸெ அம்மாரா – அறிவாற்றல் இருந்தும் மனிதனை மனோ இச்சை எனும் உணர்வுகளுக்கு அடிமையாக்கி தீய செயல்களில் ஈடுபட வைக்கும். இரண்டாம் வகை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்படும் மனோ நிலை (Transition period) ஆகும். நன்மை தீமை ஆகிய இரண்டிலும் செயல்பட வைக்கும். மூன்றாம் வகை – தெளிவு பெற்று நிம்மதியோடு செயல்படும் மன நிலை. (Stage of complete mental appeasement) (13:28)
?
கேள்விஅது சரி. நஃப்ஸ் என்றால் ஆன்மா என்று எழுதி இருக்கிறார்களே.
۞
அல்லாஹ்அதெல்லாம் ஆன்மீக வழிபாட்டில் மூழ்கி இருந்தவர்கள் குர்ஆனுக்கு எதிராக செய்த சதி திட்டமாகும். நஃப்ஸ் என்ற வார்த்தை பிரதிப்பெயருடன் (Pronoun ) வந்தால் I Myself நானே, we ourself எங்களுக்கு நாமே they themselves அவர்கள் தமக்குத் தாமே என்பது போல நஃப்ஸ் என்ற அரபி வார்த்தைக்கும் பொருள் படும். எடுத்துக்காட்டாக 2:57 அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே انفسهم தீங்கிழைத்துக் கொண்டார்கள். அது போல் மற்ற இடங்களிலும் நப்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் வரும். என்னுடைய செயல்திட்டத்தில் “ஆன்மா”வுக்கு எந்த வேலையும் இல்லை.
?
கேள்விஆன்மா என்றால் என்ன?
۞
அல்லாஹ்எனக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர்கள் உருவாக்கிய தெய்வ வழிபாட்டின் மூலம் கிடைப்பதாக சொல்கின்ற மகத்துவத்தை ஆன்மா என்பார்கள். அதில் அணு அளவும் உண்மை கிடையாது
?
கேள்விஅது சரி. மனசாட்சியின் நிலை என்ன?
۞
அல்லாஹ்என் வழிகாட்டுதலை பின்பற்றாத சமுதாய மக்களிடைய சிந்தனை மற்றும் அறிவாற்றல் இருந்தும் மனோ இச்சை எனும் உணர்வுகளுக்கு அடிமையாகி சுயநலத்துடன் செயல்பட வைக்கும் மன நிலை. (மனம் + ஆட்சி) மனசாட்சி (45:23)

நஃப்ஸெ லவ்வாமா எனும் இரண்டாம் வகை. என் வழிகாட்டுதலை பின்பற்றும் முயற்சியில் நடு நிலைமை (Transition period) வகிக்கும் நிலை ஆகும். இது சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் மனிதனை நன்மை தீமை ஆகிய இரண்டையும் செயல்பட வைக்கும் நிலை.

என் வழிகாட்டுதலை முழுக்க முழுக்க பின்பற்றும் சமுதாய மக்களின் தெளிந்த மன நிலைதான் மூன்றாம் வகை நஃப்ஸெ முத்மயின்னா (13:28) (மனம் + சாட்சி)

?
கேள்விஅப்போ வெறுமனே மனசாட்சி படி நடந்துக் கொண்டால் போதும் என்ற பேச்சு மிகவும் ஆபத்தானதாக இருக்கே. இதிலிருந்து மீள என்ன வழி?
۞
அல்லாஹ்சிறு வயதிலிருந்தே மாணவ மாணவிகளுக்கு திருக்குர்ஆன் மூலம் நான் அறிவித்த வழிகாட்டுதலை கற்றுக் கொடுத்து நல்ல பொறுப்புள்ள பிள்ளைகளாக ஆக்குவது கல்வி நிலையங்களின் தலையாய கடமை ஆகும். இதை தவற விட்டால் மாணவர்கள் வளர்ந்து வாலிப வயதை அடைந்த பருவத்தில் அறிவாற்றல் இருந்தும் மனோ இச்சைக்கு (சுயநலத்திற்கு) அடிமையாகி சமுதாயத்தையும் நாட்டையும் சீரழிக்கும் காரணிகளாக ஆகிவிடுவார்கள்
?
கேள்விநப்ஸெ லவ்வாமாவுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருவீரா?
۞
அல்லாஹ்நாட்டுக்கு நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டு குடி குடியை கெடுக்கும் என்று விளம்பரமும் செய்து விட்டு அரசாட்சியே போதை தரும் சாராயத்தை விநியோகித்து லட்சோ லட்ச குடும்பங்களை சீரழிக்கின்றதே இந்த ஒரு உதாரணம் போதாதா?
?
கேள்விஇன்னும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாமா?
۞
அல்லாஹ்தாராளமாக கேட்கலாம். ஆனால் நீங்கள் கடைப்பிடித்து வரும் சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி கேட்டால் என் வேதத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்காது.(5:101)

ரூஹ் – எ – இஸ்லாஹ்

மனித ஆற்றல்களின் சீர்த்திருத்தம்